இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Friday, May 10, 2013

குழந்தைகளுக்கு தரவேண்டிய மிகப்பெரிய சொத்து

propertyஇன்று குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்துக்கள் பற்றி அலசுவோம்.. முதலில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்களிடம் உள்ள எல்லா சொத்தும் உங்கள் குழந்தைகளுக்குத் தானா?  ஒரே ஓர் நிமிடம் சுயபரிசோதனை செய்துகொண்டு மேலும் சுவாசிக்க ஆரம்பிக்கலாமே..பொதுவாகவே இன்றைய சூழலில் பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது.

 ஏழையுடைய குழந்தை பணக்காரராக ஆசைப்பட்டாலும் ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளர்கிறது. உங்களிடம் உள்ளதைத்தான் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்றால் உங்களிடம் அதிகம் உள்ளது நம்பிக்கையா ? பயமா ? கவனித்துப் பாருங்கள் குழந்தைகள் முதலில் கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் பெற்றோர்களின் பயத்திலிருந்து உதித்த வார்த்தைகள்தான். ‘ஓடாத பாப்பா, கீழே விழுந்துடுவ” “அதெல்லாம் எடுக்காத கீழபோட்டு உடைச்சிடுவ”





நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள். நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ? பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்.

பணம் , தோற்றம், நிறம், உடல்நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் பெற்றோர்கள் தரும் சொத்துக்கள்தான். பழக்கவழக்கங்கள் பெற்றோர்களைப் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திக்கொள்கின்றன.”அது சரி” என்ற வார்த்தை என் நண்பர் அடிக்கடி பேச்சில் பயன்படுத்துவார். அவர் பையனும் பிறகு அப்படியே பேசுவதை பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் நிதானமாக எதையும் யோசித்து யோசித்துத்தான் பேசுவார். அவர் பையனும் அப்படியே.எனவே, உங்கள் பழக்கவழக்கங்கள் கூட உங்கள் சொத்துத்தான். நீங்கள் பிரித்துக் கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அப்பாவுக்கு உள்ள நல்மதிப்பு அப்படியே குழந்தைகளுக்கும் மாறுவதை கண்கூடாகவே பார்க்கலாம். 


 



பணத்தை சேமித்து வைத்து செலவழிப்பது போல உங்கள் சொற்களும் சிந்தனைகளாக குழந்தைகளால் சேமிக்கப்பட்டு பிறகு செயல்களாக செலவழிக்கப்படுகிறது. தேர்வு நேரத்தில், ‘நீயெல்லாம் எங்க ?, பாஸ் ஆகிற மாதிரியே தெரியலையே’ என்றால் பதட்டத்தையும் பயத்தையும் உங்கள் சொத்தாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ வெற்றி பெற பிறந்திருக்கிறாய் என்ற நம்பிக்கை வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்தால் அதை தன்னைப்பற்றிய உயர்வு அபிப்ராய சிந்தனைகளாக மாற்றி உங்கள் குழந்தைகள் சேமித்துக் கொள்ளும். பிறகு நம்பிக்கை யோடு செயலாற்றும். ஆக நீங்கள் தரும் பணம் மட்டு மல்ல, நீங்கள் சொல்லும் சொல்கூட சொத்துதான்.


 


 

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையே குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கத்தான் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொருளீட்டுகிற அவசரத்தில் குழந்தைகளின் நிகழ்காலத்தை மிதித்துக் கொண்டே ஓடிக்கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு சொத்து சேகரிக்க செலவிட்ட நேரத்தில் பத்தில் ஒரு சதவீதத்தை குழந்தைகளுக்கு அதை பராமரிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்க செலவிட்டிருந்தால் எல்லாக்குழந்தைகளும் வெற்றி பெறும்.



நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் உயர் லட்சியங்களே அவர்களுக்குத் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து.நம் அப்பா நமக்கு எவ்வளவு சொத்து தரப்போகிறார் என்று எந்த குழந்தையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்மோடு இன்று நேரம் செலவிடுவாரா? நம்மோடு மனம் விட்டு பேசுவாரா ? என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு பணம் சேர்க்கும் நேரத்தில் கொஞ்சத்தை அவர்கள் எதிர்பார்க்கும் நேரமாகவே கொடுங்கள்.இன்று இருபத்திநாலு மணி நேரம் என்பது உங்களிடம் இருக்கும் சொத்து. உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் சொத்து நீங்கள் பெற்ற மழலை செல்வங்களுக்குத்தானே நண்பர்களே !


 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News