எல்லாவற்றிற்கும் முன்பாக நாம் பொதுவாகப் பேசப்படும் காலநிலை செயற்பாடுகளான தென்னதிர்வு எல்லினோ மற்றும் லானினா பற்றி அறிந்து கொள்வது அவசியம். மேற் கூறிய எல்லா செயற்பாடுகளுக்கும் காரணமாக அமைவது பாரிய சமுத்திரமான பசுபிக்கின் தென்பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வளி அமுக்கம் ஆகியவற்றில் ஏற்படும் சிறு சிறு மாறுதலேயாகும். பசுபிக்கில் ஏற்படும் இந்த மாற்றம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய அதாவது அமெரிக்காவில் இருந்து இந்தோநேசியாவிற்கு காற்றோட்டத்தையும் நீரோட்டத்தையும் ஏற்படுத்தும். பசுபிக்கில் ஏற்படும் மாற்றமானது உலகளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சாதாரண வேளைகளில் பசுபிக்கில் ஏற்படும் மாற்றங்களை முதலில் பார்ப்போம். பரந்த பசுபிக் சமுத்திரம் பெறும் அதிகளவான சூரியஒளி வெப்பமாக நீரில் சேமிக்கப்படுகிறது. இச் சூரிய ஒளியானது பசுபிக்கில் வெப்பமாக சேமிக்கப்படுகிறது. உதாரணமாக பசுபிக் வியாபாரக் காற்றானது கிழக்கில் இருந்து அதாவது தென்னமெரிக்காவில் இருந்து மேற்கை (இந்தோநேசியாவை) நோக்கி அடிக்கிறது. இந்தக் காற்றானது தன்னுடன் சூடான நீரை மேற்குப் பகுதிக்கு இழுத்துச் செல்கிறது.மேற்பகுதிக்கு சூடானநீர் இழுத்துச் செல்லப்படும் பொழுதுஅவ் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சமுத்திரத்தின் அடியிலிருந்து குளிரான நீர் பசுபிக்கின் கிழக்குப் பகுதியில் மேல் நோக்கி எழுகிறது.
February, March மாதங்களில் இந்த மேற்குநோக்கிய நீரோட்டமானது மந்தமடைகிறது அதனால் நடுப்பகுதிகளில் உள்ள நீர் உஷ்னமடைகிறது. ஆனால் இந்தநேரங்களில வியாபாரக் காற்றானது ஆசியப்பருவக் காற்றுக்களால் நிர்வகிக்கப்படுகிறது;.
இந்த மேற்கு நோக்கிய ஈரப்பதன் நிரம்பிய காற்றானது மேற்கிலுள்ள நாடுகளுக்கு அதாவது இந்தோநேசியா,அவுத்திரேலியாமற்றும் நமது நாடான இலங்கை போன்ற நாடுகளுக்கு போதியளவான மழையைத் தருகிறது.
எல்லினோ(Elnino)
பல காரணங்களால் அறியப்படாத நிலமைகளால் இந்த மேற்கு நோக்கிய வியாபாரக் காற்றானது சில வேளைகளில் ஸ்தம்பிதமடைகிறது. இதனால் மேற்கு நோக்கிய நீரின் அசைவானது நிறுத்தப்படுகிறது. இதனால் பசுபிக்கில் உள்ள நீர் முற்றாக வெப்பமடைகிறது. மேற்கில் மாத்திரம் வெப்பமடையவேண்டிய பசுபிக் நீரானது சமுத்திரம் முழுதாக வெப்பமடைகிறது. அதனால் கீழிருந்து மேலெழுமும் குளிர் நீர் சமுத்திரத்தின் மேற்பரப்புக்கு வருவது தடைப்படுகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ளபசுபிக் சமுத்திரம் வெப்பமடைகிறது.
இதன் உக்கிரமானது காலங்களைப் பொறுத்து மாறுபடலாம். இதன் பொழுது மேற்குப் பகுதியில் உள்ள நீராவி குறைந்த வளியானது மேற்குப் பகுதியிலுள்ள நாடுகளுக்கு குறைந்தளவு மழையைக் கொடுக்கிறது. இதனால் மேற்குப் பகுதியில் வறட்சிநிலவக் கூடும். இதனால் பாதிக்கப்படும நாடுகளாக இந்தோநேசியா, அவுத்திரேலியா மற்றும் தென் ஆசிய நாடுகள் வறட்சியினை எதிர்கொள்ளும். இதன் போது கடல் மட்டமானது குறைவடைகிறது. இதேபோன்ற ஒரு செயற்பாடு 1982, 1983 ம் ஆண்டுகளில் நிகழ்ந்தபொழுது மேல் படை பவள;பாறைகள் அழிவடைந்தன. இதுநடந்தது மேற்குப் பசுபிக் தீவுகளில். இதன் மற்றைய நிகழ்வாக கிழக்குப் பகுதிகளில் உள்ள தென் அமெரிக்க நாடுகளான பேரு, ஈகுவடோர் போன்ற நாடுகள் அளவுக்கதிகமான மழையை இக்காலங்களில் எதிர்கொள்ளநேரிடும். இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
லானினா(Lanina)
மேற் கூறியதன்படி சாதாரண நிலைகளில் வியாபாரக் காற்றானது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுகிறது. லானினா எனப்படும் நிலமைகளில் இந்த சாதாரணநிலமையானது உக்கிரமடைந்து காணப்படுகிறது. இதனால் அளவுக்கதிகமான காற்று மேற்கில் இருந்து கிழக்குநோக்கி வீசுகிறது. இது அளவுக்கதிகமான சூடான நீராவி நிரம்பிய பசுபிக் சமுத்திரத்தின் நீரை மேற்கிற்கு இழுத்துச் செல்கிறது. இதன் காரணமாக பசுபிக் சமுத்திரத்தின் மேற்குக் கரையில் காணப்படும் இந்தோநேசியா, அவுத்திரேலியா, தென் ஆசியநாடுகள் அளவுக்கதிகமான மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இக்காலநிலையை நாம் 2011, 2012 ல் அனுபவித்திருந்தோம்.
இப்பொழுதுநாம் மேற்கூறிய காலநிலை செயற்பாடுகள் எவ்வாறு எமது நாட்டை பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
எமது நாடானது ஒருசிறிய தீவு என்பது எல்லோருக்கும் தெரியும். எமது தீவானது ஒரு பக்கம் இந்துசமுத்திரத்தையும் வங்காளவிரிகுடாவையும் மற்றப் பக்கம் அராபியக் கடலையும் எதிர்கொள்கிறது. இதன் காரணமாகஎமதுநாட்டின் காலநிலையானதுஒருசாதாரணஒழுங்குகளைப் பின்பற்றுவது சிரமமாகும். எனினும் எமதுநாட்டின் மத்தியில் காணப்படும் மலைச்சாரலானது எமது நாட்டை இரண்டுகாலநிலைப் பிரதேசங்களாகப் பிரிக்கிறது. ஒன்றுமேற்குதெற்குப் பகுதியையும் மற்றையதுவடகிழக்குப் பகுதியுமாக இது காணப்படுகிறது.
12 மாதங்களில் எமதுநாட்டில் காணப்படும் காலநிலைகளைநாம் நான்குவகையாகப் பிரிக்கலாம்.
1. பருவப் பெயர்ச்சிக்கு இடையானகாலம்.இது March, April ஆகும்.
2. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று. இது May தொடக்கம் September வரை நிலவும்.
3. மீண்டும் ஒரு பருவப் பெயர்ச்சிக்கு இடையான காலம். இது October தொடக்கம் November வரை நிலவும்.
4. வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம். இது December தொடக்கம் February வரை நிலவும்.
முதலாவது பருவப் பெயர்ச்சிக் காலமானது May இன் இடையிலிருந்து October வரை நிலவும். இது தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் நிலவுகிறது. இக் காற்றானது இந்து சமுத்திரத்தில் இருந்து நீராவி நின்ற காற்றை எமது நாட்டிற்கு வீசுகிறது. இதன் மூலம் கிடைக்கும் மழை மிக அதிகளவானது. வடகீழ்ப் பருவக் பெயர்ச்சிக் காற்றில் கிடைக்கும் மழையுடன் ஒப்பிடும் பொழுது. இரண்டாவது பருவப் பெயர்ச்சியானவடகீழ்ப் பருவப் பெயர்ச்சியானது December தொடக்கம் March வரை நிலவுகிறது. இந்த பருவப் பெயர்ச்சிக் காற்றானது வடகீழ் ஆசியநிலப்பரப்பில் இருந்து வீசுவதனால் குறைந்தளவு நீராவியையும் குளிர்ந்த தன்மையையும் கொண்டு காணப்படும். இதன் பொழுது நாட்டின் வெப்பநிலை குறைவடைய காரணங்கள் உண்டு. இக் காற்றானது ஆசிய,வடக்குஆசிய நிலப்பரப்புகளில் இருந்து வீசுவதனால் குளிர்ந்த காற்றைக் கொண்டு வரும். இக்காலங்களில் நாட்டின் வெப்பநிலை குறைவடைய இதுவே காரணம்.
எல்லினோ காலங்களில் இந்து சமுத்திரம் அராபிக் சமுத்திரம் அண்டைய பகுதிகளின் மேல் காணப்படும் வளியானது குறைந்த ஈரலப்புத் தன்மையைக் கொண்டு காணப்படுவதால் நாம் மேலே பார்த்த போன்று எத்தகைய காற்றினாலும் இக்காலங்களில் கிடைக்கப் பெறும் மழையானது குறைந்தளவேயாகும். இதற்கு எதிர்மாறாகால நிலைமைகளில் இலங்கையைச் சுற்றியோ தெற்காசியாவைச் சுற்றியுள்ள சமுத்திரங்களில் காணப்படும் காற்றானது நிரம்பலடைந்து காணப்படுவதனால் எந்த பருவப் பெயர்ச்சியானாலும் அது தென்மேற்பருவப் பெயர்ச்சியாக இருக்கட்டும் வடமேல் பருவப்பெயர்ச்சியாக இருக்கட்டும் இதன் மூலம் கிடைக்கும் மழை அளவுக்கதிகமாகக் காணப்படும். 2011 களில் எமக்குக் கிடைக்கப் பெற்ற மழையானது லானினா எனப்படும்; நிலமை பசுபிக் சமுத்திரத்தில் நிலவியதனாலேயே ஏற்பட்டதாகும். எனினும் லாலினா நிலமை 2012 களிலும் சிறிது தொடர்வதால் இவ் வருடமும் எமக்கு போதியளவு மழை கிடைப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.
Source - http://sciencenavigators.org
No comments:
Post a Comment