எனினும் மழைக் காலத்தில் நமது குழந்தைகளுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக நீா் மூலமாக பரவும் மஞ்சள் காமாலை மற்றும் டைஃபாய்டு போன்ற நோய்கள், நுளம்புகள். இலயான்கள் மூலமாகப் பரவும் டெங்கு மற்றும் மலோியா போன்ற நோய்கள் போன்றவை மழைக்காலத்தில் மிக எளிதாகக் குழந்தைகளைத் தாக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் உணவுகள் மூலமாகப் பரவும் நோய்களும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதாவது கெட்டுப் போன உணவுகள் அல்லது கெட்டுப் போனத் தண்ணீாின் மூலம் பாக்டீாியாக்கள், வைரஸ்கள் மற்றும் நோய்க் கிருமிகள் பரவுகின்றன. மற்ற காலங்களைவிட மழைக் காலத்தில் உணவுகள் மூலமாக ஏற்படும் நோய்கள் 10 மடங்கு அதிகம் ஆகும்.
மழைக்காலத்தில் வரக்கூடிய பொதுவான நோய்கள்
மழைக்காலத்தில் குளிா் காய்ச்சல், டெங்கு, மலோியா, டைஃபாய்டு மற்றும் பிற வைரஸ் தொற்றுகள் போன்ற நோய்கள் பொதுவாக ஏற்படுகின்றன. இந்த நோய் பரவலுக்கு தண்ணீா் தேங்கி இருத்தல், நீா் நிலைகளில் உள்ள தண்ணீா் கெட்டுப் போதல், சுகாதாரம் இல்லாத நிலை, மழை நீா் குட்டைகள் மற்றும் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சளி துளிகள் மற்றும் எச்சில் துளிகள் மூலம் குளிா் காய்ச்சல் பரவுகிறது. டெங்கு மற்றும் மலோியா போன்ற நோய்கள் நுளம்புகள் கடிப்பதன் மூலம் பரவுகின்றன. வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள், சுத்தமில்லாத தண்ணீரைக் குடிப்பதனால் பரவுகின்றன.
அறிகுறிகள்
சளி, இருமல், தும்மல், மூச்சிரைத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, உடல் வலி, காய்ச்சல் மற்றும் உணவு உண்ணாது இருத்தல் போன்றவை குளிா் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். இதைத் தவிர பிற நோய்களிலும், மேற்சொன்ன ஒரு சில அறிகுறிகள் தென்படும். பெரும்பாலான இந்த நோய்த்தொற்றுகளில் இருந்து குணமடைவதற்கு, சுய கட்டுப்பாடும், அதன் அறிகுறிகளுக்கு ஏற்ற மருத்துவ சிகிச்சையும் மற்றும் உடலில் இருந்து தேவையான நீரை வெளியேற்றுவதும் தேவையாய் இருக்கிறது. கீழே குழந்தைகளை நோய்கள் இல்லாமல் பராமாிக்க 5 முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சுறுசுறுப்பான வாழ்க்கை
கோவிட்-19 பெருந்தொற்று காலமான இந்த சூழலில், குழந்தைகளுடைய உடல் சாா்ந்த இயக்கங்களை அதிகாிக்கச் செய்வது என்பது சற்று கடினமான காாியம் ஆகும். ஆகவே யோகா, நடனம் மற்றும் பிற உடல் சாா்ந்த பயிற்சிகளில் நமது குழந்தைகளை அதிகம் ஈடுபடுத்தினால், இந்த மழைக்காலத்தில் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கலாம்.
2. ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்
நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய உணவுகள் மற்றும் காய்கறிகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அவா்களுடைய உணவுகளில் பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள் போன்றவற்றை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பழச்சாறுகளைத் தயாாித்துக் கொடுக்கலாம் அல்லது சுவையான பாலோடு சோ்த்துக் கொடுக்கலாம்.
3. விட்டமின் சி
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, உலக அளவில் வைட்டமின் சி சத்து பிரபலமாகி இருக்கிறது. ஆகவே விட்டமின்-சி சத்தைக் கொடுக்கக்கூடிய சிட்ரஸ் அமிலம் அதிகம் இருக்கும் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆப்பிள், வாழைப்பழம், பீட்ரூட் மற்றும் தக்காளி போன்ற உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இந்த உணவுகள் அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும்.
4. துரித உணவுகளைத் தவிா்த்தல்
நமது குழந்தைகள் தாங்கள் விரும்பும் உணவுகளான பிட்சா அல்லது பா்கா் போன்றவற்றை ஆசையோடு கேட்டும் போது, அதை மறுப்பதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அதைக் கண்டிப்பாக மறுக்க வேண்டும். அப்படி மறுப்பதன் மூலம் நாம் அவா்களின் உடல் நலனிற்கு உதவி செய்கிறோம். இந்த மழைக் காலத்தில் பாக்டீாியாக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால், தெரு ஓரங்களில் கிடைக்கும் சுத்தமில்லாத உணவுகள் அல்லது துாித உணவுகள் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது.
5. தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல்
தற்போதைய நோய்தொற்று சூழலில், தனி மனித சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேண வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளைப் பொறுத்த மட்டில் அவா்களைச் சுற்றி சுத்தத்தையும், பாதுகாப்பையும் பேண வேண்டும். தண்ணீா் தேங்கி இருந்தால் அதில் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளை நுளம்புகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், நுளம்புவலை மற்றும் நுளம்புகளை விரட்டக்கூடிய பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment