அரச சிறுவர் பாதுகாப்பு பொறிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை 07.03.2013 இன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இன் நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு தாசிம், எஸ்கோ நிறுவன பிரதிநிதி திரு ஜோசப் மற்றும் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பட்டு உத்தியோகத்தருக்கான மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கு பற்றுனர்களாக கிராம மட்ட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிபர், ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்தி அலுவலர்கள், VCRMC பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்வின் முக்கிய விடயமாக சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தினர் சிறுவர் பாதுகாப்பிற்காக சமூக மட்டங்களில் எட்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பிக்கலான VCRMC , சிறுவர் சமூக வட்டம், பிரதேச சிறுவர் கண்காணிப்புக் குழு, பிரதேச சிறுவர் சபை , மாவட்ட சிறுவர் சபை, மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு என்பனவற்றின் செயற்பாடுகள் மற்றும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது என்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு இவ்வாறான திட்டங்களை வலுப்படுத்துவது சிறந்தது எனவும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment