இனிய தோழமைகளே,
உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?
வார்த்தைகளற்ற பெருவெளியில் தனது தேவைகளைச் செவ்வனே பெற்றுக் கொள்கிறதா உங்கள் குழந்தை?அந்தச் சாமர்த்தியத்தில் உங்கள் உயிர்ப்பு கூடுகிறதா, குறைகிறதா
- ?
- வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட குழந்தையின் மேல் கோபம் வருகிறதா? அல்லது ஆகச் சிறந்த பெற்றோராக இல்லையே என்ற ஆற்றாமை ஏற்படுகிறதா?
- சரியாய்க் குழந்தையைப் பராமரிக்கிறோமா என்ற சந்தேகம் தோன்றியதுண்டா?
- சற்றே சற்று உங்களுக்கே உங்களுக்கான இடைவெளி தேவை என்று தோன்றி அதற்காக உங்களைக் கடிந்து கொண்டதுண்டா?
- வேலையைவிட பிள்ளையிடம் அதிக நேரம் செலவிட ஏக்கம் ஏற்படுகிறதா?
- உங்கள் பச்சிளங்குழந்தை உங்களை இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா?
- குழந்தை வளர்ப்பு அயர்ச்சி ஏற்படுத்துகிறதா?
- உங்கள் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே உங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனில், பச்சிளங்குழந்தைக்கு உங்கள் பரிமாற்றம் புரியாமலிருக்குமா?
- உங்கள் குழந்தையும் நீங்களும் ஒருவரையொருவர் முற்றிலுமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
- குழந்தை வளர்ப்பு ஒரு சுமையாக இல்லாமல் இன்சுவையாக இருந்தால் எப்படி இருக்கும்?
- உங்கள் குழந்தையும் நீங்களும் தத்தம் தேவையை எளிதாய்ப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தால்?
- அந்த வளர் அனுபவமே உங்கள் குழந்தையின் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தால்
No comments:
Post a Comment