இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Friday, April 12, 2013

மட்டக்களப்பு நீதவான் நீதிபதி அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு இணைப்புக் கூட்டம்

மட்டக்களப்பு நீதவான் நீதிபதி அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு வேலைக்கானஇணைப்பைவலுப்படுத்துவதற்கான இணைப்புக் கூட்டமானதுகிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஜனாப் முபாரக் அவர்களின்தலைமையில் மதிப்புக்குரிய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி N .M . M அப்துல்லா அவர்களின் பங்குபற்றுதலுடன்  11.04.2013 இன்று பி ப. 3.00 மணிக்கு நீதவான் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.


IMG_2126இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பெண்கள் போலீஸ் பிரிவு பொறுப்பதிகாரிகள், CRPO  மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன், NCPA உத்தியோகத்தர் நிஷா ரியாஸ், மனநல வைத்திய நிபுணர் வைத்தியர் கடம்பநாதன்  சேர் , தொழில் திணைக்கள ஆணையாளர், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால பயிற்சி ஆலோசகர், யுனிசெப் நிறுவன ஆலோசகர் திரு S . ரவிச்சந்திரன், மட்டக்களப்பு நன்னடத்தை அலகு பொறுப்பதிகாரி செல்வி T . ஞான சௌந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் முதல் நிகழ்வாக கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தினால் கடந்த வருடங்களில் மேட்கொள்ளப்பட்ட சிறுவர் பாதுகாப்பு வெளிகள் தொடர்பான அளிக்கை ஓன்று திரு ரவிச்சந்திரன் அவர்களால் செய்யப்பட்டது. அதில்


1. வாழ்வாதார உதவிகள் - 600 பிள்ளைகள்


2. உளவளத்துணை உதவி - 419 பிள்ளைகள்


3. முகாமை செய்யப்பட்ட சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் -
416


4. சிறுவர் இல்லத்தில் இருந்து மீளிணைப்பு செய்யப்பட்ட
பிள்ளைகள் - 221


5. சிறுவர் இல்ல அனுமதி தவிர்க்கப்பட்ட பிள்ளைகள் - 1937


6. சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் -
416


தற்போது சிறுவர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கை - 1294 எனவும் அதில்


1. பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் - 84


2. தந்தையை மட்டும் இழந்தவர்கள் - 415


3. தாயை இழந்தவர்கள் - 167


4. பெற்றோர் பிரிந்தவர்கள் - 196


5. தந்தை பிரிந்தவர் - 318


6. தாய் பிரிந்தவர் - 114IMG_2130


ஆகிய அடிப்படையில் பில்லைகைன் நிலைமை உள்ளதாகவும் தெரிவித்ததுடன் உரிய மாவட்டத்துப் பிள்ளைகள் உரிய மாவட்டங்களிலேயே பராமரிக்கப்படுவதட்கான நடவடிக்கை மேட்கோள்ளப்பட வேண்டும் எனவும் கேடுக்கொண்டதுடன். சிறுவர் மற்றும் இலம்பரயத்தவர் கட்டளைச்சட்டம் - 1939 ஆண்டுக்கானது பற்றியும் விளக்கமளித்ததுடன் அச்சடத்தின் பிரு 17 (01) 17 (02) ஆகியவற்றின் பிரகாரம் ஒரு சிறுவர் துச்பிரயிக்கம் தொடர்பாக 24 மனித்தியலத்திட்குள் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.IMG_2129


தொடர்ந்து நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் உரையாற்றினர் தற்போது சிறுவர் துஷ்பிரயோகத்திட்கு முக்கிய காரணமாக உள்ளது மது பாவனை எனவும் அது தொடர்பாக கூடிய கவனம் எடுத்து நல்ல விழிப்புணர்வு சமூகத்திற்கு சென்றடைய வேண்டும் எனவும் அனைத்து உத்தியோகத்தர்களும் அவர்களது பணியினை திருப்திகரமாக செய்தால் இப்பிரச்சனைகள் குறையும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டார்.


தொடர்ந்து திரு வீ. குகதாசன் அவர்கள் உரையாற்றுகையில் நன்னடத்தை திணைக்களத்தில் இரு விதமான உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும் அதில் பிரதேச செயல்னகளில் உள்ள சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் சமூக மட்டத்தில் துஸ்பிரயோகம் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கான சமுதாய மட்ட சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகளுடன் பணியாற்றுவதாகவும் அச்செயட்பாடுகளுக்கு போலீஸ் உத்தியோகத்தர்களின் உதவி தேவை எனவும் கேட்டுக் கொண்டார்.


 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News