மேற்படி விடயம் தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றினை 09.04.2013 அன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனை வடக்கு சமூகப் பராமரிப்பு நிலையத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடாத்தியிருந்தது. இந்நிகழ்வினை மனித உரிமைகள் அன்னக்குலுவின் பிராந்திய இணைப்பாளர் திரு எஸ். மனோகரன் அவர்கள் தலைமை தாங்கி இருந்தார்.
நிகழ்வின் வளவாளராக அருட் தந்தை போல் சட்குணநாயகம் கலந்து கொண்டாதொடர்ந்து சிறுவர்கள் எவ்வாறான சூழ்நிலைகளில் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதனை சட்ட ரீதியாக மட்டுமன்றி உளவியல் ரீதியாக எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் அதனை எவ்வாறு அணுக வேண்டும் எனவும் அதற்கான அடிப்படை உளவளத்துணை திறன்கள் தொடர்பாக விளக்கிக் கூறினார்.
அவற்றுள் குறிப்பாக
தொழில் ரீதியான உறவினை பிள்ளைகளுடன், உறவுகளுடன் , சமூகத்துடன் எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும், என்பது பற்றியும் அதை உறவு இல்லம் என்ற ஒரு எண்ணக்கருவின் ஊடாகவும்
அத்துடன் பிள்ளைகளின் Emotional Coaching மனவெளிச்சியை எவ்வாறு முகாமை செய்வது போன்ற விடயங்களை தகுந்த உதாரணங்கள் மூலமும் விளக்கினார்.மேலும் பிள்ளைகளின் பிரச்சனைகள் உணர்வு பூர்வமாக அவர்களின் கருத்துக்களை உன்னிப்பாக செவிமடுப்பதன் மூலமே தீர்ப்ப்பதட்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment