பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எந்த ஒரு பிரச்சனையுமின்றி இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உடலில் சத்தானது மிகவும் குறைவாக இருக்கும்.
எனவே அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும் சரியாக செய்ய முடியாமல் தவிப்பார்கள். அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருந்த போது, உடலில் குழந்தையையும் சுமந்ததால், அவர்கள் மனதில் இன்னும் அந்த எடையானது மாறாமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்ததால், அவர்களுக்கே ஒருவித வித்தியாசமான உணர்வு இருக்கும். மேலும் இந்த நேரத்தில் கர்ப்பத்திற்கு முன் இருந்த உடல் அழகைப் பெறுவதற்கு, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.ஆனால் அதற்கு உடலில் சக்தி இருக்காது. அதுமட்டுமல்லாமல், பிரசவத்திற்கு பின் கூந்தல் உதிர்தல் இருக்கும். பழைய ஆடை சரியாக இருக்காது. உடல் மிகவும் வலுவிழந்து காணப்படும். எனவே இவை அனைத்தும் மனதிற்கு ஒருவித கஷ்டத்தை கொடுத்து, மனஉளைச்சலுக்கு ஆளாக்கும். ஆகவே இதனை ஒரு பெரிய விஷயமாக பொருட்படுத்தாமல், குழந்தையை நன்கு கவனிக்க வேண்டும் என்று நினைத்து, இந்த மனஉளைச்சலில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எனவே தான், அத்தகையவர்களுக்காக மன அழுத்தத்தைப் போக்கும் ஒருசில சிறந்த வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டு, குழந்தையுடன் சந்தோஷமாக வாழுங்கள். சரி அது என்ன வழியென்று பார்ப்போமா!!! பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க சிறந்த வழிகள்!!!1/11 குழந்தையுடன் விளையாடுவது வாழ்வில் கடவுள் கொடுத்த ஒரு பெரிய பரிசு தான் குழந்தை. எனவே அந்த குழந்தையுடன் மனதில் எதையும் நினைக்காமல், சிறிது நேரம் விளையாடினாலே, மன அழுத்தமானது சீக்கிரம் குறையும்.
Read more at: http://tamil.boldsky.com/pregnancy-parenting/post-natal/2013/best-ways-get-over-postnatal-depression-002701.html
No comments:
Post a Comment