கொரோனா பெருந்தொற்று உலக மக்கள் அனைவரையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி, பயம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதோடு மூகக் கவசம் அணிதல், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்யும் சனிடைசா்கள் போன்றவற்றை தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.
கோவிட்-19 வைரஸின்
காரணமாக மேற்சொன்ன எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும், அவை
நமது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விழைவிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு
ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்காக, கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சனிடைசா்கள் நமது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கின்றன
என்று அந்த ஆய்வு தெரிவிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளின் கண்களை பாதுகாக்கும் வழிகள் - நமது குழந்தைகள் மிகவும் சிறியவா்களாக இருந்தால், நாமே அவா்களுக்கு சனிடைசா்களைக் கொடுத்து நமது முன்பாகவே அவா்களுடைய கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும். -
பொது இடங்களில் உள்ள இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் சனிடைசா்களை நமது மேற்பார்வையில் மட்டுமே நமது குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். -
சனிடைசா்களை வைத்து நமது குழந்தைகள் கைகளை சுத்தம் செய்த பிறகு மீண்டும் நீரால் கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும். - நமது குழந்தைகளுக்கு பார்வைக் கோளாறுகள் இருந்தால், அவா்களை வைத்தியரின் ஆலோசனயுடன் மூக்குக் கண்ணாடி அணியச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவா்களுடைய கண்களை சனிடைசா்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் மேலும் தோல் ஒவ்வாமை என்பன இருப்பின்; மிகவும் அவதானமாக கையாள்வதும் முடிந்தளவு சனிடைசா்களை பன்படுத்துவதை தவிர்த்தல் அல்லது குழைந்தைகளுக்கு பொருத்தமான சனிடைசா்களை பாவிப்பது சிறந்தது.
தொகுப்பு
வீ. குகதாசன்
No comments:
Post a Comment