கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கான தேசத்துக்கு மகுடம் பயிற்சிப்பட்டறையானது அர்த்தமுள்ள சிறுவர் பங்களிப்பு என்னும் தலைப்பில் கொலோம்போ தளஹென வில் உள்ள சமுதாய கல்வி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வான 18.03.2013 தொடக்கம் 21.03.2013 வரை வதிவிடப்பயிட்சியாக இடம்பெற்றது.
இதனை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவை த்தினைக்களமும் , plan srilanka நிறுவனமும் இணைந்து நடாத்தின. கிழக்கு மாகாணத்தில் உள்ள 33 சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களில் சுமார் 23 பேர் கலந்து கொண்டனர்.நிகழ்வினை த்கினைக்கள ஆணையாளர் திருமதி யமுனா பெரேரா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்தது சிறுவர்களுடன் பணியாற்றும் போது சிறுவர்களின் பங்குபற்றுதலை எவ்வாறான் நுட்பங்களில் அவர்களது பங்களிப்பை ஆக்கபூர்வமானதாக மாற்றியமௌஇக்க முடியும் என்னும் வகையில் பங்களிப்பு என்றல் என்ன, அதற்கு தடையாக உள்ள காரணிகள், உரிமைகளில் குறிப்பாக CRC இல் அவர்களுக்கான பங்களிப்புக்கான உறுப்புரைகள் எவை உள்ளன, சிறுவர் உரிமை சமவாயத்தின டிப்படைத் தத்துவங்க 04 மற்றும் முக்கிய பகுதிகள் , அரசு CRC கைச்சாத்திட்டு ஏற்றுக்கொண்டதன் பின்னர் கிர்க் குழுவிற்கு அறிக்கை செய்தல், CRC குழுவினால் வழங்கப்பட்ட பொதுக் கருத்துக்கள்( General Comments ) போன்ற முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடல்கள், குழுவேலை, சமர்ப்பண்ம் மூலமாக் இடம்பெற்றதுடன். இவ்விடயங்கள் தொடர்பில் ஒவ்வொரு உத்தியோகத்தரிடமும் 03 மாத காலத்துக்குரிய செயற்றிட்டம் ஓன்று தயாரிக்கப்பட்டு பிளான் ஸ்ரிலங்கவிடமும் , திணைக்களத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment