மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் - அரசாங்க அதிபர் திருமதி P . S . M . சாள்ஸ் அவர்களின் தலைமையில் 14.03.2013 பி ப. 2.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட சிறுவர் நலன்புரி பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றப் போக்குகளையும், அபிவிருத்தி திட்டங்களை வகுப்பதிலும், அமைச்சு மட்டத்திற்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைகளை மேட்கொள்வதிலும், அரசசார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவிற்கு பெரும் பொறுப்புண்டு இந்த வகையிலேயே இன்றைய இக்கொட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வகையில் இக்கூட்டத்திற்கு மட்/போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மனநல வைத்திய நிபுணர், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட மட்ட சிறுவர் நலன்புரி உத்தியோகத்தர்க போலீஸ் உயரதிகாரிகள், சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன் சிறுவர் பாதுகாப்பு அல்லது அவர்களது நலன்புரி தொடர்பில் பணியாற்றுவது என்பது அவர்களது பிரச்சனைகளை உணர்வு பூர்வமாக உணர்ந்து அதனை முழுமையாக விளங்கிக்கொண்டு சேவையாற்ற வேண்டும் எனவும் அவர்கள் மீது அரச அதிகாரிகள் என்ற வகையில் எஜமானத்தனத்தை காட்டக்கூடாது என்று அவர் திடமாக கூறினார். மக்கள் தங்கள் குறைகளை அரசனக்திடம் சொல்வதும் அவர்களுக்கா நாம் கடமையாற்றுவதும் எமது பொறுப்பு காரணம் அவர்களது வரிப்பணத்திலேயே நாம் சம்பளம் பெறுகின்றோம் என்பதனை நாம் மறந்து விடக்கூடது எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அத்தோடு மாவட்ட மட்ட முன்பில்லி அபிவிருத்தி இணைப்பாளர் திரு முரளிதரன் அவர்கள் தமது திணைகள் பனி தொடர்பாக சமர்ப்பணம் ஒன்றை செய்தார். தொடர்ந்து திரு V . குகத்சான் அவர்கள் 2012ஆம் ஆண்டுக்குரிய சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்களது வேலை முன்னேற்றம் குறித்து சமர்ப்பணம் ஒன்றை செய்தார். அத்துடன் திருமதி நிஷா அவர்களும் மாவட்டத்தின் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான சமர்ப்பணம் ஒன்றை செய்தார். தொடர்ந்து நன்னடத்தி பொறுப்பதிகாரிகளின் சமர்ப்பங்களும், க்ளலந்துரயாடல்களும் இடம்பெற்றதுடன், கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்கள் தமது கல்வி வலயத்தினுள் டியூஷன் நிலையங்கள் நடப்பதனை தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment