31.01.2013 அன்று மாவடி மும்மாரி கிராமத்தில் கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு அமைத்தல் அங்குரார் ப்பன கூட்டம் அப்பிரிவு கிராம உத்தியோகத்தர் திரு கருணாநிதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதல் அம்சமாக இறை வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வை. எம். சி. எ. நிறுவன பிரதிநிதி திருமதி கிருசாந்தி அவர்கள் சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். இதில் தங்கள் Save the children நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இத்திட்டத்தை செய்யவிருப்பதாக வும் 01 வருடத்திற்கு இத்திட்டம் மூலம் குறிப்பிட்ட குழுவை இஸ்திறப்படுத்தி மக்கள் மூலம் அதனை செயல்படுத்த எண்ணியுள்ள தாகவும் தெரிவித்தார்.தொடர்ந்தது நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தருக்கான மாவட்ட இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில் சிறுவர் பாதுகாப்பில் பிள்ளைகளின் முதல் பாதுகாப்பிடம் குடும்பம் எனவும் அவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் பெற்ற்றோர்கள் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து குழுவின் மூலம் சிறுவர் பாதுகாப்பின் முக்கிய விடயமான தடுத்தல் தொடர்பாக எவ்வாறான பொறிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விளக்கமளித்து குழு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு செயலாளர் சசிகலா அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
Can translate to read in your own language
Sunday, February 3, 2013
மாவடி மும்மாரி கிராமத்தில் கி.சி. க. குழு
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
-
சிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல...
-
தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிட...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
No comments:
Post a Comment