கிரான் பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திரு T . தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் சிறப்பாக கிழக்கு மாகான நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஜனாப் முபாரக் அவர்களும் கலந்து கொண்டார். அத்துடன் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், CRPO மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன், ECCD இணைப்பாளர், திரு வீ. முரளீதரன்,சிறுவர் பெண்கள் பிரிவு போலீஸ் உத்தியோகததர்கள் மற்றும் வாழைச்சேனை நன்னடத்தை பிரிவு பொறுப்பதிகாரி ஜனாப் M .M H . நய்முடீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இக்கொட்டத்தினை அப்பிறு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ருசைத் ஏற்பாடு செய்திருந்தார்.
தொடர்ந்து இக்கூடத்தில் கணணி அளிக்கை ஓன்று பிரதேச செயலாளர் அவர்களால் செய்யப்பட்டது. இதில் பாடசாலை இடைவிலகல் பிரச்சனைகளே அதிகமாக தமது புர்ச்சனைகள் காணப்படுவதாகவும் அதற்கான பிரதான காரணம் பாடசாலைகளின் தூரம், மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். பொதுவாக தமது பிரதேசத்தில் சுமார் 135 பிள்ளைகள் மட்டில் இக்காரணங்களினால் பாடசாலை செல்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும். இது குறித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் இளவயது திருமணம், பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தல் போன்ற சிறுவர் துஸ்பிரயோகங்களை குறைக்க முடியும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ஆணையாளர் அவர்கள் உரையாற்றுகையில் பிள்ளைகளின் சிறந்த வாழிடங்கள் சிறந்த குடும்ப சூழல் எனவும் அவ்வாறான் ஒரு சிறந்த குடும்ப சூழலை உருவாக்கி கொடுப்பதன் மூலம் பெரும்பாலும் பிள்ளைகளின் நலன்களை பேண முடியும் எனத் தெரிவித்ததுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகள் அவர்களை பாராமரிப்பவர்கள் போன்றோருக்கு கல்வி உதவிகள், கற்றும் வாலவதர உதவிகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்ததுடன், கிரான் பிரதேச செயலக பிரிவில் ஒரு சிறிவர் இல்லம் மாத்திரமே உள்ளது எனவும் அது ஆண் பிள்ளைகளுக்கானது எனவும் பெண் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லம் ஒன்றினை ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நேரடியாக வந்து தாமு கருத்துக்களை கூறிய 11 பாடசாலை இடைவிலகிய பிள்ளைகளை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதற்கும் அவர்களுக்கான விடுதி வசதியினை ஏற்படுத்தி கொடுப்பதற்குமான நடவடிக்கையினை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன் CRPO இணைப்பாளர் அவர்கள் கிராம் மட்டத்தில் இயங்குகின்ற VCRMC இனை திறம்பட செயட்படுத்டுவதட்கான நடவடிக்கையினை கிராம் உத்தியோகத்தர்களும் சிறுவர் உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment