போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு பயிற்சி09.05.2013 இன்று போலீஸ் உத்தியோகத் தர்களை பயிற்று விப்பதற்கான (In Service Training Unit) சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக NCPA உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ் அவர்களும் சிங்கள மொழி பெயர்ப்பாளராக நானும் (வீ குகதாசன்) கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள சிறுவர் பெண்கள் போலீஸ் பிரிவில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர்கள் பயிலுனர்களாக கலந்து கொண்டனர்.
இதில் குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உருவாக்கம் ( 1998 - 14 ஆம் பிரிவு) தொடர்பான சட்ட விளக்கங்களும் அதனது பொறுப்புக்கள் தொடர்பாகவும் உரையாற்றியதுடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு திகார சபையினால் வழங்கப்படும் பிள்ளைகளுக்கான உதிவிகள், வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.மேலும் 2012 களில் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைத்த சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் தொடர்பான விபரங்கள், அதற்கான காரணங்கள் ட்டிஹோடர்பான புள்ளி விபரங்களும் சுட்டிக் காட்டப்பட்டதுடன் பிள்ளைகளின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் நன்னடத்தை திணைக்களம், NCPA போன்றனவும் குற்றமிளைத்தவருக்கு சட்டரீதியான தண்டனையினை பெற்றுக் கொடுப்பதற்கான ரீதியில் பொலிசும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே முழுமையானது நீண்ட கால நோக்கில் நிலைத்திருக்க கூடியதுமான ஒரு தீர்வை பில்லைககுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு செவைத்தினைக்களத்தின் உதவித்திட்டங்கலான
01. நேன திரிய
02. கெப்பகரு
03. விபத்து, வைத்திய உதவி
04. இரட்டை பிள்ளைகளுக்கான கொடுப்பனவு
05. கல்வி உபகரண உதவி
போன்ற விடயங்கள் தொடர்பாகவும் பிரதேச மட்டங்களில் இணைப்பு செய்யப்பட்டுள்ள சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் கடமைகள், பொறுப்புகள் தொடர்பாகவும் சரபோ இணைப்பாள திரு வீ. குகதாசன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment