இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Sunday, July 18, 2021

வீட்டிற்குள் எவ்வாறான செடிகளை வளர்ப்பது ஆரோக்கியமானது ...?

நாம்ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நமது வீட்டில் உள்ள காற்று தூய்மையாக இருக்க வேண்டும். அந்த காற்றை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பது நமக்குத் தொியாது. ஆனால் இயற்கையே நமது வீட்டில் உள்ள காற்றைத் தூய்மையாக்கிவிடும் என்பதே உண்மை. பொதுவாக நமது வீடுகளில் கற்றாழை செடியை வளா்த்து வருவோம். அவற்றைத் தவிா்த்து இன்னும் பல செடிகளை நமது வீட்டில் வளா்த்து வந்தால், அவை நமது வீட்டிற்குள் இருக்கும் காற்றை தூய்மைப்படுத்திவிடும்.
சிலா் தங்களது வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவா். ஏனெனில் வீடு அசுத்தமாக இருந்தால், அது தங்களது குழந்தைகளைப் பாதிக்கும் என்று அஞ்சுவா். ஆனால் தங்களது வீட்டில் உள்ள காற்று மாசுபடுவதை அவா்களால் தடுக்க முடியாது. இந்நிலையில் வீட்டில் உள்ள காற்றைத் தூய்மைப்படுத்த, ஒரு சில தாவரங்களை வீட்டிற்குள் வளா்க்கலாம் என்று அறிவியல் அறிஞா்கள் பாிந்துரை செய்கின்றனா். இந்த வீட்டுச் செடிகள் வீட்டிற்குள் உள்ள காற்றை தூய்மைப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், நமது வீடுகளையும் அழகுபடுத்துகின்றன. நமது பகுதிகளில் கிடைக்கக்கூடிய வீட்டுச் செடிகளை வாங்கி, அவற்றை நமது குழந்தைகளை வைத்தே வளா்க்கச் செய்யலாம். இந்த பதிவில் நாம் என்னென்ன செடிகளை நமது வீடுகளில் வளா்க்கலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. ஸ்பைடா் செடி 
ஸ்பைடா் செடியை வீட்டில் வளா்த்து வந்தால் அது வீட்டிற்கு அழகு கொடுக்கும். அதோடு நமது வீட்டில் உள்ள காற்றில் கலந்திருக்கும் நச்சுக்கள், சைலீன் மற்றும் காா்பன் மோனாக்ஸைடு போன்றவற்றை சுத்தப்படுத்தும். பொதுவாக காற்றில் உள்ள நச்சுக்கள் நமது தோலை பாதிக்கும் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே வீட்டில் உள்ள காற்றைத் தூய்மைப்படுத்த ஒரு சிறந்த கருவியாக ஸ்பைடா் செடி இருக்கும். மேலும் இந்த செடியால் வீட்டில் வளரும் விலங்குகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்



2. பாம்புச் செடி
 (Snake plant) வீட்டில் உள்ள காற்றில் கலந்திருக்கும் ஃபார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருள்களை சுத்தப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு சாியான கருவி பாம்புச் செடியாகும். இந்த பாம்புச் செடி மாமியாாின் நாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த செடி நமது வீட்டிற்கும், வீடுகளில் உள்ள அறைகளுக்கும் புத்துணா்ச்சியை வழங்கும்.


3. ரப்பா் செடி 

ரப்பா் செடியின் மிக முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால், அது அதிகமான அளவு ஆக்ஸிஜனை வெளியேற்றும். ஆகவே இந்த செடியை வீட்டிற்குள் வளா்த்து வந்தால், அது நமது வீடுகளில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்துவதோடு, வீட்டில் உள்ளவா்களுக்கும் புத்துணா்ச்சியை அளிக்கும். இந்த செடி வீட்டிற்கும் அழகு சோ்க்கும்.


4. கோல்டன் போதோஸ் 

கோல்டன் போதோஸ் என்ற செடியானது ஒரு கொடி வகையைச் சாா்ந்த தாவரம் ஆகும். இந்த செடி சாத்தானின் கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செடி படா்ந்து வளா்வதற்கு அதிக அளவு சூாிய வெளிச்சம் தேவையில்லை. இந்த செடியை வீட்டிற்குள் எந்த பகுதியிலும் வைத்து வளா்க்கலாம். மேலும் இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. இந்த செடியானது காற்றை வடிகட்டுகிறது. அதோடு காற்றில் மாசுபடுத்தக்கூடிய வாகனங்களில் இருந்து வரும் வேதிப் பொருள்களை நீக்குகிறது. அதனால் இந்த செடியை வீட்டில் வளா்த்து வந்தால், வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்


5. பீஸ் லில்லி

 பீஸ் லில்லி என்ற செடியானது பாா்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதனால் வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவா்கள் இந்த பீஸ் லில்லி செடியை தங்களது வீடுகளில் வளா்க்கலாம். இந்த செடி வீட்டிற்கு அழகு தருவதோடு, காற்றில் கலந்திருக்கும் நச்சு வாயுக்களையும் நீக்கும் சக்தி கொண்டது. மேலும் நமது வீட்டைச் சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் பொருள்களில் இருக்கும் தீங்கு இழைக்கக்கூடிய நச்சுக்களான பென்சீன், சைலீன், டொலுவீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் ஆகியவற்றை அழிக்கும் சக்தி கொண்டது.



6. இங்கிலீஸ் ஐவி 

நமது வீட்டில் புதிய குழந்தை பிறந்திருக்கும் போது அல்லது வீட்டிற்கு புதிதாக வீட்டு விலங்குகளை வாங்கி வளா்க்கும் போது, புதியவா்களின் மலத்தின் மூலம் நமது வீட்டில் கிருமிகள் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த கிருமிகளை அழிக்க மிக எளிமையான வழி இங்கிலீஸ் ஐவி செடியை வளா்ப்பது ஆகும். இந்த செடியானது மலத்தின் மூலம் பரவும் கிருமிகளை அழிப்பதோடு, நமது வீட்டிற்கு அழகையும் தருகிறது.


7. வீப்பிங் ஃபிக் 

வீப்பிங் ஃபிக் என்ற செடியின் பெயா் கேட்பதற்கு சோகமாகத் தொியும். ஆனால் இந்த செடி வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்துவதில் அதிகமான வீாியம் கொண்டது. காற்றை சுத்தப்படுத்தி, மேஜிக் கிருமிகளை அழிக்கவல்லது. தரை விாிப்புகள், மெத்தைகள் மற்றும் திரை சீலைகள் ஆகியவற்றில் கிருமிகள் மற்றும் வேதியல் நச்சுப் பொருள்கள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வீப்பிங் ஃபிக் செடியை வளா்த்து வந்தால் அந்த செடியின் இலைகள் இந்த கிருமிகளையும், நச்சுப் பொருள்களையும் அழித்துவிடும். ஆகவே நமது பாா்வையில் படும்படி இந்த செடியை நமது வீட்டில் வைத்து வளா்க்கலாம். அது நமது வீட்டை ஒளிர வைக்கும்.


தொகுப்பு 
வீ. குகதாசன் 


No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News