இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Saturday, April 27, 2013

கொஞ்சம் சிந்திப்போம்

teenage_depression_or_moodiness_oq2ld1. இளம் வயது 

  பாயும் வயது, 16 வயது, 3 பேருமே ஒரே வயது பிள்ளைகள்.. அல்லது ஆரம்ப நிலை வாலிபர்கள்.. 

 பெற்றோர்களே உசார் - தயவு செய்து உங்கள் 16 ஐ சிந்திக்காதிர்கள்.. அது பழைய புத்தகம் ஆகி பல நாள்.. உங்கள் பிள்ளைகள் புதிய புத்தகங்கள்.. இவற்றை கொஞ்சம் அறியுங்கள்.. பழைய புத்தகம், பல வருட அனுபவம் என்று நீங்கள் ஆயிரம் சிந்தித்து கொண்டு இருந்தால், அடுத்த தலைமுறை பிள்ளைகளின் பக்கங்களில் அந்நியன் ஒருவனின் ஆதிக்கமே இருக்கும்.. பெற்றோர்களே உஷார்..

 

2. சினிமா 

 

ரஜினியா - கமலா?, விஜயா - அஜிதா? என்று யோசிக்கும் நாம், சினிமா இளைஞர்களுக்கு நன்மையா? தீமையா? என்று அண்மைய காலத்தில் விவாதிக்க மறந்து போய் விட்டோம்.. அது இளைஞர்களுக்கு என்ன சொல்லி கொடுக்கிறது என்பதையும் அறியாமல் இருந்து விட்டோம்..

 

வாக்கு மூலம் கொடுத்து இருக்கும் இளைஞன் "குருவி" மற்றும் "அயன்" படங்களை பார்த்தே தாங்கள் கொலைக்கான முன்மாதிரியை எடுத்ததாக சொல்லி இருக்கிறான்.

 

பெற்றோர்களே உசார் - இந்த இடத்திற்கு அப்பாவே பொருத்தம், அப்பா நல்ல நண்பன் என்று பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய இடம்.. படம் பார்க்காதே, என்று ஏசுவதை விடுத்து அவன் விருப்பத்தை அழுத்தமில்லாமல் நகர்த்தி செல்லுங்கள். அதிகம் கட்டுபடுத்தும் (STRICT) தகப்பனின் பிள்ளைகளே அனேகமாக அலைந்து திரிந்து ஸ்கூல், காலேஜ் கட் பண்ணி தியேட்டர் போகிறார்கள்..   பெற்றோர்களே உஷார்..

 

3. கைபேசி

 

கொலை திட்டத்தை ஸ்டெப் by ஸ்டெப்  ஆக நகர்தத அவர்களால் பயன் படுத்த பட்ட கொடூரமான ஆயுதம். 


பெற்றோர்களே உசார் -  கட்டாயம் 18 வயதிற்கு உள்ளே உங்கள் பிள்ளைகளும் சரி, அவர்கள் கைபேசியும் சரி உங்கள் கட்டுபாட்டிலேயே இருக்க வேண்டும்.. செல் போன் உறவுகள் நீர் ஊற்றி வளரும் மெகா சைஸ் ஆலமரம் போல..

 ஆரம்பத்திலே கட்டு படுத்தினால் இரு தரப்பிலும் காயம் குறைவு.. ஏனோ தானோ சின்ன பையன் / பொண்ணு தானே என்று இருந்தால் விதை விருட்சமாகும் போது வெட்டி எறிவதும் கடினம், காயமும் அதிகம்.. பெற்றோர்களே உஷார்..

செல்லை விட பெற்றோர்கள் வாலிபர்களுக்கு நல்ல நண்பர்களாக மாறுவதே நலம்.. 

4. காதல் 

சந்தோசம் நிறைந்த காதல், இன்று வேகம், அறிவீனம், போட்டி, அழகு என்று ஏகப்பட்ட இச்சை காரணங்களால் நிறைந்து கிட்டத்தட்ட சாக்கடை வாடையோடே பயணம் வருகிறது.. 




பெற்றோர்களே உசார் -  இளைஞருக்குள்ளே ஒற்றை காதல் காலம் எல்லாம் என்றோ மலையேறி போய் ஒரே நேரத்தில் 5, 6 காதல் வைத்து கொண்டு செல்லும் கெப்பா சிட்டியை இந்த கால தொழில் நுட்பமும், சினிமாவும், அறிவும் கொடுத்து விடுகிறது.

"அந்த பொண்ணோட பேசுறத நேர்ல பார்த்தேன்?" என்று அம்மா ஏசி முடிவதற்குள் "I LOVE YOU" என்று காதலிக்கு SMS பண்ணி விடுவான். வீட்டில் புரிந்து கொள்ள யாரும் இல்லை.. அவனுக்கு காலை வரை SMS.ஏ துணை..

 அம்மாவிற்கும் சந்தோசம் ரோட்டில் கதைத்து திரியும் மகன் இப்போது கதைப்பது இல்லை.. யாரும் மகனை வைத்து தன்னை பளிக்க முடியாது. ஆனால் அங்கு மகனோ SMS, இற்கும் பேஸ்புக்கிற்கும் பலியாகி கொண்டு இருப்பான்.. பெற்றோர்களே உஷார்.. 

கடைசியாக 

இந்த இடத்தில ஒன்று சொல்வது பொருத்தமாக இருக்கும். டெல்லியில் ஒரு பெண் வன்புணர்வாகி ஒரு ஆண் "குற்றவாளி" ஆகி விட்டால், அதை சுற்றி வாழும் நம்ம சமுக நல தொண்டர்களும், பெண்ணுரிமை வாதிகளும் பதிலுக்கு தாங்கள் உணர்ச்சியில் பொங்கி தங்கள் பங்கிற்கு ஆளாளுக்கு  "பயங்கர  கொலைகாரர்" ஆகி விடுகிறார்கள்.

ஆனால் அப்படி பட்ட முட்டாள் தனத்திற்கு இது நேரமல்ல என்று நினைக்கிறேன்..



 

ஏதோ 4 வரும் கொலை வெறியோடு பிறந்தவர்களோ, அலைந்தவர்களோ அல்ல.. ஏதோ அழுத்தம், முட்டாள் தனம், அறியாமை, எதிர் காலத்தை குறித்த யோசனை அற்ற நிலை.. இன்னும் எவ்வளவோ.. 

 

மேலுள்ள வாக்கு மூலத்தில் அவர்களின் வாழ்வை தொழில் நுட்பம் எத்துணை அதிகம் மாற்றி விட்டிருக்கிறது. (இத்தனைக்கும் அது ஓரளவே அபிவிருத்தி அடைந்த நகரம் அது) பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்களின் இடைவெளி நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது. ஒரு வேளை மேலே குறிப்பிட்டதை போல பாரிய தொழில் நுட்ப வளர்ச்சியாக இருக்கலாம்.

 

அந்த பெண்ணை கேவலமாய் திட்டுவதோ, பேஸ்புக்கிலும் பிற சமுக தளங்களிலும் அவர்கள் படங்களை இட்டு 1 சேர் = 100 செருப்படி கொடுப்பதன் மூலம் பெரிய புடலங்காய் சமுக ஆர்வலர்கள் நாம் ஆகாமல்,

கொஞ்சம் சிந்தித்து..

 

"விளைந்த களை முளைத்த இடத்தை தேடி அழிப்போம்"

 

 நன்றி 

 

ஹாரி R   

 

பின் குறிப்பு - அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. 

1 comment:

N.Arul said...

This is very good for our future generation at the sometimes we need to work hard with our society. Thanks kugathasannan. Arul

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News