இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Sunday, April 21, 2013

சூழலை அல்லது வீட்டை அடிப்படையாக கொண்ட கற்கை பிள்ளைகளுக்கு அவசியம்

 sensoryplayforbabiesiceandwater77இயற்கையில் இருந்து ஏராளமான விஷயங்களை, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.ஒரு சிறிய நடைப் பயிற்சியோ, ஒரு பூங்கா விஜயமோ உங்கள் குழந்தைக்கு மிக நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும்.மரங்களை அவர்களுக்குக் காட்டுங்கள். இலைகள், கிளைகள், காய், வேர், உதிர்ந்து விழுந்த காய்ந்த இலைகள் இப்படி ஒவ்வொன்றாக அறிமுகப் படுத்துங்கள். .தென்னை,மாதுளை, செம்பருத்தி என்று வேறுபடுத்திச் சொல்லிக் கொடுங்கள்.
ஒரு பூ, இலை, சிறிய கல் போன்றவற்றைக் காட்டி, இதே போல் இன்னொன்றைக் கொண்டு வா என்று சொல்ல, குழந்தை அதைக் கொண்டு வரும் முயற்சியில் மற்ற அழகான, வித்தியாசமான விஷயங்களையும் கண்ணுற்று ஆச்சரியத்தில் மகிழ்கிறது.. ஒரு பூந்தொட்டியில் உங்கள் குழந்தையை விதையை விதைக்கச் சொல்லி, அவனையே தினமும் தண்ணீர் எடுத்து ஊற்றச் செய்யுங்கள். விதை முளைத்து மேலெழும்புகையில், குழந்தைகள் அவர்களின் தினசரி செயலின் விளைவை, அந்தச் செடியில் கண்டு குதூகலிப்பார்கள்.அந்தப் பூந்தொட்டிக்கு உங்கள் குழந்தையின் பெயரையே நீங்கள் சூட்டலாம்.


பூங்கா, அல்லது பண்ணைக்கு செல்கையில் குழந்தை பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும், சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும், விலங்கையும் படம் பிடித்து, ஒரு ஆல்பத்திலோ, நோட்டிலோ ஒட்டி, அதைக் காண்பிக்கவும்.தான் ஏற்கெனவே ரசித்துப் பார்த்த அனுபவம் என்பதால், குழந்தை அதை நன்கு விரும்புவான். தன்னை, ஆல்பத்தில் காணுகையில், குழந்தையின் சுயமதிப்பும் உயரும்.

ஒரு மழை நாளில் குடை பிடித்து, உங்கள் குழந்தையை நடத்திச் செல்லுங்கள்.மழை பெய்து முடிந்தவுடன் பொருள்கள், கட்டிடங்கள், மரங்கள், வானம் எப்படித் தோற்றமளிக்கின்றன என்பதை குழந்தை உணருவான்..மழையென்றால், ஓடி ஒதுங்கிக் கொள்வதை விட, மழைப் பொழுதில் ரசிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி குழந்தை அறிந்து கொள்கிறது.
விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் வரிசையில் அடுத்து, ஐம்புலன்களைப் பயன்படுத்தி, புலன்களின் திறனை, அறிவுத் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சிந்திக்கும் திறன் இன்னும் வளர்ச்சியடையாத குழந்தைப் பருவத்தில், புலன் அனுபவங்களின் மூலமே எல்லா புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்கிறது. எனவே, அதன் மூளையை “Sensory Processing Machine” என்றும் அழைக்கலாம். புலன் அனுபவ விளையாட்டு (sensory play) என்பது, தொடுதல், நுகர்தல், பார்த்தல்,ருசித்தல் மற்றும் கேட்டல் எனப்படும் ஐம்புலச் செயல்களில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களையோ பயன்படுத்தி விளையாடுவதாகும்..நம் புலன்களே இந்த உலகைப் பற்றி நாம் அறிய உதவும் கடவுச் சொல் என்றும் கூறலாம். ஐம்புலன்களைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு எண்ணற்ற அனுபவங்களைக் கொடுக்க வல்லது.

ஒரு புதிய கலர் பொம்மையைப் பார்த்தலும்,ஒரு பறவையின் ஓசையைக் கேட்பதும், ஒரு பூவை முகர்ந்து பார்ப்பதும்,ஆரஞ்சு ஜீஸை ருசித்துப் பார்ப்பதும், கரடி பொம்மையைத் தொட்டுப் பார்ப்பதும், குழந்தையின் புலன்வழிக் கற்றலைப் பெரிதும் ஊக்குவிக்கின்றன. புலன் அனுபவ விளையாட்டுக்கள், குழந்தைகளின், காக்னிடிவ் திறன், மொழித் திறன், சமூக மற்றும் உணர்ச்சித் திறன் (social and emotional skilaa) உடல் வளர்ச்சித் திறன்களை மேம்படுத்துகின்றன.

சிறிய,பெரிய பாத்திரங்களில் நீரை ஊற்றி, அதை மாற்றி விளையாடுதல், பொட்டுக்கடலை, பீன்ஸ், தக்காளி, வாழைப்பழம் போன்ற பல்வேறு வடிவ பொருள்களைத் தொட்டு விளையாடுதல், அரிசி, காய்கறிகள், பழங்கள், பொம்மைகளை வகைப் படுத்துதல் போன்ற விளையாட்டுகள், காகிதக் கப்பல் செய்து நீரில் விடுதல் போன்றவை, குழந்தைக்கு, அதிகம்/குறைவு, நிரம்பி இருத்தல் / காலியாக இருத்தல், மிதத்தல்/மூழ்குதல் போன்ற அடிப்படைத் தத்துவங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மேலும், இவை, கணிதத் திறனையும், காக்னிடிவ் திறனையும் மேம்படுத்துகின்றன.

சென்சரி விளையாட்டுக்கள், குழந்தையின் மொழித் திறத்தை வளர்க்கின்றன. வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும், அரைகுறையாகத் தெரிந்த வார்த்தைகளை நன்கு வெளிப்படுத்தவும், புதிய வார்த்தைகளைப் பேசவும் ஊக்குவிக்கின்றன.. பக்கத்து வீட்டு தியா, நான்காவது வீட்டு சின்சினா இவர்களுடன் என் மகன் அவர்களது கைகளைப் பிடித்துக் கொண்டு, வட்டமாகச் சுற்றிச் சுற்றி ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடியவுடன் அளப்பரிய சந்தோஷத்தில், புதிது புதிதாக வார்த்தைகளைப் பேசி, அவனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறான்..தான் ரசித்த அனுபவத்தை வார்த்தைகளாக வெளிப்படுதுகையில் மொழித் திறன் வளர்கிறது. மேலும், குழுவாக விளையாடுகையில், இன்னொருவர் பக்கக் கோணம் பற்றி புரிதல் வருகிறது. விட்டுக் கொடுத்தல் , முறை வைத்து விளையாடுதல் போன்றவைகளுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

சென்சரி விளையாட்டுக்கள் குழந்தைகளின் க்ரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பூக்கத்தைத் தூண்டுகின்றன.பொருள்களை அவர்களிடம் கொடுத்து, என்ன செய்கிறார்கள் என்று கவனித்தால், அவர்கள் புதிது புதிதாக விளையாட்டுக்களை ஆடுவர்.எனவே, அவர்களுக்காக நாம் யோசிக்காமல், அவர்களையே யோசிக்க வைப்பது அதிக பலன்களைக் கொடுக்கும். கோடு மட்டும் நீங்கள் போடுங்கள், மீதி ரோடை உங்கள் குழந்தை போட்டுக் கொள்ளும்.

புலன் அனுபவ விளையாட்டுகளுக்குக் கீழ்க்கண்ட பொருள்களைத் தேர்வு செய்யலாம்
தண்ணீர்
மணல்
அரிசி,
மக்ரோனி,
சோயாபீன்ஸ்,
மரத்தூள்
களிமண்
ஃபிங்கர் பெயிண்ட் 
ஜல்லடை
செண்ட்
ஷேவிங் க்ரீம்
நுரை, சோப்பு நீர்க் குமிழிகள்
ஐஸ் க்யூப்கள்
பிளாஸ்டிக் ட்யூப்கள் (நிறுத்துக் குமிழிகளுடன்)
பல்வேறு அளவில் பாத்திரங்கள்
புனல்
ஸ்பூன்கள், கப், டம்ளர்
பொம்மை வீடு ஃபர்னிச்சர்கள்
பிங்-பாங் பந்துகள்
ஸ்ட்ரா குழல்கள்
மீன் தொட்டிக் கூழாங்கற்கள்
வாளி மற்றும் டப்பா
மற்றும் உங்கள் வீட்டில் இருக்கும் பொருள்கள், உங்கள் வசதியைப் பொறுத்து…

ஐம்புல விளையாட்டுக்களுக்கு சில உதாரணங்கள்:
தொடுதல்:

தசைகளைப் பயன்படுத்தும் விளையாட்டுக்கள், மெத்தையில் குதிப்பது, குழுவாக விளையாடுவது, (ரிங்கா ரிங்கா ரோசஸ், பிஸ்கட் பிஸ்கட் என்னா பிஸ்கட்)
கயிறு இழுப்பது,,முயல், தவளை மாதிரி நடிப்பது, ஆணை ஏறுதல், ஐஸ் க்யூப்ஸ்களைத் தொடுதல், சோப்பு நுரையைத் தொடுதல், பல்வேறு வகையான பொம்மைகளைத் தொட்டு உணருதல்.

பார்வை:
பல்வேறு வகையான வெளிச்சங்களை அறிமுகப் படுத்துதல், மெழுகுவர்த்தி வெளிச்சம், டார்ச் வெளிச்சம், இருட்டில் கைகளைக் கொண்டு பொம்மை , விலங்கு உருவங்கள் காண்பித்தல், கலர் கலரான நைட் லேம்ப்கள்,வண்ணங்களைக் கொண்டு விளையாடுதல், கலர்க் கரைசல்கள் விளையாட்டு, பார்வைத் திறனை சோதிக்க, பலூன், பந்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கச் செய்தல், பில்டிங் ப்ளாக்ஸ் எனப்படும் சேர்க்கும் விளையாட்டுக்கள், புதிர்கள், ஒளிந்து விளையாடுதல்

கேட்டல்:
இசையை, பாடலைக் கேட்டல், இசைக் கருவிகளை இசைக்க வைத்தல், விலங்கு, பறவைகளைப் போல மிமிக்ரி செய்தல், அமைதியாக அமர்ந்து வெளியில் இருந்து கேட்கும் ஒவ்வொரு சத்தத்தையும் என்னவென்று வகைப் படுத்தச் சொல்வது, ஒலி அளவைக் குறைத்து, பின் மிகுதியாக்கி, வேறுபாட்டை உணரச் செய்தல்
மியூசிக்கல் சேர் விளையாட்டு

நுகர்தல்:
சமையலறையில் இருக்கும் மணமிகு பொருட்களை அடையாளம் காணச் செய்தல், வெங்காயம், பூண்டு, ஏலக்காய், எலுமிச்சை போன்றவை. பாதுகாப்பான செண்ட், கற்பூரம் இவைகளை நுகரச்செய்தல், 
தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பயிர்களின் வாசனையை நுகரச் செய்தல், பூக்கள், இலைகளின் வெவ்வேறு மணத்தை அறியச் செய்தல்

ருசித்தல்:
குளிர்ந்த உணவு மற்றும் மிதமான சூடாக இருக்கும் உணவு, ஸ்ட்ரா வைத்து உறிஞ்சும் ஜீஸ், முறுக்கு போன்ற கடித்து சுவையறியும் உண்டி, பழ வகைகள் மற்றும் கேரட் போன்ற காய்கறிகள்,,இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் போன்றவைகளுக்கு உதாரணங்கள் கொடுத்து, அவர்க்ளை இனங்கண்டறியச் செய்தல்
புலன் அனுபவ விளையாட்டுக்களை மேற்கொள்கையில் சில முக்கிய முன்னெச்சரிக்கைகள்:
• அபாயகரமான, ஆபத்தான கூரான பொருள்கள், குழந்தை விழுங்கி விடக்கூடிய அபாய பொருள்களைத் தவிர்க்கவும்.
• தண்ணீர் விளையாட்டு, திரவங்க்ளை மாற்றுதல் போன்றவைகளின் போது ஒரு பெரிய சாக்கு அல்லது வெளிப்புற மேட் போட்டுக் கொள்ளவும்.
• வெப்பம், குளிர் வகை உணவு வகைகளை முதலில் நீங்கள் தொட்டு உணர்ந்து விட்டு, பின் அவர்களை செய்ய அனுமதிக்கவும். 
• உடையும் பொருள்களைத் தவிர்க்கவும்.
• எல்லா விளையாட்டுகளையும் ஒரே சமயத்தில் விளையாடாமல், பகுதி பகுதியாக பிரித்து விளையாடலாம்.
• எல்லாவற்றையும் நீங்களே சொல்லிக் கொடுக்காமல், அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை கவனியுங்கள்
• முதலில் இருந்து கடைசி வரை நீங்கள் ,குழந்தை கூடவே இருப்பது எந்த வித அசம்பாவீதங்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

டாக்டர்.பிரகாஷ்.
www.rprakash.in

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News