உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கி விட்டதால், கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் குழந்தைகளை குதூகலப்படுத்த தயாராகிவிட்டனர். பரிசுகள் அளித்து அசத்துவதால் கிறிஸ்துமஸ் தாத்தாக்களைக் கண்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் துள்ளிக் குதிப்பார்கள். ஆனால் ஹங்கேரி நாட்டில் நிலைமை தலை கீழ். கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சக் கூடாது, அவர்களுக்கு முத்தங்கள் தரக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டில் மிக வேகமாக தொற்றுக் காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகளுக்கு மிக எளிதாக தொற்றி விடுவதால் பெற்றோர் தவிர மற்ற யாரையும் குழந்தைகள் அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் காலங்களில் வெளியிடங்களில் சுற்றிவரும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், குழந்தைகளை தூக்கிக் கொஞ்சினால் எளிதாக நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வருவார்கள், தங்களிடம் விளையாடி பரிசு தருவார்கள் என்று உற்சாகத்துடன் காத்திருக்கும் குழந்தைகள், இந்த அறிவிப்பால் களையிழந்து காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment