சிறுவர்கள் எவ்வாறு இத்தாக்கதினுள் அகப்படுகின்றனர்பொதுவாக சிறுவர் துஸ்பிரயோகம் என்ற நிலையில் இந்த மனித வஞ்சக் கடத்தலானது சிறுவர்களை நேரடியாகவும் அதேவேளை மறைமுகமாகவும் தாக்குகின்றது. குறிப்பாக சிறுவர்களின் நலனில் தாக்கத்தை விளைவிக்க கூடியதான செயற்பாடுகள் அனைத்தையும் நாம் சிறுவர் பிரயோகம் என்கின்றோம்.
குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் டிஜிட்டல் யுகம் ஒரு கணினி மற்றும் வெப்கேமராவை பயன்படுத்தி நேரலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஒரு சுரண்டல் வடிவத்தை தூண்டியுள்ளது, அல்லது ஒரு மொபைல் போன்.
இதன் பொருள் உலகில் எங்கிருந்தும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் சிறுவர்களை சுரண்ட முடியும், மேலும் இணையத்தின் ஒரு தனிநபரின் அந்தரங்கமான விடயங்களில் மூக்கை நுழைக்க முடியாது என்ற தன்மையால் இன்னும் பாதுகாக்கப்படுகிறது. இந்த கொடூரமான குற்றங்கள் சர்வசாதரணமாக இருக்கலாம் ஆனால் தாக்கம் உண்மையானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளுடன் நிகழ்வது நாம் எல்லோரும் அறிந்தவிடயமே.
இது ஒரு புறம்
இருக்க தந்தைக்காக தவிக்கும் மனைவி
பிள்ளைகள் அவர் போய் சேர்ந்திருப்பார இருக்குறார இல்லையா என்ற பரிதவிப்பில் தாவும்
உளத்தாக்கங்கள், ஏமாற்றங்கள், அவநம்பிக்கைகள் ஏராளம்.
குடும்பதுடன் சேர்ந்து சிரியாவிலிருந்து
துருக்கி நோக்கி சட்டரீதியற்ற முறையில் கள்ளத் தோணியில் புறப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மூன்று வயது சிறுவனான
அய்லன் குர்தி என்ற
சிறுவனின் இறப்பு சோகம் உலகளாவிய ரீதியில் பேசப்பட்ட பெரும் சோகம்
கடற்கரையில் மிதந்த அவனது சடலம் சொன்ன சோகத்தை உணராத மனிதர் உலகின் எந்த
மூலையிலும் இருக்க முடியாது. இவ்விடயம் சர்வதேச
நீதி மன்றம் கொண்டு செல்லப்பட்டு உரிய தரப்பினர் தப்பித்த தந்தை உட்பட சட்ட
விரோத ஆட் கடத்தலில் குற்றச்சாட்டின் பெயரில் அனைவரும் தண்டிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
வெளி நட்டு
வேலைவாய்ப்பு பற்றிய சட்டதிட்டங்கள், விதி முறைகள், நியமங்களை
அறியாதவர்கள் என்று எவரையும் நாம் சொல்லிவிட முடியாது எல்லாவற்றையும் அரசு
முறையாகத தான் வகுத்து வைத்திருக்கின்றது. சட்டரீதியான முறைமை பல படிமுறைகளை சரியாக தாண்ட வேண்டிய சவாலுக்கு அப்பால் பலவிதமான
இலஞ்சம் மூலம் போலியான முறைமைகளை உண்மையான முறைமைகளாக்கி கவர்ந்திழுத்து ஒரு சிலபோலி முகவர்களால் மனிதன் விற்கப்படும்
நிலை நிதர்சனமகின்றது. ஏன் தாய் தந்தையை இந்த கொடூரத்தால் இழந்த நிலையில் பிள்ளைகள் நிர்கதியாகுகின்ற
நிலைமைகள் கூட நிகழ்ந்திருக்கின்றது. மனிதன் பொருள் அல்ல உயிர் என்பதை சகலரும்
அறிக,தெளிக, துணிக உணமையான சொந்த முயற்சி ஒன்றிற்காக.
இதற்கப்பால் நிகழ்நிலை அல்லது நேரலை என்ற ரீதியில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துன்புறுத்தல் ஆபாசப் படங்கள் (CSAM) அல்லது வீடியோக்கள் பதிவாகியுள்ளன.
Child Sexual Assault Material (CSAM) என்பதன் சட்ட வரையறை நாட்டிற்கு நாடு மாறுபடும் அதே வேளையில், பொதுவான விளக்கம் என்னவெனில்.ஏதாவது ஒரு படம் அல்லது காணொளி மூலமாக பாலியல் சார்ந்த ஈடுபாடு ஒன்றை வெளிக்காட்டுவது. அல்லது பாலியல் சார்ந்த செயற்பாடு ஒன்றிற்காக தகாத உருவப் படங்களை அல்லது காணொளியினை பயன்படுத்துவது என அர்த்தம் கொள்ளப்படுகின்றது.
மேலும் பிள்ளைகளின் நலன் சார்ந்து உரிமை சார் அணுகு முறையுடன் பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தினை எமது நாடு ஏற்று அங்கீகரித்ததன் பிராகாரம் அதிலுள்ள உள்ளபடி சிறார்களின் உரிமைகளை உறுதி செய்வது கட்டாயமாகும்.
அந்த வகையில்
உறுப்புரை 09 – பெற்றோரிடமிருந்து பிரிக்காப்பாடல்
உறுப்புரை 20 - குடும்பங்களற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு
ஆகியவற்றின்பால் கவனம் செலுத்தப்பட்டு இவ்வாறான மனித வஞ்சக் கடத்தலுக்கு அப்பால் பிள்ளைகளின் நலன் கருதி சகலவிதமான துன்புறுத்தல்களில் இருந்து தடுத்து பிள்ளைகளை பாதுகாப்பது அரசின் கடப்படாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தமாக பிள்ளைகளின் நலன் என்பது எமது நாட்டின் மீயுயர் சட்டமான அரசியமைப்பின் ஆறாவது அத்தியாயத்தின் 27 உறுப்புரையின் 12 வது பிரிவின் பிரகாரம் சிறுவர் நலன் தொடர்பில் அரசானது குடும்பத்தை சமூகத்தின் அடிப்படை கூறாக ஏற்றுக் கொள்ளுதலும், பாதுகாத்தாலும் வேண்டும். என வியாக்கியானம் கொள்ளப்படுவதில் இருந்து அரச தரப்பின் வினைதிறனான கடப்பாடு அல்லது தலையீடு என்ன என வலியுறுத்துவதை நாம் விளங்கி கொள்ள முடியும்.
ஆக்கம்
வீ. குகதாசன்
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்
தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்
No comments:
Post a Comment