இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Saturday, July 24, 2021

கௌரவத்திற்கு அப்பால் பிள்ளைகளின் திறமையில் முதலீடு செய்திடுங்கள் ..................... !

 

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களது அன்றாட வருமானம், சேமிப்பு அனைத்தையும் செலவு செய்கின்றனர். அதேபோல பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே அதிகம் தான்.
இதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது, கல்வியின் நோக்கம் தாண்டிஇன்று பெறுபேற்று அடிபடயிள்ளன அடைவு மாத்திரம் தேவை என்கிற நிலைமையில் ஆளுமை வருதிக்கு அப்பால் அந்தஸ்தை நோக்கிய வகையில் பிள்ளைகளையும் உயர் படிப்புகள் வரை படிக்க வைக்க கங்கணம் கட்டப்படுகின்றது இதற்காக தங்களது தலையையும் அடமானம் வைக்க பெற்றோர்கள் துணிகிறார்கள். அப்படி செலவு செய்யத்துணிவதற்கான முக்கியக் காரணம் நன்றாக படிக்க வைத்துவிடுவது பெற்றோர்களின் கடமை என நினைக்கிறார்கள். மேலும் படித்தால் பிள்ளைகள் நம்மைப்போல கஷ்டப்பட தேவையில்லை எனவும் பெற்றோர்கள் நம்புகிறார்கள். இதில் தவறில்லை.

 


  இந்த முடிவிற்கு வந்தபிறகு பாடசாலையை  தேர்வு செய்யும் வேலைகளில் இறங்குகிறார்கள். இங்கு தான் பிரச்சனையே வருகிறது. அப்படி பாடசாலையை தேர்வு செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுக்கு தெரிந்த வட்டத்தில் இருக்கும் வருமானத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோரின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என கவனிக்க துவங்குகிறார்கள். அந்த பாடசாலையை அல்லது அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பாடசாலையில்  தங்களது பிள்ளையை எப்படியேனும் சேர்த்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ற பாடசாலையையில் அவர்கள் சேர்த்திருக்கிறார்கள் நாம் நமது வருமானத்திற்கு ஏற்ற பாடசாலையில் சேர்ப்போம் என பெற்றோர் நினைப்பது இல்லை. இதற்கு நமது பிள்ளையும் நன்றாக வந்து விடுவான் என்ற நம்பிக்கை ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது “பெருமை” அல்லது “மரியாதை” அல்லது “கௌரவம்” என்ற உருப்படாத காரணங்களுக்காக இருக்கலாம். 

 

பள்ளிகளுக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?

உங்களுக்கு வருமானம் இருந்தால் எந்த பாடசாலையில் வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம் தவறில்லை. ஆனால் பாடசாலைய மட்டுமே சாதனையாளர்களையும் வெற்றியாளர்களையும் உருவாக்கிவிடுவது இல்லை என்பதை தெரிந்துகொண்டு நீங்கள் பாடசாலையை பெரும் தொகையை செலவு செய்திடுங்கள் என்பதே எனது கருத்து. மிக சாதாரணமான அரசாங்க பாடசாலைகளில் படித்து வந்தவர்கள் கோடிபேர் இன்று பெருமைமிகு பணிகளில் கொடிகட்டி பறக்கிறார்கள். நீங்கள் சேர்க்க துடிக்கும் பாடசாலையில் படித்த அத்தனை மாணவர்களும் சாதித்து விட்டார்களா என பாருங்கள், நிச்சயமாக இருக்காது . கல்வியில் மேலோங்கியுள்ள பாடசாலை என நீங்கள் விரும்புகின்ற பாடசாலைகளில் சில விசயங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. நாம் உங்களது பிள்ளைகளை அவ்வாறானா பாடசாலைகளில் சேர்க்க வேண்டாம் சொல்ல வரவில்லை மாறாக பாடசாலையை  தேர்ந்தெடுக்கும் போது அதற்கு ஆகப்போகிற செலவையும் கருத்தில் கொள்ளுங்கள் மற்றும் பாடசாலை மட்டுமே உங்களது பிள்ளைகளை சாதிக்க வைப்பதற்கு போதுமானது இல்லை என்பதை உணருங்கள்.

நான் இந்தப்பதிவில் முதலீடு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். வியாபாரத்தில் லாபத்தை நோக்கி செய்யப்படுவது தான் முதலீடு என்பதனை நான் அறிவேன். அதேபோல பிள்ளைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பெற்றோர்கள் செலவு செய்கிறார்கள், எதிர்கால பலனை அடிப்படையாகக்கொண்டு அல்ல என்பதையும் நான் அறிவேன். இங்கே முதலீடு என்பதற்கு செலவு செய்கின்ற தொகை மட்டுமல்ல பிள்ளைகளின் எதிகால மீள் திரும்பல் வீதம் (higher rates of Return ) என்பதனையும்  எண்ணிக்கொள்ளுங்கள்

முதலீடு சரியான முறையில் இருக்க வேண்டும்

பெற்றோர்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் பிள்ளைகளின் கல்விக்காக முதலீடு செய்கிறீர்கள். அது தவறு அல்ல. நாம் பட்ட கஷ்டத்தை நமது பிள்ளை படக்கூடாது என நினைத்துதான் கூலி வேலை செய்கிறவர் கூட தனது பிள்ளையை பெருமைமிகு பாடசாலைகளில் படிக்க வைக்க முயல்கிறார். தனது பிள்ளைக்கு நல்ல பாடசாலையில் கல்வி கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்,தவறில்லை. ஆனால் நான் இங்கு சொல்ல வருவது வேறு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதேபோல உலகில் பல்வேறு வகைப்பட்ட வேலைகளும் இருக்கின்றன, தொழில்களும் இருக்கின்றன. 

 


நாம் அனைத்து குழந்தைகளையும் ஒரே போட்டியில் பங்கேற்க வைக்கிறோம். அதாவது மனப்பாடம் செய்தல் என்ற ஒரு திறனை வைத்து மட்டுமே செயல்படும் பாடசாலைகளுக்கு நமது பிள்ளையை செலவு செய்து அனுப்புகிறோம். பணம் படைத்தவர்கள், கூடுதலாக வேறு சிறப்பு வகுப்புகளிலும் சேர்த்துவிடுகிறார்கள். சாதாரண குடும்ப பின்னனி கொண்ட மாணவர் மனப்பாடம் செய்தலில் சிறந்தவனாக இருந்தால் அவன் வெற்றி பெற்று மிகப்பெரிய அதிகாரியாக மாறுகிறான். கூலித்தொழிலாளியின் மகன் சாதனை என நாமும் சந்தோஷமடைகிறோம். ஆனால் சாதிக்காமல் விட்ட, இருந்த சேமிப்பையும் குழந்தையின் படிப்பில் போட்டுவிட்டு அதோகதியாகக்கிடக்கும் பெற்றோர்களை நாம் கவனிப்பது இல்லை. அவர்களின் எண்ணிக்கையே அதிகம். 

 

சரி, என்ன செய்யலாம்? பாடும் திறனுள்ள குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்ப்பது போல, கம்ப்யூட்டர் திறனுள்ளள குழந்தையை கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ப்பது போல தனது குழந்தைக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை அவர்கள் கற்றுக்கொள்ள பெற்றோர்கள் தங்களது சேமிப்புகளை செலவு செய்திட முன்வர வேண்டும். கேட்டிக்க்கரரகளைமாத்திரம் எதிர்பார்ற்கும் பாடசாலைகளில் எப்போதும் அப்பிள்ளைகள் கேட்டிதனமானவர்களே. மாறாக கெட்டித்தனம் வேறு ஒரு புலத்தில் இருக்குமாக இருந்தால் இங்கே ஒட்டுமொத்த கெட்டித்தன்ம மாத்திரம் பார்ஹ்தே தெரிவு இருக்குமே ஒழிய அச்சிறாரிடம் ஒழிந்திருக்கும் திறமைக்கோ தேர்சிக்கோ சந்தர்ப்பம் மிக குறைவாகவே காடப்பு சாத்தியம் இருக்கலாம் .. எனவே இங்கு பெரியளவு முதலீடு அல்லது கௌரவம் என்பதை மனதில் வைத்து கொண்டு பிள்ளைகளை கல்வியில் மேம்பட்ட பாடசாலை என்ற ஓறு பெரிய மாயைக்குள் விலிருந்து விட நினைப்பது தவறு என்பது எனது எண்ணம் எல்லாப் பாடசாளைகளிளிலும் ஒரே விதமான பாட விதானங்கள ஒரே விதமான செயல்பாடுகள் அப்படியிருக்க ஏன் பாடசாலைகளில் கல்வித் தரங்களில் இவ்வளவு பெரிய வித்தியாசம் என்பதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் ஆதங்கம் புரியாதபுதிராக இருப்பதன் காரணத்தினாலே தான் நல்ல பாடசாலை என நகரை மத்தியை நாடுகின்றனர் ....

அரசாங்கத்தின் கடமை என்ன?

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எதிர்காலத்தை கணிக்கக்கூடிய வல்லுநர்கள் அதிகரித்துவிட்டார்கள். அப்படி இருக்கும் போது அடுத்த 5 ஆண்டுகளில் அல்லது 10 ஆண்டுகளில் எந்த துறையில் அதிக வேலை வாய்ப்பு இருக்கும், அரசாங்கம் எந்த துறைகளில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க போகிறது, எந்த துறையில் எவ்வளவு பேர் வயது மூப்பு காரணமாக போகப்போகிறார்கள் என்பது பற்றிய தெளிவான கல்வி மறு சீரமைப்புடன் எதிர்கால சந்ததியினரை ஆக்கபூர்வமான ஒரு பாதையை நோக்கி நகர்த்த தயாராகும் போதுதான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதற்கு ஏற்றவாறு தயார் செய்வார்கள். 

இல்லையெனில் கடந்த சில ஆண்டுகளில் புற்று ஈசல் போல படித்துவிட்டு வெளியே வந்து மீண்டும் பழைய குருடிகதவத் திறடி என பட்டதாரிகளும் மேதாவிகளும் வீதியில் மறுபடியும் நிக்கும் அவல நிலை மாறப்போவதில்லை ...

பெற்றோரின் கடமை என்ன?

நல்ல பாடசாலையில் பிள்ளைகளை படிக்க வைக்க நினைப்பது தவறு அல்ல. ஆனால் அடுத்தவர்களின் பார்வைக்காகவும் கௌரவத்திற்காகவும் உங்களது பிள்ளைகளை நீங்கள் சிறந்த பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என நினைத்து உங்களது வருமானம் அனைத்தையும் செலவு செய்தால் அந்த முதலீடு லொத்தரில் போட்ட முதலீட்டை போன்றதுதான். உங்களது பிள்ளைகளின் தனித்திறமைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவர்களை அதில் நிபுணத்துவம் பெற செய்திடுங்கள். ஓடுவதில் உங்கள் பிள்ளை கெட்டிக்காரன் என்றால் பாடசாலை ஒன்றில் சேர்த்துவிட்டு ஒரு நல்ல ஒட்டப்பயிற்சி மையத்தில் உங்களது பிள்ளையை சேர்த்து விடுங்கள். அதற்கு பணத்தை செலவு செய்திடுங்கள். நிச்சயமாக உங்களது பிள்ளை சாதிப்பார். 

கல்வியில் முதலீடு செய்வதை விடவும் பிள்ளைகளின் திறமையில் முதலீடு செய்திடுங்கள் என்பதே எனது கோரிக்கை. 

 

நன்றி 

தொகுப்பு 

வீ. குகதாசன் 

 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News