இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Monday, April 15, 2013

ஆபாச தளங்களில் இருந்து பிள்ளைகளை காக்க

anti pornசமீபத்தில் நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவருக்கு பி.இ.படிக்கும் ஒரு மகன் -+ 2 மற்றும் 10th படிக்கும் இரண்டு மகள்கள்.இணையம் பற்றி பேசும்போது தேவையில்லாமல் அடல்ஸ்ஒன்லி படங்கள் தோற்றுவதாகவும் அதை நிறுத்த ஏதாவது செய்யமுடியுமா என்றும் கேட்டார். அவருக்கான பதிவு இது.தேவையில்லாமல் வரும் படங்களை தடைசெய்வதோடு அல்லாமல் கம்யுட்டரில் அதிக நேரம் Games விளையாடுவதையும் Chat செய்து பொழுதினை கழிப்பதையும் தடுக்கலாம்.சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதுவும் 4 எம்.பி. கொள்ளளவு தான். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இந்த சாப்ட்வேருக்கான பாஸ்வேர்ட் இது. நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும. பின்னர் நீங்கள் இந்த சாபட்வேரை ஓப்பன் செய்யும் சமயம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் ஓப்பன் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மைதான் யாரும் கவனிக்கவி்ல்லையே – நாம் தவறு செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் இறைவன் அதை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அதுபோல இந்த சாப்ட்வேரை நிறுவிய பின டாக்ஸ்பாரில் ஒற்றைகண்ணுடன் கழுகு உங்கள் கம்யுட்டரின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டு இருக்கும்.அது ஆபாச தளங்கள் வந்தால் அதை தடை செய்துவிடும்.குழந்தைகள் என்ன செய்கிறார்களோ என்கின்ற பதட்டம் அடையாமல் நாம் மற்ற வேலைகளை பார்த்துகொண்டுஇருக்கலாம். டாக்ஸ்பாரில் உள்ள ஒற்றை கண்ணை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஏற்கனவே நீங்கள்கொடுத்த பாஸ்வேரட் கொடுத்து உள் நுழையவும்.


இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் ஓ.கே. தாருங்கள்.


அடுத்துள்ளது சாட்…இதில் நீங்கள் உங்கள் குழந்தைகள் சாட் செய்யும் நேரத்தை சேட் செய்துகொள்ளலாம். அந்த நேரம் மட்டும் சாட் வேலை செய்யும்.


இதைப்போலவே விளையாட்டை யும் தேவையான நேரம் கொடுத்து மற்ற நேரங்களை தடை செய்துவிடுங்கள்.


நீங்கள் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். வெளியில் செல்ல நேரலாம். அவ்வாறான நேரங்களில் குழந்தைகள் கம்யுட்டரில் அமரும் நேர்த்தை செட் செய்துவிடலாம். அந்த நேரம் கடந்துவிட்டால் கம்யுட்டர் வேலை செய்யாது.


குழந்தைகளும் சரி – நாமும் சரி..தொடரந்து மானிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண் என்ன ஆவது. அதற்கும் இதில் கண்ணை காப்பதற்கான வழி வைத்துள்ளார்கள். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை கம்யுட்டர் ஆப் ஆகி பின்னர் எவ்வளவு நேரத்திற்கு பின் ஆன் ஆக வேண்டும் என செட் செய்துவிட்டால் நாம் மறந்துவிட்டாலும் கீழ்கண்ட விண்டோ தோன்றி கம்யுட்டர் ஆப் ஆகிவிடும்.


இவ்வளவு தடைகளும் தேவையானல் வைத்துக்கொள்ளலாம்


 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News