இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Tuesday, January 22, 2013

கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகள்

Foods-to-increase-fertility


வைட்டமின் டி என்னும் சத்தானது, உடலுக்கு தேவைப்படும் கரையக்கூடிய வைட்டமின்களாகும். இவை தான், நாம் எந்த ஒரு உணவை உண்டாலும், அதில் உள்ளசத்துக்கள் உடலில் சரியாக உறிஞ்சுவதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சரியாக இயக்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கான பாலுணர்வு ஹார்மோன்களை தூண்டவும் பெரிதும் உதவுகிறது. எனவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனையை இயற்கையாகவே தவிர்த்து,


அழகான குழந்தையை பெற்றெடுக்க முடியும். குறிப்பாக பெண்கள் இத்தகைய உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அந்த வைட்டமின் டி நிறைந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.மீன் எண்ணெயில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட அதிகம் உள்ளது. அதிலும் ஒரு டேபிள் மீன் எண்ணெயில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை பெறலாம். ஆனால் எண்ணெயை குடிக்க முடியாது என்பதால், கடைகளில் விற்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கி சாப்பிடுவது நல்லது.


* சோயா பொருட்களான டோஃபு மற்றும் சோயா பாலில் வைட்டமின் டி என்னும் சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

* காளானில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி5 சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் காளானை சமைத்து சாப்பிடும் போது முழுமையாக வேக வைக்காமல், அளவாக வேக வைத்து சாப்பிட்டால், பெண்கள் கருவுறுதலை அதிகரிக்கும்.

* கடல் உணவுகளில் கடல் சிப்பியும் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளுள் ஒன்று. அதிலும் இதனை பெண்கள் சாப்பிட்டால், அவர்களது கருவுறுதலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கடல் சிப்பியில் ஜிங்க், செலினியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் உள்ளது.

மீன்களில் சாலமன், டூனா மற்றும் கெளுத்தி போன்றவற்றில் வைட்டமின் டி மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட உள்ளது. மத்தி மீனில் 33 சதவீதம் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் கால்சியம் சத்து உள்ளது. இத்தகைய உணவில் வைட்டமின் டி மற்றும் இதர புரோட்டீன்களும் உள்ளன.

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News