மேற்படி விடயம் தொடர்பான ஆலோசனைக்கூட்டமானது tdh நிறுவன மட்டக்களப்பு காரியாலயத்தில் 01.04.2013 அன்று இடம்பெற்றது. இதில் tdh நிறுவன சிறுவர் பாதுகாப்பு திட்ட இணைப்பாளர் திரு தசான் NCPA உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ் CRPO மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் மற்றும் unicef நிறுவன் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு ச. நிமலன் Save the children நிறுவன பொறுப்பதிகாரி திரு அன்ரு மற்றும் மட்டக்களப்பு நன்னடத்தை அலகு பொறுப்பதிகாரி செல்வி ஞான சௌந்தரி
மற்றும் Plan Srilanka நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்வி ராமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதன்போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட VCRMC நூல் தொடர்பான கருத்துக்கள் குறித்து கலந்துரயாடப்பட்டபோது இதற்கு முன்னர் VCRMC தொடர்பாக எந்தவித வலிகாடல் நூலும் இல்லாதிருந்தது அந்தவகையில் இவ்வாறான ஒரு நூல் உருவாக்கப்பட்டது பெரும் வரவேற்புக்குரியது என அனைவரும் தெரிவித்தனர். அதேவேளை இனிவரும் காலங்களில் இந்நூல் தொடர்பாக இன்னும் தெளிவான விளக்கங்கள் தேவை என்பதுடன் குறிப்பிட்ட சில விடயங்கள் எல்லோராலும் முன்மொழியப்பட்டது.
01. VCRMC என்பது பற்றிய நன்னடத்தை திணைக்களத்தின் வழிகாட்டல்களை உள்ளடக்கல்
02. சமுதயமட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒரு பொதுவான வள வழிகாட்டியாக அமைத்தல்
03. VCRMC க்கான ஆவணப்படுத்தல் முறைமையை இலகுவாக்கல்
04. முடியுமன் வரையில் சிங்கள, ஆங்கில மொழிகளிலும் உருவாக்கல்
05. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அரச தரப்புக்களுடன் தவளை பரிமாறல் மற்றும் அனுமதிகள் பெறுதல்
06. VCRMC உறுப்பினர்களிடம் இருந்து ஒரு பின்னூட்டல் பெறல்
07. VCRMC க்கான ஒரு யாப்பு அல்லது வழிகாட்டலை உருவாக்குதல் மற்றும் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தல்
No comments:
Post a Comment