படிப்பதோடு நின்றுவிடாமல் உங்களது குடும்பத்திலும் உங்களது குழந்தைகள் மனதிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த புரிதலை ஏற்படுத்துங்கள். மாற்றத்தை கொண்டுவர இணைந்திடுங்கள்.
கேள்வி : பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து உங்களது குழந்தைகளுடன் எப்படி பேசுவீர்கள்?
ஜென்னா : என் குழந்தைகள் என் பேச்சுக்களின் போது இருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த பிரச்சனையை நன்றாகவே புரிந்திருக்கிறார்கள். ஒரு குடும்பமாக உலகில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து பேசும் போது ஒரு குடும்பமாக நாங்கள் என்ன செய்ய முடிய முடியும் என்பது பற்றி பேசுவோம். கண்டிப்போடு நாம் இதை செய்ய வேண்டும் என அவர்களை வற்புறுத்தாமல் சொல்லிக்கொடுப்பேன்
கேள்வி : உங்கள் குடும்பத்தில் எப்படி பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கிறீர்கள்?
ஜென்னா : முழுமையாக எங்களது குடும்பம் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்குவதில் இறங்கவில்லை. ஆனால் எங்களால் முடிந்தவகையில் நாங்கள் மாறுதலை ஏற்படுத்தித்தான் வருகிறோம். உதாரணத்திற்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்த்திருக்கிறோம். அதேபோல கடைகளுக்கு போகும் போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை எடுத்துச்செல்கிறோம். பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஷாம்புகளை பயன்படுத்துவதனை தவிர்த்திருக்கிறோம்.
கேள்வி : உங்களது குடும்பத்தில் முழுமையாக தவிர்க்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள் என்ன?
ஜென்னா : பிளாஸ்டிக் குடிதண்ணீர் பாட்டில், ஸ்ட்ரா, பலூன்
கேள்வி : மற்ற குடும்பங்களில் நீங்கள் மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்றால் எதனை பரிந்துரைப்பீர்கள்?
ஜென்னா : பிளாஸ்டிக் குடிதண்ணீர் பாட்டில். ஆம் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுத்தமான குடிநீர் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கிறது. அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தாமல் அவர்களுக்கு புரியவைத்தோமானால் நிச்சயமாக மாறுதலை கொண்டுவர முடியும்.
கேள்வி : உங்களது குழந்தைகள் பிளாஸ்டிக் ஒழிப்பில் தங்களது பங்களிப்பாக எதையேனும் செய்திருக்கிறார்களா?
ஜென்னா : எனது மூத்த மகன் கடலில் மிதக்கும் கழிவுகளை சேகரிக்கும் ரோபோவை உருவாகும் திட்டத்தோடு வந்தான். என் இளைய மகன் எனது வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி நீக்கப்படாமல் இருந்தால் அவன் நியாப்படுத்துவான். இதுவும் முக்கியம் தானே.
முதலில் பிளாஸ்டிக் அபாயம் குறித்து குழந்தைகளோடு உரையாடுங்கள். பிறகு அவர்களையும் நடவெடிக்கைகளில் பங்கெடுக்க செய்திடுங்கள். கட்டாயப்படுத்தி அல்ல, விருப்பபடுத்தி …..
தொகுப்பு
வீ. குகதாசன்
No comments:
Post a Comment