ஏறாவூர் நகர் பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டம் 08.04.2013 இன்று பி. ப. 2.30 மணிக்கு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி அப்துல் காதர் ரமீஷா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வு கூட்டத்தில் பங்கு பற்றிய அதிகாரிகளினது சுய அறிமுகத்துடன் ஆரம்பமானது. இதில் பாடசாலை அதிபர்கள், கொட்டக் கல்வி அதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள், போலீஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலைக் உத்தியோகத்தர்களும் , மாவட்ட செயலக CRPO இணைப்பாளர், நன்னடத்தை உத்தியோகத்தர் திரு S . மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டதுடன். கூட்டத்தை உரிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பிரிவு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி சபுஷ் பெஹம் அவர்கள் கொண்டு நடாத்தினர்.
தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றுகையில் பிள்ளைகளின் உரிமைகள் சார்ந்து அவர்களின் பாதுகாப்பு குறித்துசேவை செய்வதற்கு இவ்வாறன கூட்டங்கள் அவசியம் எனவும் அந்த வகையில் இக்கொட்டத்திட்கு வருகை தந்த அனைவரும் சேர்ந்து அக்கபூர்வமன் முடிவுகளை எடுக்க வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை குறைப்பதில் தொடர்பு சாதனங்களுக்கு அதிக பங்கு உண்டு எனவும் துஸ்பிரயோகம் செய்த நபர் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தொடர்பு சாதனங்களில் வெளிப்படுத்துவதன் மூலம் துஸ்பிரயோகம் தொடர்பில் நல்ல வீப்புணர்வு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதில் பாடசாலை அதிபர்கள் மூலம் கிராம் சேவையாளர்கள் பாடசாலை இடைவிலகல் தொடர்பான தகவல்களை மாதாந்தம் பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதில் தற்போது 06 பாடசாலைகளில் இருந்து 37 மன்னவர்கள் இடை விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் அவை தொடர்பாக பாடசாலை மீளினைத்தல், தொழில் வழிகாட்டல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தெரிவித்தார் .
மற்றும் டியூஷன் சென்டர்ஸ், நெட் கபே, சிறுவர் இல்லங்கள், மத்ரேசா போன்ற அமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்பதுடன் அவைகள் தொடர்பான புகைப்பட சமர்ப்பணம் ஒன்றும் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு மணிவண்ணன் அவர்களால செய்யப்பட்டது. இது தொடர்பாக கலந்துரயாடப்பட்டத்தில் கொட்டக் கல்வி அதி காரி அவர்களது தலைமையில் குழு ஓன்று அமைக்கப்பட்டு அவைகளை கண்காணிப்பது எனத் தீர்மாநிக்கப்பட்டது.
No comments:
Post a Comment