அப்பாவும் அம்மாவும் காட்டு வேலைக்கு போயிருக்காங்க
சாயிந்தரதான் எப்பவும் வருவாங்க,வந்து
தினமும் எனக்கு கஞ்சிய ஊத்திகொடுத்திட்டு எங்கம்மா,
அது கையெல்லாம் திட்டு திட்டு இருக்கும்.
எண்ணை பூசிக்கிட்டுதான் படுக்கும் அழுதுகிட்டே இருக்கும்
ஆனா எங்கப்பாதான் சாயிந்தர வறப்ப,
தடு மாறிக்கிட்டே வரும் ஏன்தான் தெரியல
எங்க அம்மா ஒரு தரம் சொன்னிச்சி
இன்னும் கொஞ்ச நாள்தான் ,
ஸ்குலுக்கு போலாம் தம்பியோடன்னு
நானும் தம்பியும் ஸ்குலுக்கு போயி படிச்சி நம்ம சுந்தர அண்ண மாரி,
கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கிட்டு வேலைக்கு போவோமே
அப்ப என்ங்கம்மாஅழவே விட மாட்டேன்.
என்னாண்ணே சொல்லிட்டு நானே அழுவுரனே.................................
No comments:
Post a Comment