இவ்வருடத்திற்கான (2013) சமுதாய அடிப்படையிலான சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் unicef நிறுவனத்தின் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத்திட்டம் பங்காளர் நிறுவனமான ESCO நிறுவனத்துடன் இணைந்து 04 பிரதேச செயலகப்பகுதிகளில் செயட்படுத்தப்படவுள்ளன. (இதற்கான கலந்துரையாடல் ஒன்று 08.02.2013 அன்று பி. ப. 3.00 மணிக்கு esco நிறுவன கேத்சி மண்டபத்தில் இடம்பெற்றது)
1. ஏறாவூர் பற்று
2. போரதீவு பற்று
3. மண்முனை தென்மேற்கு
4. கோறளை பற்று மத்தி
இவ்வேலைத்திட்டத்தின் மூலம் கிராம் மட்டத்தில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களான சிறுவர் உரிமை மேம்பட்டு உத்தியோகத்தர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள VCRMC மற்றும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தி சுயமமாக இயங்க வைப்பதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான பொறிமுறையினை வலுப்படுத்தி அதனைக் குறைப்பதையே இவ்வேலைத்திட்டம் எதிர்கால நோக்காககொண்டுள்ளது என உன்செப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு எஸ். நிமலன் அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment