இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Thursday, December 13, 2012

பள்ளிக் குழந்தைகளுக்காக குறைந்த விலையில் கூகுள் தயாரிக்கும் குரோம்புக் லெப்டாப்

googleகூகுள் தயாரிக்கும் குரோம்புக் என்ற லேப்டாப்பை பள்ளிக் குழந்தைகளுக்காக குறைந்த விலையில் வெளிவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை சுமார் ரூ.4500 இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.


இந்த குரோம்புக், அடிப்படையில் குறைந்த அளவிலான சிறப்பம்சம்களை மட்டுமே கொண்டிருக்கும். பள்ளிகளுக்கு மட்டும் குரோம்புக்கள் ரூ.4500க்கு கிடைக்கும். மற்றபடி இதன் சந்தை விலை மாறுபடும்.


படிப்பு சார்ந்த இந்தச் சிறப்பு சலுகை குரோம்புக் சீரிஸ் 5க்கு மட்டும் பொருந்தும். இதற்கான சந்தை விலை சுமார் ரூ.13,500 நிர்ணயிக்கப்பட்டிருக்கலாமென இணைய வல்லுனரொருவர் தெரிவித்துள்ளார். இந்த குரோம்புக்கள் சாம்சங் நிறுவனத்திடமிருந்து வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாங்கப்படுகிறது.

MIT விரிவுரையாளர் திரு.நிக்கோலஸ் நெக்ரோபோன்ட் என்பவர். “ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப்” என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். இவருடைய அறக்கட்டளையின் இலட்சியங்களும் சரியாக நிறைவேற்ற முடியவில்லை. அதாவது, ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப் தரமுடியவில்லை என்கிறார் அவர். இவருடைய XO எனப்படும் லேப்டாப்கள் தற்பொழுது விலை ரூ.10,000க்கு விற்கப்படுகின்றன.
இவர் இன்னும் லேப்டாப்களின் விலையைக் குறைக்க பல முயற்ச்சிகளையும், உதவிகளையும் நாடிவருகிறார்.
சாதனங்கள் சார்ந்த வியாபாரச்சந்தையின் முக்கியப் புள்ளிகளான இன்டெல் கார்ப், மைக்ரோசாப்ட் கார்ப், HP மற்றும் டெல் Inc போன்றவையும் தங்கள் சாதங்களின் விலையைக் குறைத்தே விற்பனை செய்யவுள்ளன. உதாரணத்திற்கு நெட்புக்.

எப்படியோ விலைகுறைந்த மற்றும் தரம் நிறைந்த லேப்டாப்கள் மக்களுக்கு கிடைக்கப்பெற்றால் நல்லதே!

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News