பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படுகின்ற 04 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதாவது
01. ஏறாவூர் பற்று
02. மண்முனை மேதகு
03. ஏறாவூர் நகர்
04. மண்முனை தென்மேற்கு
ஆகிய பிரதேசங்களில்சிறுவர் நலன் தொடர்பில் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் , நன்னடத்தை உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உதவியாளர்கள், மற்றும் CRPO மாவட்ட இணைப்பாளர், திரு வீ. குகதாசன், ECCD இணைப்பாளர் திரு வீ. முரளீதரன், மகளிர் அபிவிருத்தி உத்தியிஒகத்தருக்கான இணைப்பாளர் திருமதி S . அருநாளினி ஆகியோருக்கான பயிற்சிப்பட்டறை 02.05.2013 அன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு டேவிட், தொழில்நுட்ப வல்லுநர் திரு திஸ்ஸ , திட்ட இணைப்பாளர் செல்வி வன்னி ரமா ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
01. சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தற்போது இருக்கின்ற பொறிமுறைகள்
02. எவ்வாறான வடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றன
03. நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் உள்ள சிக்கல் தன்மைகள் நடைமுறை ரீதியான பிரச்சனைகள்
04. பிளான் ஸ்ரீலங்கா நிறுவனம் அதற்கு எவ்வாறு உதவ முடியும்
போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. குறிப்பாக வன்னி ரம்மா அவர்கள் தெரிவிக்கையில் தாம் பணியாற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 10 கிராம சேவையாளர் பிரிவிகளை தேர்ந்தெடுத்து வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும். அதன் முதற் கட்டமாக சுமார் 126 சமூகத்தொண்டர்களை பயிற்றுவித்துள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து நலிவுற்ற குடும்ம்பங்களில் உள்ள பிள்ளைகள் தொடர்பாக அவர்களைக்கொண்டு மதிப்பீஎடு ஒன்றை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் 03 வருடங்களுக்கு இத்திட்டத்தை தாம் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு அனைவரது ஒத்துளிப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment