டிசம்பர் 21, 2012 தான் உலகத்தின் கடைசி நாள் என்று சிலரும் இது தான் தீர்ப்பு நாள்என்று வேறு பலரும் புரளிகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சில மதங்களோ மாயன் இனத்தவரோடு தங்களையும் ஏதாவது ஒரு வகையில் இணைத்து இதன் மூலம் மக்களை பயப்படுத்தி தன் கடவுள் முன் மக்களை மண்டியிட வைக்க முடியுமா என்று பார்க்கிறது.
வெளிநாடுகளில் இதை வைத்து உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று கூறி பணக்காரர்களிடமிருந்து பணம் பறிக்கவும் முயல்கிறார்கள். பலர் புவிக்கு அடியில் சேதம் ஏற்படாத வகையில் பதுங்கு அறை கட்ட முடியுமா என்று பார்க்கிறார்கள்.
வேறு பலரோ இதுவரை இல்லாத விதமாக மாயன் இனத்தவர்களை தங்கள் இனத்தோடு ஒப்பிட்டு வறட்டு பெருமிதம் கொள்கிறார்கள்.
பலர் 2012 என்ற கற்பனை திரைப்படத்தை பார்த்த பீதியில் உறைகிறார்கள்
வேறு பலரோ உலகில் எங்கேயாவது நிகழும் அழிவுகளை 2012 உடன் சேர்த்து கற்பனை கதைகளை கட்டுகிறார்கள்.
இவ்வாறு பல நிகழ்வுகள் நடக்கும் இந்நேரத்தில் உலகின் விண்வெளி ஜாம்பவான் ஆனநாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்ன சொல்கிறது என்று பார்ப்பது அவசியமல்லவா?
நாசா கூறும் கருத்துகளை தொகுத்து இங்கே தந்திருக்கிறேன்.
புரளி: மாயன் காலண்ர் 21-dec-2012 உடன் முடிவுக்கு வருகிறது. அதனால் உலகம் அன்றோடு அழிந்துவிடும்.
நாசா என்ன சொல்கிறது?
Mayan Calendar: The Maya calendar, which is made up different cycles of day counts, does not end this year. Rather, one cycle of 144,000 days (394 years) ends and the next cycle begins.
Mayan Prophecy: The ancient Maya did not predict the end of the world or any disaster in December 2012. Such doomsday predictions are a modern hoax.
அதாவது, மாயன் காலண்டர் பல சுழற்சிகளை அடிப்படையாக வைத்து காலத்தை கணக்கிடுகிறது. அதில் ஒன்று 144,000 நாட்களை (அதாவது 394 வருடங்கள்) வைத்து கணக்கிடுகிறது. இந்த ஒரு சுழற்சி நிறைவடைந்ததும் அடுத்த சுழற்சி ஆரம்பமாகும். இது எப்படி என்றால் கிரிகேடியன் அதாவது மேற்கத்திய முறையிலான இயேசு கிருத்து பிறப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட காலண்டரில் டிசம்பர் 31 முடிந்தால் அடுத்த நாள் சனவரி 1 ஆரம்பமாவதைப்போலவே தான் இதுவும்.
கிரிகேடியன் காலண்டர் படி டிசம்பர் 21, 2012 உடன் 144,000 ஆவது நாள் நிறைவடைகிறதா என்று நம்மால் கணக்கிட இயலாது. ஏனென்றால் மாயன் காலண்டருக்கும் கிரிகேடியன் காலண்டருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இரு காலக்கணக்கீடுகளின் அடிப்படையே வேறு. மாயன் காலண்டரின் தொடக்க நாள் எதுவென யாருக்குமே தெரியாது.
ஆங்கிலேயர்களும் மற்றவர்களும் அமெரிக்காவில் வந்தேறி அங்குள்ள பழங்குடியினர்களை அழித்து தங்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மாயன் சமூகம் அங்கே வாழ்ந்து வந்திருக்கிறது. ஆனால் கிரிகேடியன் காலண்டரோ வெறும் 2000 வருடங்களுக்கு முன்னதாக இயேசு கிருத்துவின் பிறப்பு அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதாகும். கிருத்து பிறப்பு தேதியும் வெறும் கற்பனை அடிப்படையிலானது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? உண்மையான தேதி எந்த நாள் என்பதில் உலகில் பலவேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. உலகில் பல நாடுகளில் கிறித்துமசு பல தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
சில வருடங்கள் கணக்கீடுகளிலேயே இத்தனை குழப்பங்களை கொண்டிருக்கும் நாம் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் எந்த நாளில் மாயன் காலண்டரின் சுழற்சி முறை ஆரம்பமானது என்பதை நம்மால் எப்படி உறுதியாக பரப்ப இயலும்?
மேலும், மாயன் இனத்தவர்கள் தங்களின் செய்திகளை பல கல்வெட்டுகளிலும் பொறித்திருக்கிறார்கள். அதில் எதிலும் உலகின் கடைசி தினம் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை.
புரளி: நிபிரூ என்ற கோள் பூமியை நோக்கி வருகிறது. அது பூமியை தாக்கும்
நாசா என்ன சொல்கிறது?
Planet Nibiru: Nibiru is probably the minor name of a god found in ancient Mesopotamian writing. There is no planet named Nibiru, and the fictional books by economist Zecharia Sitchin about a civilization on this planet are a hoax.
Rogue Planet Headed for Earth: For the past decade there have been reports of a rogue object (Planet X, or Nibiru, or Hercubolus, or even Comet Elenin) that will collide with Earth in December 2012. These claims are not true. If such a threatening world existed, it would be one of the brightest objects in the sky, and astronomers would have been tracking it for years. If it existed, its gravity would be distorting the orbits of planets, especially Mars and Earth. Astronomers know that it does not exist.
உண்மையை அறிந்தால் சிரிப்பீர்கள்.செக்காரியா செட்சினின் என்ற கதை எழுத்தாளர் முதன் முதலில் இப்படி ஒரு கிரகம் பூமியை நோக்கி வருகிறது என்று ஒரு கதை எழுதினார். அதிலிருந்து இந்த கிலி பரவ ஆரம்பித்தது.
சுமேரியர்களின் புராண கதைகளில் இப்படி ஒரு கடவுள் பெயர் உள்ளது. அதனடிப்படையில் இக்கிரகம் 3600 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றிவரும் எனவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு கிரகமே இல்லை என நாசா அடித்துச்சொல்கிறது.
அப்பிடி ஒரு கிரகம் இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே அக்கோள் வானத்தில் பெரிதாக தெரிய ஆரம்பித்திருக்கும்.
அப்படி ஒரு கிரகம் இருந்திருந்தால் இந்நேரம் அதன் ஈர்ப்பு விசையால் பூமிக்கு பக்கத்தில் உள்ள கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவும் ஏற்படவில்லை.
பலர் இக்கோள் கறுப்பு நிறத்தில் இருப்பதால் நம்மால் காண இயலாது என்றும் பீதியை கிளப்புவோர்கள் தங்கள் கருத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.
நிபிரூ அல்லது பிளானட் எக்ஸ் என்ற கிரகம் கறுப்பாகவே இருக்கட்டும். ஆனால் சூரியனின் வெளிச்சம் அதன் மீது படுமா அப்போதாவது நாசாவின் கண்களுக்கு வெளிச்சமாக தெரிந்திருக்குமா என்பதை பலர் யோசிப்பதே இல்லை.
யோசித்துப்பாருங்கள். ஒரு கோள் புவியை நோக்கி வருகிறது என நாசாவில் தெரிந்தால் நாசாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளிடமிருந்தோ வெளி மக்களுக்கோ மீடியாக்களுக்கோ தெரியாமல் மறைக்க இயலுமா? உலகில் நாசா மட்டுமே விண்வெளி ஆராய்ச்சி செய்வதில்லை. இந்தியா உட்பட உலகில் பல நாடுகளிலும் விண்வெளி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. அனைத்து ஆராய்ச்சி மையங்களும் விண்வெளியை நோக்கியபடி உள்ளன. ஒரு கோள் புவிக்கு மிக அருகில் வருவது நாசாவிற்கு தெரிந்தால் மற்ற நாடுகளுக்குமா தெரியாமல் இருக்கும்? அவர்களும் அதை மறைப்பார்களா?
இன்னொரு வேடிக்கையை தெரிந்து நீங்கள் கண்டிப்பாக சிரித்தாக வேண்டும்.
இந்த நிபிரூ கோள் பூமியை கடந்த 2003 மே மாதமே தாக்கும் என்று கிலி எழுப்பினார்கள். அந்த நாளும் வந்து கடந்து போய் 10 வருடங்கள் ஆகிறது.
சிரித்துக்கொள்ளுங்கள். அப்படியே 2000 லேயே உலகம் அழியும் என்று பரப்பப்பட்ட புரளியையும் நினைவில் கொள்ளுங்கள்.
புரளி: புவியும் சூரியனும் பிரபஞ்சத்தின் நடுப்பாகவும் ஒரே நேர்கோட்டில் வருகிறது.
நாசா என்ன சொல்கிறது?
Planet Alignments: There is no alignment of planets in Dec 2012. There is an approximate lining up of the Earth and Sun and the center of our Galaxy in late December, but this happens every year. In any case, planet alignments have no effect on the Earth.
இந்த நிகழ்வு வருடா வருடம் நடக்கிறதாம். அதாவது கடந்த வருடமும் நடந்ததாம். பூமி சுழல ஆரம்பித்ததிலிருந்து சூரியன் ஒளிர ஆரம்பித்ததிலிருந்து இந்நிகழ்வு நடக்கிறதாம்.
இதனால் பூமிக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
புரளி: புவியின் காந்த புலன்கள் தன் நிலையை மாற்றிக்கொள்ளும்
நாசா என்ன சொல்கிறது?
Pole Shift: There is nothing strange this year about either the magnetic poles or the rotational poles of the Earth. The magnetic polarity changes every million years or so, but that is not happening now, and it probably takes thousands of years when it does happen. A sudden change in the rotational axis has never happened and is not possible. If there were any change in the Earth’s rotation, it would be instantly apparent by failure of our GPS systems.
இவ்வருடம் அப்படி எந்த நிகழ்வும் நடைபெறப்போவதில்லை. புவியின் காந்த புல மாற்றம் என்பது மில்லியன் வருடங்களுக்கோ அதற்கு மேலும் வருடங்களுக்கோ ஒரு முறை நடைபெறலாம். ஆனால் அவ்வாறு நடைபெறும் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை ஏதுமில்லை.
மேலும் இந்த மாதிரி காந்த புல மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடக்கூடியதல்ல. அவ்வாறு நடக்குமானால் நம் அறிவியலின் GPS கருவியில் தெளிவாகவே உடனடியாகவே தெரிந்து விடும்.
புரளி: அங்கங்கே பல பேரழிவுகள் நடக்கும்
நாசா என்ன சொல்கிறது?
Increasing Disasters: Our planet is behaving normally in 2012, although we see more and more news stories about natural disasters. There has been no increase in earthquakes or volcanic eruptions. There has been an increase in extreme weather, including both droughts and floods, which are partly attributable to global warming, but this has nothing to do with a 2012 doomsday.
புவி இயல்பாகவே உள்ளது. பெரிய மாற்றம் ஏதுமில்லை. இருந்தாலும் அங்கங்கே வறட்சியும் வெள்ளப்பெருக்கும் நடைபெறுவது புவியின் வெப்பநிலை மாற்றத்தால் (புவி வெப்பமயமாதல்) இயல்பாகவே ஏற்படுகிறது. நிலநடுக்கமோ எரிமலை வெடிப்போ அதிக அளவில் இல்லை. அதாவது எல்லா வருடங்களையும் போலவே அங்கங்கே இவை நடைபெற்று வருகிறது. 2012 வருடத்திற்கு என்று மட்டும் இவை நடைபெறவில்லை.
2004 வருடமே சுனாமி வந்து பல ஆயிரம் இறப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகும் இந்தோனேஷியாவிலும் ஜப்பானிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகிறது. பல எரிமலைகள் தீப்பிழம்புகளை இதுவரை கக்கியிருக்கிறது. எனினும் உலகம் அழிந்துவிடவில்லை.
புரளி: சூரியனில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அதன் கதிர்கள் புவியை அழிக்கும்
நாசா என்ன சொல்கிறது?
Solar Outbursts: The Sun’s ongoing 11-year activity cycle is expected to peak in 2013, not 2012. Solar outbursts (flares and CMEs) can damage orbiting satellites but will not hurt us on the surface. The strength of the 2013 solar maximum is predicted to be lower than average, not higher.
சூரியனில் ஒவ்வொரு 11 வருடத்திற்கு ஒரு முறையும் இத்தகைய நிகழ்வு ஏற்படும். அதாவது இதற்கு முன்பும் இதே போல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வு 2013 ஆம் ஆண்டு தான் நடக்கிறது. இந்த வருடம் நடக்கவில்லை. இந்நிகழ்வு வழக்கம் போலவே இயல்பாகவே நிகழ்ந்து விடும். பயப்படும் படி அதிகபட்ச நிகழ்வாக இருக்காது.
இக்கதிர்களால் புவியைச்சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு சில நேரங்களில் பாதிப்பு ஏற்படலாம். புவி மட்டத்தில் எந்த பாதிப்பு இல்லை.
புரளி: புவிக்கு அடியில் பதுங்கு குழிகள் ஏற்படுத்தி தங்களை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்.
நாசா என்ன சொல்கிறது?
Bunker Conspiracy: Accusations of a massive government cover-up are nonsense. No government could hide an incoming planet or silence hundreds of thousands of scientists. Rumors that huge bunkers have been built in the U.S. or elsewhere to shelter the elite are lies. Apparently a few people are building private shelters, but their fear of 2012 is misplaced and they are wasting their money.
இதை நான்சென்ஸ் என நாசா சாடுகிறது. அரசாங்கமோ நாசாவோ கோள் புவியை நோக்கி வருவதை மக்களிடமிருந்து மறைக்க இயலாது என்கிறது.
பதுங்கு குழிகள் பலவும் பொய் எனவும் அப்படி இருந்தாலும் அவை பணக்காரர்கள் தங்கள் பயத்தால் தனிப்பட்ட ரீதியில் கட்டப்படும் பதுங்கு குழிகள் தான் எனவும் அவர்கள் தங்கள் பணத்தை வீணடிக்கிறார்கள் எனவும் நாசா கூறுகிறது.
மக்களிடம் உள்ள பயத்தை வைத்தே பல நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கப்பார்க்கிறது என்பதே உண்மை. உங்களிடம் பணம் கோடிக்கணக்கில் இருக்கிறதா? நிலாவில் நீங்கள் இடம் வாங்கலாம். இப்படியும் நீங்கள் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள்.
குழந்தைகள் பயப்படுகிறார்கள்.
Scaring Children: The group most vulnerable to doomsday claims is children. Teachers report that many of their students are frightened and some are even considering suicide. This is the most tragic consequence of the 2012 hoax.
பெரிய மெத்த படித்தவர்களே இப்புரளிகளை நம்பும் போது பாவம் குழந்தைகள் என்ன செய்யும்?
புரளி: உலகின் கடைசி நாள்
நாசா என்ன சொல்கிறது?
The End of the World: The idea of the sudden end of the world by any cause is absurd. The Earth has been here for more than 4 billion years, and it will be several more billion years before the gradual brightening of the Sun makes our planet unlivable. Meanwhile there is no known astronomical or geological threat that could destroy the Earth.
திடீரென உலகம் ஒரு நாள் அழிந்துவிடும் என்பது மிகவும் அபத்தமானது. நம் உலகம் திடீரென தோன்றிவிடவில்லை. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் உள்ளது. இன்னும் பல பில்லியன் வருடங்கள் சூரியனில் இருந்து சக்தி எரிந்து தீர்ந்து போகும் வரையிலும் இப்புவி இருக்கும். அதற்கு முன் இதுவரை வானியல் அல்லது புவியில் அச்சுறுத்தல்களிலோ உலகம் அழியும் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
கஸ்மோபோபியா
நாசா என்ன சொல்கிறது?
Cosmophobia: Many young people write to me that they are scared of astronomy. When they read about some new discovery, the first thing they think is that it might hurt them, even if it is happening in a distant galaxy. There is no reason for such fears, which I call cosmophobia (fear of the universe). This rash of concern seems to be the result of too many conspiracy theories and sensational stories featured on the Internet and irresponsible news outlets. Astronomical objects are so distant that they cannot threaten the Earth. Please don’t be afraid of the Sun or the planets or comets or asteroids. The universe is not your enemy.
உலகம் அழிந்துவிடும் என்ற பயத்தில் இருப்பது ஒரு நோய். அதற்கு காஸ்மோபோபியாஎன்பது பெயர்.
பலர் வானவியலை பயப்படுகிறார்கள். வானத்தில் புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் அது பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தில் நடந்தாலும் அது தம்மை அழித்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அப்படி பயப்பட எந்தவிதமான அவசியமும் இல்லை. இவ்வாறான பயப்படுதலை காஸ்மோபோபியா என அழைக்கிறோம்.
இந்த மாதிரி பயங்களினால் பல கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் இணையத்தின் மூலம் பரப்பப்படுகிறது. வானவியல் கோள்கள் மிக அதிகமான தொலைவில் இருக்கிறது அவை நம் புவியை தாக்கும் என்று பயப்படத்தேவையில்லை.பிரபஞ்சம் நமக்கு எதிரி அல்ல!.
இப்போது சொல்லுங்கள். உங்களுக்கு யாருக்கெல்லாம் கஸ்மோபோபியா நோய் இருக்கிறது?
No comments:
Post a Comment