முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இணைப்புக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி P .S .M சார்ல்ஸ்அவர்களின் தலைமையில் 11.03.2013 இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திரு V . வாசுதேவன் அவர்களும் முன்பிள்ளை அபிவித்தி மாவட்ட இணைப்பாளர் திரு V . முரளிதரன் அவர்களும், CRPO மாவட்ட இணைப்பாளர் திரு V . குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்கள், பாலர் பாடசாலைகளை கண்காணிக்கும் உதவிக் கல்விப்ப் பணிப்பாளர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், போலீஸ் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிணிதல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் பொது பின்வரும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது
1. முன்பிள்ளை பறைய அபிவிருத்தி தொடர்பாக அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மேட் கொள்ளுகின்ற வேலைத்திட்டங்கள் அவைகளை உரிய இணைப்புடன் மேற்கொள்ளல்
2. பாலர் பாடசாலை பணியகத்தின் பணிகள், பொறுப்புக்கள்
3. பலர் பாடசாலைகளுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்கும் திட்டத்தின் நடைமுறைப்பிரச்சனைகள்
4. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நன்னடத்தை திணைக்களம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள்
4. பிரத்தியேக கல்வி நிலையங்கள், இணையச்சேவை நிலையங்கள், விடுதிகள் போன்றவற்றில் சிறுவர்களின் நலன் பேணப்படுகின்ற போக்கு அவைகள் குறித்து கூடிய கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் இவைகளை நடைமுறைப்படுத்துவதில் சகலரது ஒத்துழைப்பும் பெறப்பட வேண்டும் எனவும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிள்ளைகளின் நலன் என்பது உணர்வு பூர்வமாக பார்க்கப்பட வேண்டிய ஓன்று என அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக் கொண்டார் . இறுதியாக 1.30 மணியளவில் திரு V . முரளிதரன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறை பெற்றது.
No comments:
Post a Comment