இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Saturday, May 4, 2019

ஜப்பான் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் பின்னால் இருக்கும் ரகசியங்கள் இதுதான்...!

உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது, ஆனால் ஆரோக்கியமான இளைஞர்களை கொண்ட நாடாக இருக்கிறதா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். இந்திய இளைஞர்களை காட்டிலும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உலகிலேயே ஆரோக்கியம் குறைவாக உள்ள குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது. 


இதற்கு காரணம் நம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே இருக்கும் மோசமான ஆரோக்கியமில்லாத உணவுமுறைதான். அதேசமயம் அதிக ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இரண்டாம் உலகப்போரில் இரண்டு அணுகுண்டுகளை வாங்கிய ஜப்பான்தான். பொருளாதாரத்திலும் சரி, தனிநபர் ஆரோக்கியத்திலும் சரி ஜப்பான் மிகப்பெரிய வல்லரசாக இருக்க காரணம் அவர்களின் தனிநபர் சார்ந்த ஒழுக்கமும், கட்டுப்பாடான உணவுமறையும்தான். இந்த பதிவில் ஜப்பான் குழந்தைகள் ஏன் மற்ற நாடுகளின் குழந்தைகளை விட அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். 


திருப்திகரமான ஊட்டச்சத்துக்கள் 

ஜப்பானியர்களின் உணவு பொதுவாக சிறிது சாப்பாடு, நிறைய காய்கறிகள், பழங்கள், ஊறுகாய், சிறிதளவு மாமிசம், சர்க்கரை மற்றும் பாலாக இருக்கும். இது அவர்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நீண்ட நேரம் பசியையும் கட்டுப்படுத்தும். இவர்கள் குழந்தைகளுக்கு மாமிசத்தை விட காய்கறிகளை அதிகமாக கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

உணவு கொண்டாட்டம் 

ஜப்பானியர்களின் இரவு நேர உணவின் பொது உணவு மேசையை சுற்றி மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். குழந்தைகள் அனைத்து உணவையும் சுவைப்பார்க்க ஊக்குவிக்கபடுகிறார்கள். ஆனால் தட்டில் இருக்கும் அனைத்து உணவையும் சாப்பிட்டு விட்டுத்தான் எழ வேண்டும். பெற்றோர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை மகிழ்ச்சியுடன் உண்கிறார்கள், இதுவே குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. உங்கள் குழந்தை மறுத்தாலும் அவர்களுக்கு புதிய ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதை கட்டயமாக்குங்கள். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொடுப்பது மிகவும் எளிது. 

சிறிய அளவு 

ஒரு ஜப்பானிய பழமொழி கூறுவது என்னவெனில் " ஒருவரின் வயிறு எப்போதும் 80 சதவீதம் நிறைந்திருந்தால் அவர்களுக்கு மருத்துவரே தேவையில்லை " என்பதாகும். அவர்களின் இரவு உணவானது பல உணவுகளாலும் சிறிய அளவினாலும் நிறைந்திருக்கும். அவர்கள் சாப்பிடுவதில் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுகிறார்கள், முதலில் சாப்பாடு பின்னர் சூப் அதன்பின் காய்கறிகள் அதற்குபின் இறுதியாக மீன் அல்லது மாமிசம். இதனை செய்ய வீட்டில் அனைவருக்கும் சிறிய தட்டுகள் வைக்கப்படுவதுடன் அவரவர் உணவை அவரே பரிமாறி கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகளின் செயல்பாடு 
பெரும்பாலான ஜப்பானிய குழந்தைகள் நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகத்தான் பள்ளிக்கு செல்கின்றனர் அவர்கள் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளில் விடுவதில்லை. ஆய்வுகளின் படி 98 சதவீத குழந்தைகள் காரில் பள்ளிக்கு செல்வதில்லை. இது அதிகளவு கலோரிகளை எரிப்பதுடன் சரியான நேரத்தில் அவர்களுக்கு பசியெடுக்கும் படியும் செய்கிறது. மேலும் குழந்தைகள் அவர்களின் தினசரி உடற்பயிற்சியை ஆர்வத்துடனும் செய்கிறார்கள்.


ஒற்றுமையான வாழ்க்கை 
முறை ஜப்பானிய குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க காரணம் அவர்கள் குடும்பம் ஆரோக்கியமான உணவுகளையும், வாழ்க்கை முறையையும் ஆதரிப்பதால்தான். அவர்கள் இல்லத்தில் எப்பொழுதும் ஆரோக்கியமான உணவுகள் இருக்கும், குழந்தைகளும் உணவு தயாரிப்பில் பங்கு கொள்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடனேயே உணவு உண்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்தும் போது அது எடைஅதிகரிப்பையும், உடல் பருமனையும் குறைக்கிறது.

ஆரோக்கியமான மதிய உணவு 
ஜப்பானிய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் அவர்களின் பள்ளிக்கூடம்தான். ஜப்பானில் குழதைகளின் மத்திய உணவிற்கெனவே தனித்திட்டம் உள்ளது. தொடக்கப்பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் உள்ளூரில் விளைந்த பொருட்களை கொண்டு புதிதாக சத்தானஉணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஆரோக்கியமாக இருப்பதுடன் இந்த உணவுகள் சுவையாகவும் இருக்கும்.

உணவுக்கட்டுப்பாடு 
கடுமையான உணவுக்கட்டுப்பாடு என்பது ஜப்பானில் குழந்தைகளுக்கு ஒருபோதும் இல்லை. அவர்கள் விரும்பும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் என அனைத்திற்கும் அனுமதி உண்டு ஆனால் அளவில் அதிக அக்கறையுடன் இருப்பார்கள். ஆரோக்கியமற்ற உணவுகள் என்று வரும்போது குறைவான கட்டுப்பாடுகளை விதிப்பதுதான் ஜப்பானிய கலாச்சாரம் என்று ஜப்பான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எப்போதாவது அதிக அளவில் சாப்பிடுவதை விட அடிக்கடி குறைந்த அளவில் சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், அவர்களுக்கு ஏக்கம் ஏற்படாமலும் வைத்திருக்கும்.

தொகுப்பு 
V.Kugathasan 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News