காத்தான்குடி பிரதேச சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழுக் கூட்டமானது 08.04.2013 இன்று மு. ப. 10.00 மணிக்கு பிரதேச செயலாளர் ஜனாப் S .H . முசம்மில் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், கல்வித்திணைக்களம், போலீஸ் திணைக்களம், மற்றும் தொடர்புபட்ட பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டோர் அனைவரினதும் சுய அறிமுகம் இடம்பெற்றது. தொடர்ந்து கூட்டத்தினை நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சிறுவர் உரிமை மேம்பட்டு உத்தியோகத்தரும் பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுவின் செயலாளருமான திரு செ. சக்திநாயகம் அவர்கள் முன்னெடுத்துச் சென்றார்.
தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றுகையில் கடந்த காலங்களில் இக்குழு சுமார் 05 கூட்டங்களை நடாத்தியு ள்ளதாகவும் சிறுவர் தினம், மலர் வெளியீடு போன்ற நிகழ்வுகளைச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் இவ்வருடமும் குழு மூலமாக சிறுவர் சார்ந்த பிரச்சனைகள், சிறுவர் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த வகையில் நன்னடத்தை காரியாலயத்தினால் சிறுவர் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் 25, பாடசாலை இடை விலகல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் - 12 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 06 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை
1. தாய்மார் வெளிநாடு செல்லுதல்
2. பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தல்
போன்ற பிரச்சனைகளும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பிரதேச செயலார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலங்களில் முதல் கட்டமாக தங்களது பிரதேச உத்தியோகத்தர்கள் மூலம் இதற்கான நடவடிக்கையினை எடிஉக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாலர் பாடசைகள், இணையசேவை நிலையங்கள், டியூஷன் சென்டர்ஸ் போன்ற வற்றையும் கண்காணிக்க வுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக திரு ஷக்தினாயகம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் ன்றி தெரிவித்ததுடன் . என்னய்யா பிரதேசங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றுவது போன்று இப்பிரதேசத்தில் கடமையாற்றுவது இல்லை எனவும் பிள்ளைகளின் நலன் கருதி நிறுவனங்கள் இப்பிரதேசத்துக்கும் பணியாற்ற வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் .
No comments:
Post a Comment