குறிப்பாக திருவிழாக்கள் மிகுந்த இந்த குளிா்காலத்தில் நமது குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அந்த திருவிழாக்களை நாம் மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது. எனவே இந்த குளிா்காலத்தில் நமது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால், அவா்களுக்கு மிகச் சாியான மற்றும் நீா்ச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 5 வகையான உணவுகளை அவா்களுக்கு கொடுக்கக் கூடாது.
மற்றும் எண்ணெய் மிகுந்த உணவுகள்
மிருகங்களில் இருந்து தயாாிக்கப்படும் கொழுப்பு மற்றும் எண்ணெய் மிகுந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் போன்றவை குழந்தைகளின் எச்சில் மற்றும் சளி ஆகியவற்றின் அடா்த்தியை அதிகாித்துவிடும். அதனால் எண்ணெய் மிகுந்த உணவுகளை இந்த குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பது நல்லது. மேலும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய்களுக்குப் பதிலாக தாவரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
மிட்டாய்கள் (Candies)
கோடைகாலமாக இருந்தாலும் அல்லது குளிா்காலமாக இருந்தாலும், குழந்தைகள் இனிப்பு சாப்பிட்டால் எளிதில் பாதிப்பு அடைவா். குழந்தைகளின் உடலில் அதிக அளவில் இனிப்பு இருந்தால் அது குழந்தைகளை நோய்களில் இருந்து காக்கக்கூடிய வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். இந்நிலையில் குழந்தைகள் சற்று அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் அவா்களுக்கு எளிதாக வைரஸ் மற்றும் பாக்டீாியாக்கள் போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்படும். ஆகவே சோடா, குளிா்பானங்கள், மிட்டாய்கள், சாக்லேட்டுகள், அதிகம் செறிவூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகள் போன்றவற்றை இந்த குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
மயோனைஸ் (Mayonnaise)
மயோனைஸில் இருக்கும் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருள் உடலில் அலா்ஜிகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் குளிா்காலத்தில் மயோனைஸை சாப்பிட்டால் அதில் உள்ள ஹிஸ்டமைன் வேதிப்பொருள் உடலில் சளியின் உற்பத்தியை அதிகாித்துவிடும். அதனால் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தக்காளி, அவக்கேடோ, கத்தாிக்காய், மயோனைஸ், காளான், வினிகா், மோா், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் ஹிஸ்டமைன் வேதிப்பொருள் அதிகம் உள்ளது.
பால் பொருட்கள்
பொதுவாக விலங்குகளிலிருந்து இருந்து கிடைக்கும் புரோட்டின்கள் அனைத்தும் எச்சில் மற்றும் சளியின் அடா்த்தியை அதிகாிக்கும் தன்மை கொண்டவை. அவ்வாறு அடா்த்தி அதிகமானால் அவற்றை விழுங்குவதற்கோ அல்லது துப்புவதற்கோ, குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கும். அதனால் குளிா்காலத்தில் சீஸ், க்ரீம் மற்றும் க்ரீம் கலந்த சூப்புகள் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக அவா்களுக்கு சளி பிடித்திருந்தால் அவற்றைக் கொடுப்பதைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும்.
இறைச்சி
பொதுவாக இறைச்சியில் புரோட்டீன்கள் அதிகம் இருக்கும். அவை உடலில் சளியின் உற்பத்தியை அதிகாிக்கும். சளி அதிகமானால் தொண்டை வலி மற்றும் தொண்டை எாிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகள் போன்றவற்றை முழுவதுமாக தவிா்க்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை வழங்க நாம் விரும்பினால் மீன் மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சி போன்றவற்றைக் கொடுக்கலாம்.
தொகுப்பு - வீ. குகதாசன்
No comments:
Post a Comment