பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பாட நெறி ஆரம்ப நிகழ்வு பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டின் பேரில் அதன் தலைவர் திரு பொன் செல்வநாயகம் அவர்களின் தலைமையில் மட்/அரசினர் ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் மு.ப. 10.00 மணிக்கி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான கௌரவ சி. சந்திரகாந்தன் அவர்கள்
கலந்து கொண்டார் அத்துடன் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், silidarite , NPDF , போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்ட செயலக முன் பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளர் திரு V . முரளிதரன் மற்றும் சரபோ இணைப்பாளர் திரு V . குகதாசன் அவர்களும் பாலர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் அவர்கள் தமது பணியகம் 2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை க்கான நியதிச்சட்டம் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமது பணியாக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது சம்மந்தப்பட்ட அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், அதேவேளை தற்போது solidarite , NPDF ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மட்டக்களப்பில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு வருட கால டிப்ளோமா பாட நெறி ஒன்றினை நடாத்த தீர்மானித்துள்ளதாகவும், இதில் ஒவ்வொரு பாட நெறியிலும் 55 பேர் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் இது தேசிய, சர்வதேச தராதரம் மிக்க ஒரு சான்றிதலக அமையும் எனவும் தெரிவித்தார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ சி. சந்திர காந்தன் அவர்கள் தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதனை ஆரம்பித்து வைத்ததாகவும், பல்வேறு வலி வகையில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்க முயற்சி எடுத்தும் கூட அது இறுதியில் தோல்வியில் முடிந்ததாகவும் , எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு தாம் தம்மால் முடிந்த அளவு இவ்விடயன்க்களில் அக்கறை செலுத்த எதிர்பார்த்துள்ளதகவும் தெரிவித்தார். தொடர்ந்து இப்பணியகம் இயங்குவதற்கு நிரந்தரமான கட்டிடம் ஒன்று அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment