பொதுவுலக கல்வியின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் அக்கல்வியை கற்றிடும் இளம் உள்ளங்கள் தமது வாழ்நாளெல்லாம் தமக்கு தேவையான கல்வியை தொடர்ந்து சுயமாக தாமே கற்றிடும் திறமையுடையவர்களாக ஆக்குவதுதான்.
கல்விக்கூடம் என்பது எவ்வளவு பெரிய கட்டிடத்தில் எவ்வளவு பிரமாண்டமான கட்டமைப்பில், எத்தனை பெரிய விளம்பரங்களின் மூலம் அடையாளம் காணப்படுகின்றது என்பது முக்கியம் அல்ல.
தரமான நேசிக்கத்தக்க கல்விமுறை உயரிய நோக்கம் கொண்ட ஆசிரியர்களின் பயிற்று முறை ஆகியவைதான் தரமான கல்வி அறிவை விதைக்க முடியும்.
கல்வி என்பது கடை சரக்காக இருக்க கூடாது. நல்ல பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் ஊடாக ஆரம்பக் கல்வியின் போது மாணவர்களை சென்றடைய வேண்டும். கல்வியை வியாபாரமாக்க கூடாது
No comments:
Post a Comment