இன்று குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்துக்கள் பற்றி அலசுவோம்.. முதலில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களிடம் உள்ள எல்லா சொத்தும் உங்கள் குழந்தைகளுக்குத் தானா? ஒரே ஓர் நிமிடம் சுயபரிசோதனை செய்துகொண்டு மேலும் சுவாசிக்க ஆரம்பிக்கலாமே..பொதுவாகவே இன்றைய சூழலில் பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது.
Can translate to read in your own language
Friday, May 10, 2013
குழந்தைகளுக்கு தரவேண்டிய மிகப்பெரிய சொத்து
அடம் பிடிக்கும் குழந்தையை அரவணைக்க...
நம் ஒவ்வொருவரது வீட்டிலும் குழந்தைகள் நேரம் காலம் தெரியாமல் அடம்பிடிப்பார்கள்.அவர்களை எப்படி அரவணைப்பது என்பதை இன்று காண்போம்.பொதுவாககுழந்தைகள் எதற்காக அடம்பிடிக்கிறார்கள்?.இதன் காரணங்கள்...
1.நியாயமான தேவைக்காக..(பசியின் போது பாலுக்காக).
2.தன் விருப்பத்திற்காக (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).
3.அநியாயத்திற்கு அடம்பிடித்தல் (காய்ச்சலில் சிகிச்சை பெறும்போது
ஐஸ்கிரீமுக்காக அழுதல், கண்ணில் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அது கெட்டதாகவேஇருந்தாலும் அதைப் பெறுவதற்கு அழுதல்).
Thursday, May 9, 2013
சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்
வணக்கம் அன்பிற்கினிய நண்பர்களே ! கடந்த பதிவு குழந்தை தொழிலாளி கவிதையை சுவாசித்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இன்றைய பதிவில் இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஏற்படும் குழந்தைகளுக்கான சண்டை சச்சரவுகளினை முடிந்தமட்டில் தடுப்பது எப்படி என்று அலசுவோம்.பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி நடக்கும் சண்டைகளை உறவினர்களிடம் சொல்லி சொல்லி கவலைப்படுவார்கள்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு பயிற்சி
போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு பயிற்சி09.05.2013 இன்று போலீஸ் உத்தியோகத் தர்களை பயிற்று விப்பதற்கான (In Service Training Unit) சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக NCPA உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ் அவர்களும் சிங்கள மொழி பெயர்ப்பாளராக நானும் (வீ குகதாசன்) கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள சிறுவர் பெண்கள் போலீஸ் பிரிவில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர்கள் பயிலுனர்களாக கலந்து கொண்டனர்.
Tuesday, May 7, 2013
பெற்றோர்கள் சொல்வதை கேட்க மறுக்கும் டீன் Age - பிள்ளைகள்
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தன்மகள் தங்கள் கட்டுப்பாட்டு எல்லையை மீற சம்மதிப்பதில்லை.அவ்வாறு மீறினால் கடுமையாக நடந்து கொள்ள முற்படுவார்கள்.ஆனால் வளரிளம் பருவப் பெண்கள் தங்களுடைய படிப்பு,உடை நண்பர்கள்.வெளியில் சென்று வருவது வீட்டு வேலைகளை செய்ய மறுப்பது தொடர்ப்பாய் பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை பிடிக்கிறார்கள்.அவர்களுடைய உடம்பும் மனதும் துரிதமாய் பல மாற்றங்களுக்குள்ளாகின்ற காலகட்டம் இது.
பிரதேச சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டம்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டமானது பிரதேச செயலாளரும் குழுவின் தலைவருமான திரு எஸ் . சுதாகர் அவர்களின் தலைமையில் கடந்த 29.04.2013 பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.கூட்டத்தில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரும் பிரதேச கண்காணிப்பு குழுவின் செயலாளருமான திரு கே. எம் . புவிதரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
Sunday, May 5, 2013
பெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள்
வணக்கம் பெற்றோர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்கும் முறையில் எதிர் கொள்ள வேண்டிய நோய்கள்,அந்த நோய்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் பற்றி அலசுவோம்.குழந்தை வளர்ப்பு என்பது, இன்றைய வேகமான சூழலுக்கேற்ப அவர்களை உருவாக்கி வளர்ப்பதும்
வண்ணத்துப்பூச்சிப் பூங்காவின் நாம் வேண்டும் உலகம் சிறார்களின் கலை நிகழ்வு
வண்ணத்துப்பூச்சிப் பூங்காவின் (Butterfly Garden ) நாம் வேண்டும் உலகம் எனும் தொனிப் பொருளில் சிறார்களின் கலை நிகழ்வு 05.05.2013 இன்று மு. ப. 9.30 மணிக்கு ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் இடம்பெற்றது. தில் பிரதம அதிதியாக இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு S . மோசஸ் அவர்களும் சிறப்பு அதிதியாக CRPO மாவட்ட இணைப்பாளர் என்ற வகையில் நானும் ( வீ . குகதாசன்) கலந்து கொண்டேன் அத்துடன் சிறார்கள், பெற்றோர் அதிபர்கள், ஆசிரியர்கள், போன்றோர் கலந்து கொண்டனர்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
Saturday, May 4, 2013
CRPO மாவட்ட இணைபாளர்களுக்கான வேலைத்திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்- 03.05.2013
CRPO மாவட்ட இணைபாளர்களுக்கான வேலைத்திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது தேசிய நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி யமுனா பெரேரா அவர்களின் தலைமையில் 03.05.2013 அன்று கொகுவெலயில் அமைந்துள்ள நன்னடத்தை திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்டத்துக்கு பொறுப்பான CRPO மாவட்ட இணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் இவ்வருடத்தில் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென பின்வரும் வேலைத் திட்டங்களுக்காக
பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பயிற்சிப்பட்டறை - 02.05.2013
பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படுகின்ற 04 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதாவது
01. ஏறாவூர் பற்று
02. மண்முனை மேதகு
03. ஏறாவூர் நகர்
04. மண்முனை தென்மேற்கு
ஆகிய பிரதேசங்களில்சிறுவர் நலன் தொடர்பில் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் , நன்னடத்தை உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
Wednesday, May 1, 2013
அதிர்ச்சி தகவல் : குழந்தை டிவி பார்த்துகொண்டே உள்ளதா ?
சமீபகாலமாக டி.வி.சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். பல மணி நேரம் தொடர்ந்து டி.வி.பார்ப்பதால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறது சமீபத்தைய கணக்கெடுப்பு ஒன்று.நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம்
Tuesday, April 30, 2013
CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் - 30.04.2013
CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டமானது மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற இருந்தது தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரது பிரசன்னம் இன்மையால் CRPO இணைப்பாளர் திரு வீ. குகதாசன் தலைமையில் இடம்பெற்றது இதில் UNICEF நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு S . நிமலன், பிளான் ஸ்ரீலங்கா நிறுவன சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் செல்வி வன்னி ரமா அவர்கள்
கிரான் பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டம் -30.04.2013
கிரான் பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திரு T . தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் சிறப்பாக கிழக்கு மாகான நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஜனாப் முபாரக் அவர்களும் கலந்து கொண்டார். அத்துடன் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், CRPO மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன், ECCD இணைப்பாளர், திரு வீ. முரளீதரன்,சிறுவர் பெண்கள் பிரிவு போலீஸ் உத்தியோகததர்கள்
Monday, April 29, 2013
முதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.
Saturday, April 27, 2013
கொஞ்சம் சிந்திப்போம்
குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...
Sunday, April 21, 2013
சூழலை அல்லது வீட்டை அடிப்படையாக கொண்ட கற்கை பிள்ளைகளுக்கு அவசியம்
இயற்கையில் இருந்து ஏராளமான விஷயங்களை, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.ஒரு சிறிய நடைப் பயிற்சியோ, ஒரு பூங்கா விஜயமோ உங்கள் குழந்தைக்கு மிக நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும்.மரங்களை அவர்களுக்குக் காட்டுங்கள். இலைகள், கிளைகள், காய், வேர், உதிர்ந்து விழுந்த காய்ந்த இலைகள் இப்படி ஒவ்வொன்றாக அறிமுகப் படுத்துங்கள். .தென்னை,மாதுளை, செம்பருத்தி என்று வேறுபடுத்திச் சொல்லிக் கொடுங்கள்.
புது விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற 5 வயது விஞ்ஞானி
இங்கிலாந்து நாட்டில் பக்ஸ்டன் நகரைச் சேர்ந்த சாம் என்ற 5 வயது சிறுவன், புதிய விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளான்.இன்னும் சொல்லப் போனால், அவன் 3 வயதிலேயே இதை கண்டுபிடித்து விட்டான். அப்போதெல்லாம் அவனது தந்தை இரண்டு துடைப்பங்களை பயன்படுத்தி வந்தார்.பெரிய பொருள்களை பெருக்க ஒரு துடைப்பமும், தூசி போன்ற சிறிய பொருள்களை பெருக்க மற்றொரு துடைப்பமும் பயன்படுத்தி வந்தார்.
Wednesday, April 17, 2013
72ஆம் இலக்க 1988 சட்டத்தின்படி மத்தியஸ்த சபை மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கான 05 நாள் பயிற்சி
72ஆம் இலக்க 1988 சட்டத்தின்படி மத்தியஸ்த சபை மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கான 05 நாள் பயிற்சியானது 17.04.2013 இன்று மட்டக்களப்பு bridge view ஹோடேலில் ஆரம்பமானது. இந்நிகழ்வினை நீதி அமைச்சின் மத்தியஸ்தம் மற்றும் மத்தியஸ்தத்திட்கான நிலையம் ஏற்பாடு செய்திருந்ததது இதில் நானும் ஒரு உறுப்பினராக
Monday, April 15, 2013
ஆபாச தளங்களில் இருந்து பிள்ளைகளை காக்க
சமீபத்தில் நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவருக்கு பி.இ.படிக்கும் ஒரு மகன் -+ 2 மற்றும் 10th படிக்கும் இரண்டு மகள்கள்.இணையம் பற்றி பேசும்போது தேவையில்லாமல் அடல்ஸ்ஒன்லி படங்கள் தோற்றுவதாகவும் அதை நிறுத்த ஏதாவது செய்யமுடியுமா என்றும் கேட்டார்.
Recent Post
-
சிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல...
-
தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிட...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
