அனர்த்த ஆபத்துக்குறைப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறையானது christian aid நிறுவனத்தின் அனுசரணையுடன் சமுக அக்கறை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள CSAG என்னும் climate study and action group என்னும் பெயரில் இயங்கும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 07.02.2013 -08.02.2013 இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில் வளவாளராக திரு ராமேஸ்வரன் அவர்கள் இரண்டு நாட்களும் இந்நிகழ்வை நடத்தினார்.
இதில் மட்டக்களப்பில் உள்ள பெரும்பாலான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் எமது மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம், அபிவிருத்தி திட்டங்களில் அனர்த்த முகாமைத்துவத்தை உள்வாங்க வேண்டியதன் அவசியம் மற்றும் தாக்குப்பிடிக்க கூடியதும், பாதிக்கப்படக்கூடியதும் மற்றும் நலிவுறு மதிப்பீடு (PVCA ) போன்ற அனர்த்த முகாமைத்துவ மதிப்பீட்டு கருவிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன்.
கலந்துகொண்டோரின் பின்னூட்டல் அடங்கிய கருத்துக்களை உள்ளடக்கியதான அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் திரு ராமேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment