எனது "உளவியல் நோக்கில் அச்சம்(பயம்) வேண்டாம். இங்கு அச்சம்(பயம்) தரும் நோய்களைக் கருத்திற்கொள்வோம். பொதுவாக எல்லா உடல், உள நோய்களுக்கும் அச்சம்(பயம்) அடிப்படைக் காரணமாகவே இருக்கிறது. அச்சம்(பயம்) இருக்கும் வரை நம் உடலில் எந்த நோயும் வந்து குந்திவிடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.அச்ச(பய)மும் பாதுகாப்பின்மையும் தான் உளநோயின் அடித்தளம். அதாவது அச்சம்(பயம்), படபடப்பு, பாதுகாப்பின்மை இவை மூன்றும் பெரும்பாலும் உளநோய்கள் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றன. இவை எப்பவும்(எந்த அகவையிலும்) தோன்றலாம். ஆனால் அவை உடனே வெளிவர வேண்டும் என்ற தேவையில்லை. ஏதாவதொரு காலகட்டத்தில், ஏதோ ஒரு சூழலில் அல்லது நேரத்தில் (சந்தர்ப்பத்தில்) திடீரென வெளிப்படலாம்.நான் ஒரு காலத்தில் அச்சம்(பயம்) சூழ்ந்த இடத்தில் அதாவது ஒருவர் என்னை கொல்ல இருந்த சூழலில் சிக்குப்பட்டிருந்தேன். அங்கிருந்து தப்ப நான் பல முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்றாலும் பாதிப்புகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தன. உடல் மெலிவு, உடல் வலுவிழப்பு என்பன ஓரிரு ஆண்டுகளில் சீர் செய்யப்பட்டாலும் உளப்பாதிப்பு சில ஆண்டுகள் நீடித்தன. உளநல மருத்துவர்களைச்(Psycharist) சந்தித்து மதியுரைகளைப் பெற்றேன். இயல்பு கடந்த நிலை(Abnormal Behaviour), உளப்பதட்டம்(Anxiety), உளச்சோர்வு(Depression), உள(மன) அழுத்தம்(Stress) போன்ற உளநோய்கள் வர வாய்ப்பு இருக்கு என்றும் உடனடியாக அச்ச(பய)த்தை விரட்டுங்கள் என மதியுரை(Counselling) கூறினர். விருப்பத்துக்குரிய எதையாவது செய்து கொண்டிருங்கள்; சும்மா... சும்மா... சோம்பலாக இருக்கக்கூடாது; சுய முன்னேற்ற நூல்களைப் படிக்கலாம்; புதிய இடத்துக்குச் செல்லுங்கள்; புதிய உறவுகளைப் பேணுங்கள்; அப்ப தான் கெட்ட பழசுகள் எட்ட ஓடும்; நல்ல சத்துள்ள உணவை உண்; உண்டது சமிபாடு அடைய உடற்பயிற்சி செய்; கயிறடித்தல், கைவீசி நடத்தல், வேகமாய் நடத்தல், துள்ளுதல், மெதுவாக ஓடுதல், மிதிவண்டி மிதித்தல் போன்றவற்றைச் செய் என அவர்களது மதியுரை(Counselling) நீண்டன.
Can translate to read in your own language
Sunday, January 27, 2013
அச்சம்(பயம்) தரும் நோய்களும் உளவளத் துணையும்
இன்றும் கூட நம்ம தமிழாக்களிடையே ஒரு கெட்ட செயல் இருக்கிறது. அதாவது, ஒருவரிடம் சிறு உள(மன)க் குழப்பம் காணப்பட்டாலும் அந்தாளுக்கு விசரென்று ஒதுக்கி வைப்பது. உண்மையில் உள(மன)க் குழப்பத்தை உளநோய் என்று கூறவும் முடியாது; உளநோய்களை விசர்(பைத்தியம்-Mania) என்று கூறவும் முடியாது என்பதை நினைவிற் கொள்க. உளநோயின் வெளிப்பாடு ஆள்(மனித) நடத்தையெனின், ஆள்(மனித) நடத்தையைச் சீர் செய்ய உளநோய் சுகமடையும். உளநோய் சுகமடைய நம்மாளுகள் உள(மன)க் குழப்பம், உளநோய் உள்ளவர்களை அன்புகாட்டி தங்களில் ஒருத்தராக அணைக்கவேண்டும். அவ்வரவணைப்பே உளநோய்க்கான முதல் மருந்து.
என்னங்க... அச்சம்(பயம்) என்று தொடங்கி பெரிய பெரிய நோய்களைச் சொல்லுறியளே... இதற்கு முடிவேயில்லையா என்று பொறுமை இழக்கிறீர்களா... இந்நிலையைத் தான் உள(மன) இறுக்கம் (Tension) என்கிறார்கள். அதாவது, உள்ள(மன)த்தை ஒரு நிலைப்படுத்த(Concentrate) முடியாத நிலை. எடுத்த வீச்சுக்கு எவர் மீதும் பாய்ச்சல். அதனால், பலரோடு பகை அல்லது முரண்பாடு. இவரென்ன "தேவையற்ற நோய்களைச் சொல்கிறார்; அச்சம்(பயம்) பற்றிய நோய்களைச் சொல்லவில்லையே" என்று இதனை வாசிக்கும் போது நீங்கள் எண்ணவில்லையா?
எனக்கு விளங்குது... நான் சொல்லவருவது இத்தனை உளநோய்களுக்கும் அடிப்படை உள(மன) இறுக்கம் (Tension) தான். இந்த உள(மன) இறுக்கம் (Tension) வருவதற்கும் அச்சம்(பயம்) தான் காரணம். இத்தனை உளநோய்களை உங்களுக்குச் சுட்டிக்காட்டியதன் நோக்கம்; ஒரே ஒரு அச்சம்(பயம்) உங்கள் உள்ளத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே! உங்கள் உள்ளத்தில் அச்சம்(பயம்) உட்புகவிட்டால்; தேவையற்ற அச்சம்(பயம்) மீது தோழமை கொண்டால்; விசர்(பைத்தியம்-Mania) என வர வழிவிட்டதற்கு இடமளித்ததாகப் போய்விடும். இனியும் உங்கள் பொறுமையை நான் சோதிக்க விரும்பவில்லை. நேரடியாகவே அச்சம்(பயம்) காரணமாகச் சொல்லப்படுவது அச்ச(பய)நோய்(போபியா-Phobia) என்று சொல்லிவிடுகிறேன்.
என்னங்க... இதைத்தானுங்க... இவ்வளவுக்கு நீட்டிமுடக்கி எங்களையும் அச்ச(பய)மடைய வைத்துவிட்டீர்களே... என்கிறீர்களா? அப்படி எண்ணிவிடாதீர்கள்! அச்சம்(பயம்) என்பது வழமையானது தான். ஆனால், அச்ச(பய)நோய்(போபியா-Phobia) என்பது வழமையான(இயல்பான) அச்ச(பய)த்தை விட வேறுபட்டது. அதாவது வழமைக்கு முரணான (அசாதாரணமான) பயம், அளவுக்கு மீறிய பயம், சுருக்கமாக சொன்னால் இயற்கைக்கு மாறான பேரச்சம் என்றும் சொல்லலாம். இதனால் உள்ள(மன)த்தில் எழும் துயரம்(கவலை), பதட்டம்(பதகளிப்பு), பெறுமதியற்ற வேண்டுதல்(அர்த்தமில்லா பிடிவாதம்) என்பன ஒருவரில் காணமுடியும்.
இவ்வாறு ஒருவருக்கு அச்ச(பய)நோய்(போபியா-Phobia) வருவதற்குச் சில காரணங்களும் உண்டு.
1. நோய்களைப் பற்றிய அரைகுறை அறிவு(தானாக தெரிந்தும், பிறர் சொல்லக் கேட்டும் பெற்ற அறிவு.)
2. ஐயுறும் உளப்பாங்கு(சந்தேக மனப்பான்மை)
3. மூட நம்பிக்கையை பொருட்படுத்தல்.
மேற்காணும் நடத்தைகளைக் கொண்டிருப்பவர்கள்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை, பொருள் காரணமாக உள்ள(மன)த்தில் எழும் கற்பனை அச்சம்(பயம்). அதுவே அதிகமாகி, கடைசியில் கோளாறாகி விடுகிறது. குறிப்பிட்ட பொருளை பார்த்தாலோ, சூழ்நிலை நேர்ந்தாலோ அச்சம்(பயம்) ஏற்படுகிறது அதாவது அச்ச(பய)நோய்(போபியா-Phobia) ஆகிறது.
இன்றைய இந்த மணித்துளி வரை எழுநூற்றுக்கு மேற்பட்ட அச்ச(பய)நோய்(போபியா-Phobia)கள் காணப்படுகின்றதாம். எடுத்துக்காட்டாக
· தனிமையில் இருக்கப் அச்சம்(பயம்).
· கூட்டத்தினைக் கண்டால் அச்சம்(பயம்).
· புதிய ஆள்(நபர்)களை எதிர்கொள்ள அச்சம்(பயம்).
· உயரமான இடங்களுக்கு சென்றால் அச்சம்(பயம்).
· தாழ்வான இடங்களுக்கு சென்றால் அச்சம்(பயம்).
· மூடிய இடங்களை கண்டால் அச்சம்(பயம்).
· கடலில் பயணம் செய்தால் அச்சம்(பயம்).
· வானில் பயணம் செய்தால் அச்சம்(பயம்).
· இருட்டில் செல்லப் அச்சம்(பயம்).
· நீர் நிலைகளில் குளிக்கப் அச்சம்(பயம்).
இப்படியே அவற்றின் பட்டியல் நீளுகின்றது.
எழுநூற்றுக்கு மேற்பட்ட அச்ச(பய)நோய்(போபியா-Phobia)கள் A-Z வரை இருப்பினும் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.
Ablutophobia- Fear of washing or bathing.
Aerophobia- Fear of drafts, air swallowing, or airbourne noxious substances.
Atychiphobia- Fear of failure.
Automysophobia- Fear of being dirty.
Brontophobia- Fear of thunder and lightning.
Belonephobia- Fear of pins and needles.
Batophobia- Fear of heights or being close to high buildings.
Ballistophobia- Fear of missiles or bullets.
Caligynephobia- Fear of beautiful women.
Catapedaphobia- Fear of jumping from high and low places.
Climacophobia- Fear of stairs, climbing, or of falling downstairs.
Decidophobia- Fear of making decisions.
Demophobia- Fear of crowds.
Didaskaleinophobia- Fear of going to school.
Electrophobia- Fear of electricity.
Erotophobia- Fear of sexual love or sexual questions.
Felinophobia- Fear of cats.
Frigophobia- Fear of cold or cold things.
Gamophobia- Fear of marriage.
Genophobia- Fear of sex.
Gelotophobia- Fear of being laughed at.
Gerascophobia- Fear of growing old.
Hydrophobia- Fear of water or of rabies..
Hodophobia- Fear of road travel.
Iatrophobia- Fear of going to the doctor or of doctors.
Insectophobia - Fear of insects.
Isolophobia- Fear of solitude, being alone.
Judeophobia- Fear of Jews.
Kainolophobia or Kainophobia- Fear of anything new, novelty.
Kakorrhaphiophobia- Fear of failure or defeat.
Kymophobia- Fear of waves.
Logizomechanophobia- Fear of computers.
Limnophobia- Fear of lakes.
Ligyrophobia- Fear of loud noises.
Mastigophobia- Fear of punishment.
Menophobia- Fear of menstruation
Mycophobia- Fear or aversion to mushrooms.
Myctophobia- Fear of darkness.
Necrophobia- Fear of death or dead things.
Nosocomephobia- Fear of hospitals.
Neophobia- Fear of anything new.
Odontophobia- Fear of teeth or dental surgery.
Oneirophobia- Fear of dreams.
Ostraconophobia- Fear of shellfish.
Ouranophobia or Uranophobia- Fear of heaven.
Panthophobia- Fear of suffering and disease.
Paralipophobia- Fear of neglecting duty or responsibility.
Pyrophobia- Fear of fire.
Radiophobia- Fear of radiation, x-rays
Rectophobia- Fear of rectum or rectal diseases.
Siderodromophobia- Fear of trains, railroads or train travel.
Spectrophobia- Fear of specters or ghosts.
Tachophobia- Fear of speed.
Tocophobia- Fear of pregnancy or childbirth.
Testophobia- Fear of taking tests.
Urophobia- Fear of urine or urinating.
Virginitiphobia- Fear of rape.
Vaccinophobia- Fear of vaccination.
Wiccaphobia: Fear of witches and witchcraft.
Xerophobia- Fear of dryness.
Zeusophobia- Fear of God or gods.
அப்பாடா... இத்தனை அச்ச(பய)நோய்(போபியா-Phobia)களா? இல்லை, எழுநூறில சில... இதெல்லாம் நோய்களல்ல என இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால், இதன் பாதிப்புகளோடு வாழ்க்கையைத் தொடரக்கூடாது. உடனடியாக உளநல மருத்துவரை(Psycharist) நாடி சுகமடைய வேண்டும். இல்லையேல், பெரிய உளநோய்களை ஏற்படுத்த இது துணைநிற்கும்.
சிலருக்கு அளவுக்கு மீறிய அச்ச(பய) உணர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக்கவே திணறுவது போன்றன காணப்படலாம். இவை தான் அச்ச(பய)நோய்(போபியா-Phobia)யிற்கான அறிகுறி. உளநல மருத்துவரை(Psycharist) நாடி இதற்கான மருத்துவ சிகிச்சையைப் பெறவும்.
அச்சம்(பயம்) என்பது வரலாம், போகலாம். எல்லோருக்கும் அச்சம்(பயம்) இருக்கத்தான் செய்யும். வந்தது, போயிற்று என அடைந்த அச்ச(பய)த்தை மறந்துவிட வேண்டும். அதுவே உடல், உள நலத்தை காக்கும் வழி. மறக்க முடியாத அச்சம்(பயம்) தான் அச்ச(பய)நோய்(போபியா-Phobia) எனலாம். ஏன் மறக்க முடியாதுள்ளது? அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
அச்ச(பய)த்திற்கு மூல காரணம் நம்பிக்கையின்மை.
நம்பிக்கையின்மைக்கு மூல காரணம் அறியாமை.
அறியாமைக்கு மூல காரணம் மனிதனின் சிந்தனை சக்தி.
உள்ள(மன)த்தில் சிந்தனை சக்தி பாதிக்கப்படும் போது தான் அச்சம்(பயம்) குடிகொள்கிறது. எனவே, நாம் சற்றுச் சிந்திப்போம்.
உள்ள(மன)ம் சரியாகச் சிந்திக்கும் போது அங்கு அறியாமை அகற்றப்படுகிறது. அறியாமை அகற்றப்படும் போது அங்கு நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. நம்பிக்கை உருவாக்கப்படும் போது அங்கு அச்சம்(பயம்) அகற்றப்படுகிறது. எனவே, உள்ள(மன)த்தில் நல்ல எண்ணங்களை விதைப்போம். தன்னம்பிக்கையைப் பலப்படுத்துவோம். நோயின்றி நெடுநாள் வாழ்வோம்.
முடிவாக இரண்டு உண்மைகளைச் சொல்லி முடிக்கிறேன். ஒன்று நமது பிள்ளைகளை நாமே பயமுறுத்துவது; இரண்டு எடுத்த வீச்சுக்கு எதையும் எண்ணிக்கொள்ளாமல் பயந்து சாவது; இவ்விரண்டையும் நீக்கினால் அச்ச(பய)நோய்(போபியா-Phobia) மட்டுமல்ல வேறெந்த நோயும் கிட்ட நெருங்காது.
சின்னனுகள் சாப்பிட மறுத்தால்; சாப்பிடாட்டிப் பேய் பிடிக்கும் என்று அச்சுறுத்தித் தான் சாப்பாட்டை ஊட்டிவிடுகிறோம். மேலும், சின்னனுகள் கேட்டதைக் கொடுக்காட்டித் தொடர்ந்து அழுங்கள்(அழுகையால் தமது விருப்பத்தை வெளிப்படுத்துவினம்); நாம் அதைப் பொருட்படுத்தாமல், மாமா வாறார்... அடிச்சுப் போடுவார்... என்று அச்சுறுத்தித் தான் அழுகையை நிறுத்த முயற்சி செய்கிறோம். சின்னனுகள் வளர்ந்த பின் பார்த்தீர்களா? பேய்க்குப் அஞ்சியவர்களாகவும் மாமனுக்கு அஞ்சி ஒதுங்குபவர்களாகவும் தான் இருப்பர். குழந்தைகளின் விருப்புக்கு இசைந்தும் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்டி உள(மன)ப் பலசாலியாக்கியும் வளர்த்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா?
ஒருவருக்குப் பாம்பு கடித்ததும் "ஐயோ! பாம்பு கடித்து விட்டதே!" என்று அலறியடிப்பார். அதற்கிடையில் அவருக்கு உடல் முழுவதும் பாம்பின் நஞ்சு(விசம்) பரவச் சாவு நெருங்கிவிடுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் பாம்பு கடித்தால், கடித்த இடத்திற்கு தண்ணீர் தெளித்துக் கழுவிப்போட்டு மருத்துவரை நாடுவர்; உயிர் தப்புவர். அச்சம்(பயம்) இல்லாதவருக்கு நஞ்சு(விசம்)பரவும் வேகம் குறைவு, அதேநேரம் விரைவாக மருத்துவரைச் சந்தித்ததால் சிகிச்சை வெற்றியளித்து உயிர் தப்புகிறார்.
மேலே காட்டிய இரு செயல்களிலும் ஒன்றில் நாம் அச்சமூட்டுகிறோம்; மற்றையதில் நாம் அச்சமடைகிறோம். இவை இரண்டும் நம் வாழ்விலிருந்து அகற்றப்படவேண்டியவை. சரி, அச்ச(பய)நோய்(போபியா-Phobia) அல்லது பிற நோய்களுக்கும் உள்ளம் தான் காரணம் என்கிறோம். அதாவது, அச்சம்(பயம்) சார்ந்த பதிவுகள் உணர்வு உள்ளம்(Conscious Mind) இயங்காத வேளை உணர்வற்ற உள்ளத்தில்(Unconscious Mind) பதிந்து விடுகிறது. உணர்வற்ற உள்ளம் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. அதனால் தான் அச்ச(பய)நோய்(போபியா-Phobia) ஆளையறியாமலே தானாகவே வெளிப்படுகிறது.
எனவே, உணர்வற்ற உள்ளத்தில்(Unconscious Mind) தேவையற்ற பதிவுகளை இடம் பெறாமல் செய்ய உணர்வு உள்ளத்தை(Conscious Mind) உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அதாவது, தேவையற்ற எண்ணங்கள் உள்ளத்தில் ஓடினால், அதனை விரட்டும் வழியில் பயன்தரும் நல்லெண்ணங்களை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும். உள்ளத்தை ஒருநிலைப்படுத்தத் தேவையான தியானம், யோகாசனம், உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
தேவையற்ற அச்ச(பய)த்தை மறந்துவிடுங்கள் அல்லது பொருட்படுத்த வேண்டாம். எழுநூறு அச்ச(பய)நோய்(போபியா-Phobia) களில் சிலவற்றைத் தந்தேன். நீங்கள் அவற்றை எண்ணி எண்ணிச் சிரிக்க மட்டுமே! இப்பதிவைப் படித்து முடித்ததும் உங்கள் எண்ணத்தில் அச்சம்(பயம்) வரக்கூடாது; அச்சம்(பயம்) சார்ந்த நோய்களும் வரக்கூடாது. அச்ச(பய)நோய்(போபியா-Phobia) அறிகுறிகள் இருப்பின் உளநல மருத்துவரை(Psycharist) நாடி அதற்கான மருத்துவ சிகிச்சையைப் பெறவும். ஐயங்கள் ஏதுமிருப்பின், உளநல மதியுரைஞரை(Counsellor) நாடி மதியுரை பெறலாம்.
உங்கள் யாழ்பாவாணன்
உளநல மதியுரைஞர்(Psychological Counsellor)
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
-
சிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல...
-
தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிட...
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
No comments:
Post a Comment