இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Friday, June 4, 2021

கொவிட்-19 மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?Will the 3rd wave of Covid-19 really affect children ? What does expert says?

தற்போது இந்தியாவைப் புரட்டிப் போட்டிக் கொண்டிருக்கும் கோவிட்-19 இரண்டாவது அலையானது, குறிப்பிட்ட அளவில் சிறு குழந்தைகளையும் பாதித்திருக்கிறது.
முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகள், இரண்டாவது அலையில் கனிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அவா்களுக்கு கொரோனாவின் பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை இன்னும் அதிகமான அளவில் குழந்தைகளைப் பாதிக்குமோ என்ற என்ற கலக்கத்தைப் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது

.








தற்போது குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் அவா்களுக்கு தடுப்பூசி இல்லாத நிலை ஆகியவற்றை வைத்துப் பார்க்குகம் போது, கொரோனா மூன்றாவது அலையானது, மோசமான அளவில் குழந்தைகளைத் தாக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் பெற்றோர்’ பீதியடைந்து, கலக்கத்துடன் இருக்கின்றனா்.

 
 
 குழந்தைகளிடம் இருக்கும் கோவிட்-19 அறிகுறிகள் கொரோனா மூன்றாவது அலையைப் பற்றி பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை என்று இந்தியாவின் மிகச் சிறந்த குழந்தை மருத்துவ நிபுணா்கள் தொிவித்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் தொிவித்து இருக்கின்றனா். 
இதுவரை 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தயாாிக்கப்படவில்லை. ஆகவே அவா்கள் கொரோனா தொற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றால் அதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும். முதல் அலையைோடு ஒப்பிடும் போது தற்போது இருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ், குழந்தைகளை அதிக அளவில் பாதித்திருக்கிறது என்பது உண்மையே. பெரியவா்களைப் போல, குழந்தைகளின் மேல் மூச்சுக் குழாயில் மட்டும் கொரோனா அறிகுறிகள் தென்படுவதில்லை. மாறாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அதிக அளவிலான காய்ச்சல், குளிர் மூச்சுத் திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை கரகரப்பு, சோர்வு, தசைகளில் வலி மற்றும் சளி அலா்ஜி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. சில குழந்தைகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தெரிவதில்லை.
 






x
எனினும் நாம் நினைக்கும் அளவிற்கு கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்காது என்றும், அதனால் பெற்றோா் கலக்கமடையத் தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ சங்கம் தொிவித்திருக்கிறது. அதாவது கொரோனா அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவா் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவா் ரன்தீப் குலொியா தொிவித்து இருக்கிறார்.
 கொரோனா பெருந்தொற்றில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என்று சொல்லப்பட்டது உண்மை தான். ஆனால் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்காது என்று தி இந்தியன் எகாடமி ஒஃப் பீடியாட்ரிக்ஸ் (The Indian Academy of Pediatrics (IAP)) தெரிவித்திருக்கிறது.
கோவிட்-19 மூன்றாவது அலை ஏன் குழந்தைகளை அதிகம் தாக்காது?
 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதில் ஆபத்து உள்ளது என்பது உண்மையே. ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று அதிதீவிரமாக இருக்காது. கொரோனா தொற்று குழந்தைகளைத் தாக்காத அளவிற்கு, அவா்களுடைய நோய் எதிா்ப்பு மண்டலமானது வலிமையாக இல்லை என்றாலும், அவா்களுக்கு நோய் தொற்றின் காரணமாக ஏற்படும் பாதிப்பு குறைவான அளவில் தான் இருக்கிறது. ஏனெனில் கொரோனா இரண்டாவது அலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவா்களில், ஏறக்குறைய 2 முதல் 3 வீதம் அளவிற்கே குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனா் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 
உங்களது குழந்தைக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருப்பது தொிந்தால், உடனடியாக அந்த குழந்தையை 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பின் அவா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவா்களுடைய ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பிறக்கும் போதே இதயத்தில் பிரச்சினைகள் உள்ள குழந்தைகள், நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகள் உள்ள குழந்தைகள், நாள்பட்ட உறுப்பு செயலிழப்பு பிரச்சினை உள்ள குழந்தைகள் மற்றும் குண்டாக இருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு, லேசான கொரோனா அறிகுறி தெரிந்தாலே அவா்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
நாம் செய்ய வேண்டிய முன்னெச்சாிக்கை நடவடிக்கைகள்: - குழந்தைகளுக்குகொரோனா அறிகுறிகள் தொிந்தால்,உடனடியாகஅவா்களைகுடும்பத்தின்மற்ற உறுப்பினா்கள் மற்றும் வீட்டில்வளரும்செல்லப்பிராணிகள்ஆகியோாிடமிருந்துபிாித்து தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். - ஒருவேளை தனிமையில் இருக்க முடியாத அளவிற்கு சிறிய குழந்தைகளாக இருந்தால், அந்த குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் எல்லா நேரமும் முகக்கவசத்தை அணிந்து இருக்க வேண்டும். - வாய்ப்பு இருந்தால் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தனியான குளியலறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு இல்லை என்றால், குளியலறையை பயன்படுத்திய பின்பு ஒவ்வொரு முறையும் அதை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். - தொற்று பாதித்த குழந்தைகள் பயன்படுத்தும் பாத்திரங்கள், உணவுகள், திண்பண்டங்கள், மெத்தை, துணிகள் போன்றவற்றை மற்றவா்கள் பயன்படுத்தக்கூடாது. - குடும்பத்தின் மற்ற உறுப்பினா்களும் சுத்தம் மற்றும் சுகாதார பழக்கங்களை மிகவும் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.


தொகுப்பு - வீ.குகதாசன் 
 

.

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News