ஒரு பணக்கார பெரியவர் மருத்துவமனையின் கட்டிலில் சலனமற்று படுத்திருந்தார்.செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. கிட்னிகள் ஏற்கெனவே செயலிழந்திருந்தது.
உடலில் சில இடங்களில் நிற்காமல் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மறுபுறம் இரத்தம் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது.உறவினர் அனைவரும் ஒவ்வொருவராக வந்து பார்த்து விட்டு வெளியில் கதை பேசியபடி காத்திருந்தார்கள்.பெரியவரின் மகன் அறையின் பக்கத்தில் யோசனையுடன் அமர்ந்து கொண்டிருந்தார்.
மணிக்கு மணி மருத்துவமனை கட்டணம் எகிறிக்கொண்டிருக்க, "இனி எந்த பலனுமில்லை, கிட்னிகள் இரண்டுமே செயலற்றுவிட்டது, இரத்தம் கசிவது நிற்கவில்லை, செயற்கை சுவாசத்தால் தான் இவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறது. சுவாசத்தை நிறுத்தினால் அதோடு மூச்சும் நின்றுவிடும். காத்திருப்பதில் பலனில்லை. நீங்க சொல்ற படி செய்கிறோம். " என்று மருத்துவர் கூறியது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.'நான் என்ன செய்ய?' யோசனை உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டிருந்தது.அப்படியே சிறிது துரம் நடந்து வராந்தாவுக்கு வந்தார் பெரியவரின் மகன் .மகளும் அண்ணன் பின்னாலேயே வந்தார் .அதே தருணம் அருகே இருந்த
மேடையில் இசைக்கச்சேரி முழங்க பாதிரிமார்கள் பலர் மைக்கில் இன்றே கடைசி தினம் தீர்ப்பு தினம் தேவனை துதியுங்கள் என்றும், தேவன் வந்துவிட்டான் என்று இடை இடையேயும் வேறு பல புரியாத வார்த்தைகளை ஆவேசத்துடனும் இரு கையை தூக்கியபடி கூறிக்கொண்டிருக்க, மக்கள் முழங்காலிட்டு இரு கைகளையும் உயர்த்தியபடி தேவனை துதித்துக்கொண்டிருந்தார்கள்.இந்த நிகழ்ச்சியின் பிரார்த்தனைகள் யாவும் ஒலியின் மூலம் எதிரொலித்தது மருத்துவமனையின் அருகில் அமர்ந்து இருந்த பெரியவரின் மகனுக்கும் அவருடைய மகளுக்கும் இதை கேட்டு கொண்டு இருந்த இருவருக்கும் ஒரே சோகம் எல்லாரும் போக வேண்டிய தினம் வந்து விட்டது .உலகம் அழிய போகிறது என்று இப்படியே
நேரம் மெதுவாக கடந்து கொண்டிருந்தது. அடுத்த நாளும் வழக்கம் போல விடிய ஆரம்பித்திருக்க, கடைசி நாளின் ஏதோ அதிசயத்தை எதிர்பார்த்திருந்த மக்கள் வெறுப்படைந்து ஏதோ வார்த்தை சலசலக்க வெளியேற ஆரம்பித்திருந்தார்கள் சர்ச்சை விட்டு .விடிந்தும் விட்டது இப்போ அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டு இருந்தனர்.ஆளாளுக்கு ஒரு யோசனை கடைசியில் வீட்டிற்க்கே கொண்டு செல்லாம் என்று முடிவுகள் எடுக்க பட்டது.அப்பொழுது நர்சின் குரல் "சார் பெரியவரின் மூச்சு நின்னு போச்சி சார் "என்று பதட்டத்துடன் வந்து சொன்னாள்.அவசர அவசரமாக ஓடி சென்று பார்த்து அழுதனர்.ஆம்புலன்சில் உடலை ஏற்றி கொண்டது மருத்துவமனை வண்டி அவளது மகளும்( ஒரு தனியார் பள்ளியின் கணக்கு வாத்தியாரும் )அதற்க்கு முன்புதான் அந்த பள்ளியின் வாகனம் கடந்து போனது.அதில் இரு மாணவிகள் பேசி கொண்டே வந்தனர்
"நான் வேன்ல வரும்போ மேத்ஸ் மிஸ்ஸை பார்த்தேனே, ஆஸ்பிடல் பக்கத்தில நின்னுக்கிட்டிருந்தாங்க.
அவங்க குட்டி பாப்பா சோ க்யூட்டா இருக்குடி. நான் கை காட்டினேனே. ஆனா மிஸ் கவனிக்கல.
இரு மாணவிகள் நேற்று போட்ட சண்டையை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரின் இறப்பில் ஒரு நிகழ்வு இப்படி போயி கொண்டு இருந்தது.
உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்பட்ட நாள்
No comments:
Post a Comment