72ஆம் இலக்க 1988 சட்டத்தின்படி மத்தியஸ்த சபை மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கான 05 நாள் பயிற்சியானது 17.04.2013 இன்று மட்டக்களப்பு bridge view ஹோடேலில் ஆரம்பமானது. இந்நிகழ்வினை நீதி அமைச்சின் மத்தியஸ்தம் மற்றும் மத்தியஸ்தத்திட்கான நிலையம் ஏற்பாடு செய்திருந்ததது இதில் நானும் ஒரு உறுப்பினராக (வீ.குகதாசன்)தெரிவுசெய்யப்பட்டிருந்தேன். மட்டக்களப்பு பிரதேசத்திற்கான மத்தியஸ்தம் செய்யும் சபையின் அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான இப்பயிற்சிக்கென 300 பேருக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு அதில் 57 பேர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டபின்னர் அவர்களின் திறன் அறிவு என்பனவற்றை மதிப்பீடு செய்து அதன் மூலமாக சபைக்கான புதிய உறுப்பினர் தெரிவு இடம்பெறும் என பற்றிவிப்பாளர்கள் தெரிவித்தனர். இதில் இன்றைய நிகழ்வாக வளவாளர்கள் அறிமுகம் மற்றும் உறுப்பினர்கள் அறிமுகம் என்பனவற்றுடன் முரண்பாடு , முரண்பாட்டுச்சக்கரம், மத்தியஸ்தம், நடுத்தீர்ப்பு போன்றனவும், முரண்பாட்டுச்சக்கரம் அதில்
1. அவசியமற்ற முரண்பாடு
2. மெய்யான முரண்பாடு என்பன குறித்தும்
அத்துடன் அவசியமற்ற முரண்பாட்டில்
1. உறவுகள் சார்ந்த முரண்பாடு
2. தரவு சார்ந்த முரண்பாடு
3. விழுமியம் சார்ந்த முரண்பாடு
என்பவை அவசியமற்ற முரண்பாடு எனவும்
1. அமைப்பு சார்ந்த முரண்பாடு
2. அக்கறை சார்ந்த முரண்பாடு
என்பன மெய்யான முரண்பாடு என குழு வேலை, சம்பவ ஆய்வுகள் மூல விளக்கமளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment