மண்முனை மேற்கு பிரதேச செயலத்தினால் சிறுவர்களுக்கான சிறுவர் உரிமைகள், துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 01.03.2013 இன்று மு ப. 9.30 மணிக்கு கன்னன்குடா தமிழ் மஹாவித்யாலத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் திரு .V . தவராஜா அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் திரு s . ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.சிறார்களை இலக்கு குழுக்களாக வைத்து நடாத்தப்பட்ட
இன் நிகழ்வில் வளவாளர்களாக விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர் , மற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு ம. வரதராஜன் அவர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத்தினைக்களத்தின் மூலம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த வகையில் உரிய தினத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும் . அத்துடன் இந்நிகழ்வை ஒழுங்கமைத்திருந்த நன்னடத்தை திணைக்கள சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு T . பிரபாகரன் அவர்கள் நிகழ்வின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களாக
1. நவீன தொழில்நுட்ப சாதனங்களை வினைத்திறனாக பாவித்தல்
2. கட்டிலமைப்பருவத்து மாற்றங்கள், ஆளுமை விருத்தி
என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் பிள்ளைகளும் இவ்விடைன்ன்களால் குறித்து விளங்கிக் கொண்டமை பற்றியும் கருத்துக்கள் தெரிவித்ததுடன். நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட இணைப்பாளர் திரு v . குகதசான் அவர்களும் கருத்துக்கள் தெரிவித்ததுடன் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு வரதராஜன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment