மலேசியாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர மலேசியா நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவின் சபா பகுதியை சேர்ந்தவன் ரபிதின் சடிகர் (42), கடந்த 2009-ம் ஆண்டு, கத்தி முனையில் 16 வயது பெண்ணை மிரட்டி கற்பழித்த குற்றத்துக்காக.இவனை போலீசார் தேடி வந்தனர். இதனால், சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு இடத்துக்கு சென்று அங்கும் 8 வயது சிறுமியையும்,
பின்னர் 17 வயது இளம்பெண்ணையையும் வழக்கமான பாணியில் இவன் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இது தவிர ஒரு சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டான். இதனையடுத்து ரபிதினை போலீசார் கைது செய்து ரவ்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால், தன் மீதான பலாத்கார குற்றச்சாட்டுகளை ரபிதின் மறுத்து வாதாடி வந்தான். இந்நிலையில், ராப் நகர நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. இதில் ரபிதினுக்கு 115 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்த இந்த காமக்கொடூரன் தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்னர் நான்கு பேரின் வாழ்க்கையை சீரழித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது
source - http://www.deccanchronicle.com/130205/news-world/article/malaysian-man-gets-115-years-jail-50-strokes-over-four-rape-counts
No comments:
Post a Comment