இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Monday, December 24, 2012

சித்தாண்டி கண்ணீர்

01திகிலிவெட்டை குளமதில் பூத்த தாமரை ஒன்றில்
உதிர்ந்த இதழ்களிடையே சிங்கத்தின் உரோமங்கள் சிக்கிக்
கிடந்தன
தாமரையில் கண்ணீர் தேங்கியிருந்தது
அது இருளில் கிடந்த
ஆயிரக்கணக்கான விழிகளை திறக்கச் செய்தது

கிழக்கில் உதயமாகி சூரியனும் உச்சிக்கு வந்தது
ஒழி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது
வெள்ளை நிற மொட்டொன்று இருளில் தனித்து போனது
மெல்லிய புகை போன்ற சூரியன் கசிந்து கொண்டிருந்தது

வாளினை ஏந்தி சிங்கம் கொடிதனில் அசைந்தாடியது
இலிங்கத்தை ஏந்தியபடி இராணுவம் எங்கும் அலைந்தது
மல்லிகை மொட்டொன்றை நாடு வீதியில் சிதைத்தது
கீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றது

அரசனோ இளவரசனோ ஒப்புதல் தந்தது
அத்துணை எலிதாயிற்றா மகளை சிங்கத்துக்கு கொடுத்தது
தங்க விதைகலையா இன்னும் தேடுவது
சிங்கங்களே இனி உங்களை நாய்களே என்றா அழைப்பது

தாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு
தான் விளையாடித்திரியும் ஊர்மனை தொலைதூர இடமில்லை

தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் பாதையில்
சௌபாக்கியமெங்கே சுவாசிக்க கூட முடியவில்லை

புற்பூண்டிழந்து போய்க்கிடக்கின்றது சித்தாண்டி - அங்கே
மனமெங்கும் வியாபித்திருந்த விசத்தை மட்டுமா
கொட்டினீர்கள்
வாய் திறந்தாலே தர்ம போதனைகளை உரைக்கின்ரீர்களே
இந்த நரகக் கிடங்கு உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா

(ஒரு பாடசாலை சிறுமியின் வல்லுறவினை வெளிப்படுத்தும் கவிதை)

மூலம் - மகுடம் இதழ் -03 ஜூலை - செப்டம்பர் -2013

1 comment:

go.nathan said...

மிக காத்திரமானது.

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News