சமூக மட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்களை குறைப்பதற்கான நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பாதுகாப்பு பொறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஓன்று 05.04.2013 அன்று மு. ப. 10.000 மணிக்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மவடிமும்மாரி மகாவித்தியாலயத்தில் YMCA நிறுவனத்தின் அனுசரணையுடன்
CRPO இணைப்பாளர் திரு வீ. குகதாசன் அவர்களால் நடத்தப்பட்டது. இதில் அப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தேசிய மட்டம் தொடக்கம் கிராம மட்டம் வரைக்கும் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிலும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு, பிரதேச சிறிவர் கண்காணிப்புக் குழு. ப்புஹ்க்ப மட்ட சிறுவர் கண்காணிப்பு குக்களின் பொறுப்புக்கள், இவைகளுடன் இணைந்து அதிபர், ஆசிரியர்கள் எவ்வாறு பாடசாலை மட்டத்தில் சிறிவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் பற்றி சிறந்ததொரு செயற்பாடுகளை மேட்கொவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. தற்போது மவடிமும்மரி கிராமத்தில் உள்ள சிறுவர் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக ஆசிரியர்கள் கருத்துத்தெரிவித்த போது . பாடசாலை இடைவிலகல் அதிகமாக உள்ளதாகவு அதற்குக் காரணம்.
01. வயல் வெட்டுக் காலங்களை பெற்றோருடன் சேர்ந்து பிழைகளும் உழைக்கச் செல்வது
02. சிறு வயதில் திருமணம் செய்து வைத்தல்
03. தாய் பிள்ளைகளை வயதான ஒரு அம்மாவிடம் பிள்ளைகளை விட்டு விட்டு வெளி நாடு செல்லுதல்
04. குடும்ப வறுமை காரணமாக அடிப்படை தேவைகள் இன்றி பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகம் கொடுக்காமை
05. பெற்றோரின் அக்கறை இன்மை
போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டன. இருந்தபோதும் இவ்விடயங்கள் தொடர்பாக பிழைகளுக்கு உதவக் கூடிய முறைமை ஓன்று இல்லையா எனக் கேட்டபோது தாங்கள் முடிந்தவரை GS அல்லது சமுர்த்தி உத்தியோகத்தரின் உதவியை நாடுவதாகவும் அதனால் பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இறுதியில் பாடசாலை விடுமுறையின் பின்னர் VCRMC மற்றும் இருக்கின்ன்ற அனைத்து உத்தியோகத்தர்களையும் ஒன்றிணைத்து இதற்கான ஒரு நடவடிக்கை எடுப்பது எனவும் அதற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment