YMCA நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது 16.12.2012 இன்று மு.ப. 10.00 மணிக்கு YMCA மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது YMCA நிறுவனம் சமூக மட்டத்தில் இருக்கின்ற நிறுவனங்களை குறிப்பாக சிறுவர்களுடன் பணியாற்றுகின்ற கிராமிய சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழு , சிறுவர் கழகங்கள் ஆகிய வற்றை பலப்படுத்தும் திட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தனது ஒன்று கூடல் நிகழ்வினை பல அரச உயர் அதிகாரிகளையும் இணைத்து நடாத்தியிருந்தது. இதில் உளவளத்துணை உதவியாளர்கள், கிராம மட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு உள நல வைத்திய நிபுணர் டாக்டர் கடம்பநாதன் அவர்களும், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு எஸ். அருள்மொழி அவர்களும், உளவியலாளர் திரு ஸ்டான்லி பிரபா அவர்களும், மண்முனை வடக்கு சிறுவர் உரிமை மேம்பட்டு உத்தியோகத்தர் திரு வீ. குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு தொடர்பாக பலரும் கருத்து வெளியிட்டனர். இதில் உள வைத்திய நிபுணர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில். மனிதர்களின் மனதை அறியும் வேலை என்பது மிகவும் சந்தோசமானது எனவும். அதற்கு நாம் பக்குவப்பட வேண்டும் எனவும், சமூகத்தில்தற்போது உதவுவது என்கின்ற விடயம் அருகிப் போயுள்ளது எனவும், அவ்வாறான் விடயங்களே எமது கலாச்சாரத்தில் பல பிரச்சனைகை தீர்த்திருக்கின்றது. ஆனால் நாம் இன்று அதனை மறந்துபோயுள்ளோம். அதனை சமூகத்தின் மத்தியிலே இன்று ஏற்படுத்த வேண்டியிள்ளது எனவும், சிறுவர்களுடன் பணியாற்றும் போது அவர்களை அவர்களின் சூழ்நிலையில் விளங்கிக்கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டு செயற்படுவது சிறந்த்தது எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
No comments:
Post a Comment