பார்வை இன்மையைநீக்கும் புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்பார்வை மங்கி குருட்டு தன்மையால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களின் குறையை போக்க லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்லைக்கழக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
பொதுவாக கண் விழித்திரையில் உள்ள நிறமிகள் படிப்படியாக வெளிச்சத்தை உமிழும் செல்கள் சக்தியை இழக்கின்றன. அதுவே கண் பார்வை இழந்து குருட்டுத் தன்மை உருவாகிறது. இந்த குறையை போக்க எலிகளிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கண்களில் வெளிச்சத்தை உருவாக்கும் செல்களை உருவாக்கினர்.
அதை ஊசி மருந்தாக்கி கண்பார்வையற்ற எலிகளின் கண்களில் செலுத்தினர். அதை தொடர்ந்து எலிகளுக்கு கண்பார்வை கிடைத்தது. 2 வாரம் கழித்து ஊசி மருந்து செலுத்திய எலிகளின் கண்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது விழித்திரை உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சிகிச்சையை மனிதர்களுக்கும் செய்து பரிசோதிக்க நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். லண்டன் பல்கலைக்கழக கண் மருத்துவதுறையின் பீடா கபே கூறும்போது இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது இதன் மூலம் குருட்டு தன்மையை முற்றிலும் நீக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment