இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Sunday, April 21, 2013

புது விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற 5 வயது விஞ்ஞானி



இங்கிலாந்து நாட்டில் பக்ஸ்டன் நகரைச் சேர்ந்த சாம் என்ற 5 வயது சிறுவன், புதிய விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளான்.இன்னும் சொல்லப் போனால், அவன் 3 வயதிலேயே இதை கண்டுபிடித்து விட்டான். அப்போதெல்லாம் அவனது தந்தை இரண்டு துடைப்பங்களை பயன்படுத்தி வந்தார்.பெரிய பொருள்களை பெருக்க ஒரு துடைப்பமும், தூசி போன்ற சிறிய பொருள்களை பெருக்க மற்றொரு துடைப்பமும் பயன்படுத்தி வந்தார். 
அதை பார்த்த சாம், ஒரு ரப்பர் பாண்டு எடுத்து வந்து, இரண்டு துடைப்பங்களையும் ஒன்றாக கட்டி போட்டான்.இதன் மூலம் புதிய வகை துடைப்பத்தை கண்டுபிடித்தான். இதைக் கொண்டு, பெரிய பொருள்களையும், தூசி போன்ற சிறிய பொருள் களையும் ஒரே நேரத்தில் பெருக்கலாம்.
தனது கண்டுபிடிப்பை தந்தையை அழைத்து காண்பித்தான். அசந்து போன அவர், அவனுக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். 5 வயதிலேயே கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றவன் என்ற பெருமையை அச்சிறுவன் பெற்றுள்ளான்



No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News