பன் மொழியில் அல்லது இருமொழி தேர்ச்சி கொண்ட சிறார்களை
வளர்ப்பதற்கான நுட்பங்கள்
உங்கள் பிள்ளை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க
நீங்கள் உதவும் விதம், உங்கள் குழந்தை எங்கே எந்தளவு மொழியை அல்லது மொழிகளைக் கேட்கின்றது மற்றும் பயன் பயன்படுத்துகின்றது என்பதைப் பொறுத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளை வீட்டில் பெற்றோர், துணைவர் , குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து மொழியை அதிகம்
கேட்கலாம் மற்றும் அவர்களுடன் பயன் படுத்தலாம். அல்லது உங்கள் பிள்ளைகள் சில
சூழ்நிலைகளில் மட்டுமே மொழியை கேட்கவும் பயன்படுத்தவும் செய்யலாம்.
உங்கள் பிள்ளையின் மொழி வளர்ச்சிக்கு உதவும் இரண்டு
மாதிரிகள் இங்கேயுள்ளன
1.
வீட்டு மொழியாக பாரம்பரிய மொழி
உங்கள் வீட்டில் நீங்கள் ஒரு பாரம்பரிய மொழியை நீங்கள் பயன்படுத்தினால்
நீங்கள் உங்கள் கணவர் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அந்த மொழியை உங்கள் பிள்ளையுடன்
முடிந்தவரை பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
உதரணமாக நீங்கள் இலங்கையில் இருந்து லண்டன் சென்றவராக இருக்கலாம் ஆயினும்
வீட்டில் நீங்கள் உங்கள் பிள்ளையிடம் தமிழ்/சிங்களம் பேசலாம் அது உங்கள் பாரம்பரிய
மொழி. ஆனால் உங்கள் பிள்ளை பாடசாலை சென்று அங்கு ஆங்கிலம் பேசுகின்றது பேச வேண்டிய
சூழலும் அங்கு அமைகின்றது பேசுகின்றது.
2.
வெளிச் சூழலுடன் தொடர்பு கொண்ட செயற்பாடுகளில் சிறார்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச்
செய்வதன் மூலம் அதிகமாக, மொழித்தேர்ச்சியை
ஊக்குவிக்கலாம். உதாரணமாக ,சிறுவர் கழகங்கள், இளைஞர் கழகங்கள், சிறுவர் வள
நிலையங்கள், digital கற்றல் நிலையங்கள்.
இன்னுமொரு உதாரணம் செவிப்புலனோ அல்லது வாய் பேச
முடியாத சூழ்நிலையிலோ வாழும் குழந்தை அங்கு இரு மொழி தேர்ச்சியையும் பெற வாய்ப்பு
உள்ளது. குடும்பத்தில் வாய் பேச முடியாத பெற்றோரிடம் இருந்து சைகை மொழியையும்
வெளியில் வேறொரு மொழியையும் கற்கலாம் இது மொழிப் பரீட்சயத்கை கட்க நாம்
ஏற்படுத்தும் சந்தர்பத்தை உறுதி செய்கின்றது. .
எனவே நீங்கள் உங்கள் பிள்ளையின் மொழி தேர்ச்சியை மாற்றியமைப்பது என்பது பிள்ளையுடன் நீங்கள் குடும்பத்தினுள் பேசும் மொழியின் நேரம் ,அளவு, சந்தர்ப்பம் என்பதையும் வெளிச்சூழலுடன் சமூகமயப்படுத்தப்படுவதனையும் பொறுத்தே அமைகின்றது.
பன்மொழி அல்லது இரு மொழி பேசும்
தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்
·
உங்கள் பாரம்பரிய மொழியில் கதைகளை வாசித்து
சொல்லுங்கள் அல்லது பாடல் ஒன்றை பாடி காட்டுங்கள் அது போலவே ஆங்கில மொழியிலோ அல்லது சிங்கள மொழியிலோ முடிந்த
வரை உங்களுக்கு அடிப்படையில் தெரிந்த வார்த்தைகளை கொண்டு சொற்களை அறிந்து கொள்ளும்
சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.
·
உங்கள் பாரம்பரிய மொழியில் விளையாட்டுக்களை விளையாடுவது போல வேற்று மொழியிலும்
சிறு சிறு விளையாட்டுக்களை விளையாடிக் காட்டுங்கள் அல்லது முன்மாதிரியாக நீங்கள்
விளையாடி பிள்ளைகள் விளையாட ஊக்கமளியுங்கள்.
உதரணமாக bingo விளையாட்டு நீங்களும் பிள்ளைகளுமாக 10 சொற்களை (ஆங்கிலம் அல்லது சிங்களம்) ஒரு கடதாசியில் எழுதி அல்லது அச்சிட்டு துண்டங்களாக வெட்டி இருவரும் சரி சமமாக வைத்து கொண்டு
ஒரு நிமிட நேரத்தை கணக்கிட்டு யார் அதிக
சொற்களை ஒரு நிமிடத்துக்குள் சொல்லி முடிகின்றார்களோ அவர்கள் bingo என உரக்க சொல்லி
பரிசை பெற்று கொள்ளல்லாம் (பரிசு அவர்கள் விரும்பிய ஒரு தின்பண்டமாகவோ அல்லது
சிறிய கற்றல் உபகரணமாகவோ இருக்கலாம்)
·
மிக முக்கியாமாக உங்கள் பிள்ளைகளுக்கு கற்றலுக்கென பிரத்தியேகமாக வீட்டில் ஒரு குறிப்பிட்ட ஒரு
இடத்தை ஒதுக்கி செயலட்டைகளை ( வாரத்தைகள் கொண்ட எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட அட்டைகள்
பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ) கொண்ட
கற்றல் மூலை (Learning corner) ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள் அதில் உங்கள்
பாரம்பரிய மொழியுடன் பிரத்தியேகமாக வேற்று மொழி செயலட்டைகளையும் பிள்ளைகளின் கண்
மட்ட உயரத்திற்கு காட்சிப்படுத்தி வையுங்கள். முடிந்தவரை அவற்றை மீளவும் மீளவும்
ஞாபக மூட்டி வையுங்கள்.
·
அது போல அவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுடன் பேசும் போது வேற்று மொழியில்
(ஆங்கிலம், சிங்களம்) வாழ்த்து தெரிவித்தல், நன்றி கூறல், அறிமுகம் செய்தல்
போன்ற பழக்கங்களை ஏற்படுத்துங்கள்.
·
பொது நிகழ்வுகள் மற்றும் போட்டி நிகழ்வுகளில் அதிகமாக மொழித்தேர்ச்சியுடனான நிகழ்வுகளை செய்ய தயார்படுத்துங்கள் செய்வியுங்கள்
மற்றும் முடியுமாக இருந்தால் அவர்கள் கற்ற விடயங்களை ஒளிப்பதிவு செய்து அவர்களுக்கே
மறுபடியும் காண்பியுங்கள் .
·
செவிமடுத்தல் , வாசிப்பு என்பன மொழித் தேர்ச்சி பெறுவதில் பிரதானமானவை எனவே,
சிறிய ரக எளிமையான வாசிப்பு துணுக்குகளை வசிக்க
ஊக்கபடுத்துங்கள், (செய்தி தாள்கள் மிகவும் முக்கியாமான ஒரு செயட்டை போன்றவை மொழி தேர்ச்சி பெறுவதற்கு) அதுபோல
கேட்டல் மிக முக்கியமாக பாடல்கள், தொலைக்காட்சி
செய்திகள், துணுக்குகள் என்பனவற்றை அதிகம் செவி மடுப்பதெல்லாம் மொழியின்
உச்சரிப்பு, வடிவம் ஏற்ற இறக்கம் மற்றும் பிழையின்றி உச்சரிக்கும் ஆற்றல் போன்றவற்றை
அதிகப்படுத்தும்.
·
மிக மிக முக்கியமாக முமொழி அகராதி (Trilingual dictionary) ஒன்றை கைவசம் வைத்து கொள்ளுங்கள் அர்த்தம் புரியாதவற்றை தெரிந்து
கொள்வதற்கும் மற்றும் அதனோடு ஒப்பான பல்பொருள் சொற்களை தெரிந்து கொள்வதற்கும்.
கற்றல் செயற்பாடுகள் Digital மயமாக மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற
இக்கால கட்டத்தில் மொழிப்புலமை என்பது அதிலும் குறிப்பாக சர்வதேச மொழியான ஆங்கில
மொழிப் புலமை என்பது இன்றியமையாததாக இருகிகின்றது என்பதை யாவரும் நினைவில் கொள்ள
வேண்டும்.
தொடரும் ........................
ஆக்கம்
அன்புடன்
வீ. குகதாசன்
No comments:
Post a Comment